ஓட்ஸ் பிரியர்களுக்கான காலை உணவு... எளிதில் சமைக்கலாம் ஓட்ஸ் ஆம்லெட்...!

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துகொள்ள நினைப்போருக்கு இது சரியான காலை உணவு.

news18
Updated: June 6, 2019, 1:25 PM IST
ஓட்ஸ் பிரியர்களுக்கான காலை உணவு... எளிதில் சமைக்கலாம் ஓட்ஸ் ஆம்லெட்...!
ஓட்ஸ் ஆம்லெட்
news18
Updated: June 6, 2019, 1:25 PM IST
ஓட்ஸ் மற்றும் முட்டை இரண்டுமே அதிக ஊட்டச்சத்துகளைக் கொண்டவை. 100 கிராம் ஒட்ஸில் வெறும் 68 கலோரிகள் மட்டுமே உள்ளன. ஆனால் ஊட்டச் சத்துகளோ 2.4 கிராம் உள்ளன.

விட்டமின்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம் என உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சத்துகள் இதில் அடங்கியுள்ளன. அதேபோல்தான் முட்டையும் பல ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது. இதைவிட சிறந்த காலை உணவு வேண்டுமா ?

தேவையான பொருட்கள்


ஓட்ஸ் - அரை கப்
முட்டை - 4
பால் - அரை கப்

Loading...

வெங்காயம் - 2
தக்காளி - 1
கேரட் - 1
குடை மிளகாய் - 1
பூண்டு - 5-6
பச்சை மிளகாய் - 2
மிளகுத் தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - அரை ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு



செய்முறை :

ஓட்ஸை மிக்ஸியில் பவுடராக மைய அரைத்துக்கொள்ளவும்.

அந்த பவுடரில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

தற்போது தவாவில் வெண்ணெய் விட்டு சீராகத் தேய்க்கவும்.
கலக்கிய ஓட்ஸ் கலவையை தோசை போல் தவாவில் ஊற்றித் தேய்க்கவும். தேவைப்பட்டால் சுற்றிலும் எண்ணெய் விடவும். டயட் இருப்போர் ஆலிவ் எண்ணெய் ஊற்றலாம்.

சுவையான ஓட்ஸ் ஆம்ப்லேட் தயார். இதை அப்படியேவும் சாப்பிடலாம் அல்லது டொமேட்டோ சாஸ் தொட்டுக்கொள்ளலாம்.




லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: June 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...