உலகக் கோப்பைத் தொடரின்போது இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகள் என்னென்ன தெரியுமா?

சென்னையில் ஒருவர் தாகத்தை தீர்த்துக்கொள்ள தண்ணீர் பாட்டில் மட்டும் ஆர்டர் செய்தது குறிப்பிடத்தக்கது

உலகக் கோப்பைத் தொடரின்போது இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகள் என்னென்ன தெரியுமா?
ஆன்லைன் ஃபுட் ஆப்
  • News18
  • Last Updated: July 13, 2019, 4:32 PM IST
  • Share this:
உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் இந்தியா பெரும் தோல்வியைச் சந்தித்ததில் அனைவரும் தீராத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இருப்பினும் இந்திய அணி விளையாடிய ஒவ்வொரு மேட்சுகளுக்கும் நேரில் செல்லாத இந்திய ரசிகர்கள் வீட்டில் டி.வி முன் அமர்ந்து உற்சாகம் அளித்து வந்தனர்.

அப்போது தனித் தனியாகவோ, குழுக்களாகவோ குடும்பங்களாகவும், நண்பர்களாகவும் இணைந்து மேட்சுகளை ரசித்துள்ளனர். இந்த வாய்ப்பை தனதாக்க நினைத்த ஆன்லைன் ஃபுட் டெலிவரி ஆப்புகள் ஒவ்வொரு இடைவெளியிலும் தனது விளம்பரத்தை காண்பித்துக் கொண்டே இருந்தது. இதனால் அவர்களின் சந்தை நோக்கம் அதிக அளவில் வெற்றிப் பெற்றது என்றே சொல்லலாம்.
அதன்படி, மேட்ச் தொடங்கிய மே 30 முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை இந்தியர்கள் எந்த உணவுகளையெல்லாம் அதிகமாக விரும்பி தேர்வு செய்தது என ’உபர் ஈட்ஸ்’ நிறுவனம் பட்டியலை உருவாக்கியுள்ளது.
அதில் அதிகமாக பிரெட் வகைகளும் மேட்ச் டென்ஷனைக் குறைக்க குளுமையான உணவுகளும்தான் ஆர்டர் செய்துள்ளனர்.

குறிப்பாக முக்கியமான அணிகளுடன் இந்திய அணி மோதியபோது, காரசாரமான உணவுகளைதான் அதிகமாக சுவைக்க விரும்பியுள்ளனர். பாகிஸ்தான், இந்திய அணி மோதிய போது சீஸ் பர்கர்ஸ், பீட்ஸா போன்ற ரொட்டி வகை உணவுகளை அதிகமாக ஆர்டர் செய்துள்ளனர். அதேபோல் இந்த மேட்ச் சீசன் போதுதான் சென்னை, பெங்களூர், புனே வழக்கத்தைக் காட்டிலும் அதிக ஆர்டர்கள் குவிந்ததாகக் கூறியுள்ளது. இதில் டாப் லிஸ்டில் டெல்லி, ஜெய்பூர், கொல்கத்தா, லக்னோ போன்றவை இடம் பெற்றுள்ளன. இந்த பகுதிகளில் பிரெட் வகைகளும், சமோசாவும்தான் அதிகமாக ஆர்டர் செய்துள்ளனர். நாக்பூரில்தான் அதிக சமோசா ஆர்டர்கள் குவிந்துள்ளன.

மத்திய பிரதேசம் இந்தூரில் மட்டும் ஒரே ஒருவர், இரவில் 233 உணவுகள் ஒரே நேரத்தில் ஆர்டர் செய்துள்ளனர். அதில் பனீர் பிரியாணி, சிக்கன் பிரியாணி, கஜ்ஜூ பிரியாணி என ஆர்டர் செய்துள்ளனர். இதுதான் ஒரு நாளில் ஒரு நபர் அளித்த பெரிய ஆர்டர் எனக் கூறியுள்ளது. அதேசமையம் அதே இந்தூரில் தவா ரொட்டி 13 ரூபாய்க்கு என குறைந்த விலையிலும் ஆர்டர் வந்துள்ளது. சென்னையில்  ஒருவர் தாகத்தை தீர்த்துக்கொள்ள தண்ணீர் பாட்டில் மட்டும் ஆர்டர் செய்தது குறிப்பிடத்தக்கது என்று கூறியுள்ளது.
டெசர்ட் வகைகளில் ஐஸ் க்ரீம், குலாப் ஜாமுன், கேக் அதிகமாக ஆர்டர்கள் வந்துள்ளன.

இவ்வளவு ஆர்டர்களுக்கு மத்தியில் ஒரு வாடிக்கையாளர் ”இந்தியா உலகக் கோப்பையை இழந்து விட்டது. நான் பெரும் சோகத்தில் இருக்கிறேன். தயவு செய்து 500 ரூபாயும், ஒரு குலாப் ஜாமுனும் அனுப்பி விடுங்கள்” என்று கேட்டுள்ளார். இந்த மாதிரி தனித்துவமான ஆர்டர்களையும் சந்தித்துள்ளது ஆன்லைன் ஃபுட் நிறுவனம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்