ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை அதிகமாக உண்ணும் இந்தியர்கள் : ஸ்விகி ஆய்வில் தகவல்

ஐந்து ஆண்டுகளில் ஸ்விகி பெண்களோடு சேர்த்து 2 லட்சம் டெலிவரி பாய்களையும், 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆர்டகளை பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Web Desk | news18
Updated: August 8, 2019, 5:48 PM IST
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை அதிகமாக உண்ணும் இந்தியர்கள் : ஸ்விகி ஆய்வில் தகவல்
உணவு
Web Desk | news18
Updated: August 8, 2019, 5:48 PM IST
உடல் எடை அதிகரிக்கிறதே என வருத்தப்படும் அதேவேளையில் உணவைக் கண்டதும் ஆர்ப்பரிக்கும் மனது இங்கு ஏராளம்.  அதை இந்த ஸ்விகி ஆய்வும் நிரூபித்துள்ளது.

இந்தியர்கள் பிரியாணிக்கு அடிமை என சொல்லுவதை விட பெருத்திருக்கும் கடைகளே சாட்சி. பிரியாணிக்கும் இணையாக ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் விற்பனையில் அதிகரித்துள்ளது. அதாவது ஃபாஸ்ட் ஃபுட் உணவால்தான் உடல் எடை அதிகரிக்கிறது என சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியர்கள் அதிகமாக ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளையே ஆர்டர் செய்துள்ளனர்.

2014 ஆண்டு தொடங்கப்பட்டு 290 நகரங்களில் சேவையைக் கொண்டிருக்கும் ஸ்விகி சப்வே, டாமினோஸ் பீட்ஸா, மெக்டோனட்ஸ் மற்றும் பர்கர் கிங் போன்ற கடைகளின் ஆர்டர்கள்தான் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது.
அதேபோல் ஆய்வின் படி 43 நிமிடத்திற்கு ஒரு முறை பிரியாணி ஆர்டர்கள் வருவதாகவும் அதேசமயம் டெசர்ட் வகைகளில் குலாப் ஜாமுனும் அதற்கு அடுத்து ரஸ்மலாயும் இருப்பதாகக் கூறியுள்ளது.

இந்த தகவலில் மற்றொரு ஆச்சரியம் என்னவெனில் காஃபி, டீ ஆர்டர்களும் ஸ்விகியில் குவிந்துள்ளன. அதுமட்டுமன்றி சைவ உண்வுகளுக்கான மவுசு அதிகமாகவும் , அதேசமயம் அதற்கான ஹோட்டல் பற்றாக்குறைகள் இந்தியாவில் இருப்பதையும் கண்டறிய முடிகிறது என ஸ்விகி தெரிவித்துள்ளது.

Loading...இதனால் அசைவ உணவுகளை விரைந்து கொடுப்பதிலும் சைவத்தில் சற்று தாமதமாவதையும்  புரிய வைக்கிறது. ஒருவேலை சைவ உண்வாகங்களில் ஆர்டர்கள் இருந்தாலும் இரண்டு ஆர்டர்களுக்கு மேல் எடுத்துக்கொள்வதில்லை என்கிறது.

இந்த ஐந்து ஆண்டுகளில் ஸ்விகி பெண்களோடு சேர்த்து 2 லட்சம் டெலிவரி பாய்களையும், 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆர்டகளை பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...