புளி இல்லாமல் ரசம் வைக்க முடியுமா...? இதைப்படிச்சு தெரிஞ்சுக்கோங்க...!

எப்படிபட்ட உணவை ருசித்தாலும் இறுதியாக கொஞ்சம் ரசம் ஊற்றி சாப்பிட்டால்தான் வயிறும் , மனமும் நிறைவடையும்.

news18
Updated: July 13, 2019, 12:16 PM IST
புளி இல்லாமல் ரசம் வைக்க முடியுமா...? இதைப்படிச்சு தெரிஞ்சுக்கோங்க...!
புளியில்லா ரசம்
news18
Updated: July 13, 2019, 12:16 PM IST
ரசம் இந்திய இல்லங்களின் பிரதான குழம்பு. எப்படிபட்ட உணவை ருசித்தாலும் இறுதியாக கொஞ்சம் ரசம் ஊற்றி சாப்பிட்டால்தான் வயிறும், மனமும் நிறைவடையும். ரசத்திற்கு முக்கிய மூலப் பொருள் புளி. ஆனால் அந்த புளியே இல்லாமல் ரசம் வைக்க முடியும். எவ்வாறு என்பதை நீங்களே படியுங்கள்.

தேவையான பொருட்கள் 

துவரம் பருப்பு - 1/2 கப்


தக்காளி - 4
மிளகு - 1 tsp
சீரகம் - 1 tsp

Loading...

பூண்டு - 6
மஞ்சள் - 1/2 tsp
கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத் தூள் - 1/2 tsp
காய்ந்த மிளகாய் - 2
கடுகு - 1 tsp
பச்சை மிளகாய் - 1
உப்பு - தேவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவைக்கு ஏற்பசெய்முறை

துவரம் பருப்பை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றுங்கள். அதோடு தக்காளியை முழுதாக அப்படியே போட்டுங்கள். 3 விசில் அதிக தீயிலும் அடுத்த 3 விசில் குறைந்த தீயிலும் வந்ததும் இறக்கிவிடவும்.

இறக்கியதும் விசிலில் பிரெஷர் நீங்கியதும் குக்கரைத் திறந்து தக்காளியைத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பருப்பை மட்டும் நன்கு மசித்துக்கொள்ளவும். அதில் உப்பு சேர்த்துக் கொள்ளவும். அடுத்ததாக தக்களியை மசித்துக்கொள்ளவும். அதை பருப்போடு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.

அடுத்ததாக மிளகு, சீரகம் மற்றும் கொத்தமல்லி காம்புகளை நன்கு இடித்துக்கொள்ளவும். அதோடு பூண்டும் சேர்த்துக்கொள்ளவும்.

பிறகு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம், உளுந்து , காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் , சீரகம் என அடுத்தடுத்து சேர்த்து தாளிக்கவும்.

அடுத்ததாக இடித்த மிளகு சீரகத்தை சேர்த்து வதக்கவும். தற்போது கரைத்து வைத்துள்ள பருப்பைக் கொட்டிக் கலக்கவும்.

நன்குக் கொதித்ததும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி தழையைத் தூவவும்.

அவ்வளவே... சுவையான புளி... இல்லா பருப்பு ரசம் தயார்..!
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...