கோடிக் கணக்கானோர் பார்த்து ரசித்த பூண்டு உரிக்கும் வீடியோ... அப்படி என்னதான் ஸ்பெஷல்?

பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்..!

news18
Updated: June 20, 2019, 4:21 PM IST
கோடிக் கணக்கானோர் பார்த்து ரசித்த பூண்டு உரிக்கும் வீடியோ... அப்படி என்னதான் ஸ்பெஷல்?
பூண்டு
news18
Updated: June 20, 2019, 4:21 PM IST
சமையல் செய்யும் போது பொறுமை அவசியம் என்பார்கள். அதுவும் அவசர அவசரமாக சமையல் செய்யவேண்டிய சூழ்நிலையில் இருக்கும்போது ஒரு கூடை பூண்டைக் கையில் கொடுத்து உரிக்க வேண்டும் என்றால் என்ன ஆகும்! அதுவும் உங்கள் கையில் நகங்கள் இல்லையெனில்?

ரொம்ப யோசிக்காதீங்க... இந்த வீடியோவைப் பாருங்கள்.
ட்விட்டரில் '@VPestilenZ' என்னும் பெயர் கொண்ட ஒருவர் பூண்டை எப்படி சுலபமாக உரிப்பது என்று வீடியோ ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவின் கேப்ஷனில் கொரியன் உணவைப் பலரும் முயற்சி செய்கின்றனர். அவர்களுக்கு இந்த பூண்டு உறிக்கும் வீடியோ உதவும் என்று எழுதியிருந்தார். கொரிய உணவுகளில் பூண்டு அதிகமாகப் பயன்படுத்தப்படுவதாலேயே இந்த கேப்ஷனை எழுதியிருக்கிறார்.அந்த வீடியோவில் கத்தியின் கூர்முனையைப் பூண்டில் குத்தி பதமாக நீக்குகிறார். பின் பூண்டு தோல் மட்டும் நீங்கி பூண்டை உரித்தவாறு வெளியே எடுக்கிறார். கை நகங்களைப் பயன்படுத்தாமல் மிகச் சுலபமாக ஒரு முழு பூண்டையே ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் உரித்து முடிக்கிறார்.

இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்டதிலிருந்து சுமார் 2.1 கோடி மக்களுக்கு மேல் பார்த்து ரசித்துள்ளனர். லட்சக் கணக்கிலான கமெண்டுகளும் ஷேர்களும் பதிவாகியுள்ளன. அமெரிக்கா வரை பரவி பிரபல செஃப் க்ரிஸ்டின் டெய்கனே (Christine Teigen) அந்த வீடியோவை ஆச்சரியத்துடன் ஷேர் செய்திருக்கிறார்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...