உடல் எடையைக் குறைக்க உதவும் பாகற்காய் ஜூஸ்... நன்மைகள் என்னென்ன?

பாகற்காயில் குறைவான கலோரிகளே இருப்பதால் யார் வேண்டுமானாலும் தாராளமாக சாப்பிடலாம்.

news18
Updated: May 23, 2019, 7:12 AM IST
உடல் எடையைக் குறைக்க உதவும் பாகற்காய் ஜூஸ்... நன்மைகள் என்னென்ன?
பாகற்காய் ஜூஸ்
news18
Updated: May 23, 2019, 7:12 AM IST
பாகற்காய் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். அது முழுக்க முழுக்க உடல் நலனுக்காகவே விளையும் காய் வகையைச் சேர்ந்தது. அதன் நன்மை அறிந்த பலரும் வாரம் ஒரு முறையேனும் பாகற்காய் உட்கொள்கின்றனர்.

பாகற்காயில் இருக்கும் இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் C , நார்ச்சத்து போன்ற உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும். இதனால் தேவையில்லாத கெட்ட கொழுப்புகளும் நீங்குவதால் உடல் எடை தானாகக் கரைகிறது. குறைவான கலோரியையும் கொண்டதால் தாராளமாக பாகற்காய் சாப்பிடலாம். உதாரணமாக 100 கிராம் பாகற்காய் ஜூஸில் 34 கலோரிகளே இருக்கின்றன.

இதில் நிறைந்துள்ள நார்ச்சத்தும் ஜீரண சக்தியை அதிகரிப்பதால், உணவில் இருக்கும் சத்துகளைப் பிரித்துக் கொடுக்கும். தேவையில்லாத கொழுப்பும் வெளியேற்றப்படும். எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், தினம் பாகற்காய் ஜூஸ் அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

பாகற்காய் ஜூஸ் தயார் செய்யும் முறை

Loading...தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 1
எலுமிச்சை - 1/2 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்

செய்முறை : பாகற்காயில் உள்ள விதை மற்றும் வெள்ளை சதையை நீக்கிவிட்டு 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பின் சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் மைய அரைக்கவும். தண்ணீர் தேவைக்கு பாகற்காய் ஊற வைத்த நீரைப் பயன்படுத்தலாம். அதோடு எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து மைய அரைத்து வடிகட்டினால் பாகற்காய் ஜூஸ் ரெடி.
First published: May 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...