சுவையான இஃப்தார் ரெசிபி: வீட்டிலேயே செய்யலாம்!

இஃப்தார் உணவு உண்பவர்களுக்கு சமையல் வல்லுனரான முகம்மது அனாஸ் குரேஷி, வீட்டிலேயே தயார் செய்யும் 3 வகையான ரெசிபிக்களை கொடுத்துள்ளார்.

Vaijayanthi S | news18
Updated: May 10, 2019, 3:01 PM IST
சுவையான இஃப்தார் ரெசிபி: வீட்டிலேயே செய்யலாம்!
இஃப்தார்
Vaijayanthi S | news18
Updated: May 10, 2019, 3:01 PM IST
மே மாதம் 7-ம் தேதி ரம்லான் நோன்பு தொடங்கியது. இந்த ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் காலையில் நோன்பு தொடங்கி மாலையில் முடிப்பது வழக்கம். அவ்வாறு முடிக்கும்போது, இஃப்தார் உணவு உண்டு முடிப்பார்கள்.

இஃப்தார் உணவு உண்பவர்களுக்கு சமையல் வல்லுனரான முகம்மது அனாஸ் குரேஷி, வீட்டிலேயே தயார் செய்யும் 3 வகையான ரெசிபிக்களை கொடுத்துள்ளார்.

ஃபால்ஸா சர்பத்:


தேவையான பொருட்கள்:

ஃபால்ஸா-250 கிராம்
சர்க்கரை - 2 டீஸ்பூன்

Loading...

லெமன் - 2
புதினா இலைகள் - 8-10
ஐஸ் க்யூப்ஸ் - 6-7

ஃபால்ஸா சர்பத்


செய்முறை: சர்க்கரை, எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதனை ஒன்றாக சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். அதன் பின்பு ஒரு கண்ணாடி டம்ளரில் ஐஸ் க்யூப்ஸ், புதினா இலைகள் மற்றும் ஒரு சிறிய துண்டு எலுமிச்சை பழம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன் ஃபால்ஸா-வை நன்றாக கலக்க வேண்டும். அந்த சர்பத்தின் மேலே குளிர்ந்த நீரை ஊற்றி சில ஐஸ் கட்டிகளை போட வேண்டும். இப்போது கலர் ஃபுல்லான ஃபால்ஸா சர்பத் ரெடி.

கீமா சமோசா
தேவையான பொருட்கள்:
சிறு துண்டுகளாக நறுக்கிய மட்டன் - 500 கிராம்
இஞ்சி - சிறிதளவு
கரம் மசாலா பொடி - 1 1/2 TSP
புதினா இலைகள் - சிறிதளவு
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - அரை கப்
மைதா மாவு - 300 கிராம்
பூண்டு - 3 பற்கள்
கொத்தமல்லி - சிறிதளவு
வெங்காயம் - 1
தயிர் - 1 TSP
உப்பு - 1 TS

செய்முறை: பாத்திரத்தில் மைதாவை கொட்டி அதில் உப்பு சேர்த்து சிறிதளவு நீர் ஊற்றி நன்கு பிசைந்துகொள்ள வேண்டும். 5 நிமிடம் கழித்து சிறு பந்து போல் உருட்டிக்கொள்ள வேண்டும். அதை சப்பாத்தி போல் திரட்டி தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும். இது முற்றிலும் சப்பாத்தி செய்வது போல்தான். ரொட்டிகளை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

கீமா சமோசா


அதன் பின்னர் மட்டனை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்ததாக இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கியதும், மட்டனை சேர்த்துக்கொள்ளவும். தேவையான அளவு உப்பும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் கரம் மசாலா, தயிர், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக சுட்டு வைத்துள்ள சப்பாத்திகளை கோன் போல் சுருட்டி அதில் மட்டன் கீமா மசாலவை சேர்த்துக்கொள்ளவும். தற்போது சமோசாவிலுள்ள ஸ்டஃப் வெளியே வராதவாறு அதை இணைக்க முனைகளில் தண்ணீர் தொட்டுத் தடவி மூடி அழுத்தி விட்டு எண்ணெய்யில் வறுத்தேடுக்கவும். சுவையான மட்டன் கீமா சமோசா தயார்.

சிக்கன் ஷாமி கபாப்

தேவையான பொருட்கள்:

சன்னா டால் - 1 கப் (வெள்ளை சுண்டல்)
சிக்கன் - 500 கிராம்
உப்பு - 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் பொடி- 1 டீஸ்பூன்
உலர் சிவப்பு மிளகாய் - 7 துண்டுகள்
கொத்தமல்லி - 2 தேக்கரண்டி
கிராம்பு - 7
கருப்பு மிளகு - 10
சிறிய இலவங்கப்பட்டை - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
முட்டை - 6
கொத்தமல்லி இலைகள் (வெட்டப்பட்டது) - அரை கப்
புதினா இலைகள் (பருப்பு) - 1/2 கப்
பச்சை மிளகாய் - 6
இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பூண்டு - 10
எண்ணெய் - தேவையான அளவு

சிக்கன் ஷாமி கபாப்


செய்முறை: சன்னா எனப்படும் வெள்ளை சுண்டலையும் சிக்கனையும் நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அது சூடு குறைந்தவுடன் நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். அத்துடன் 3 முட்டைகளையும் உடைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது சன்னா சுண்டல், கொத்தமல்லி இலை, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.

இந்தக் கலவைகளை நன்றாக பிசைந்து வட்ட வடிவில் பிடித்துக்கொள்ள வேண்டும். அதனை கடாயில் போடும் போது மீதமுள்ள 3 முட்டைகளையும் எண்ணெய்யுடன் சேர்த்து, தடவி வறுத்தெடுக்க வேண்டும். இப்போது சிக்கன் ஷாமி கபாப் ரெடி. புதினா சட்னி மற்றும் புளி சட்னியுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.
First published: May 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...