புத்துணர்ச்சி ஊட்டும் கேரள புட்டு...கடலை கறி, தேங்காய் பால் சேர்த்தால் ஆஹா என்ன ருசி! சுவையான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ரெடி!

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் கேரளா புட்டை கடலை கறி மற்றும் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி உண்ணுவர்.

புத்துணர்ச்சி ஊட்டும் கேரள புட்டு...கடலை கறி, தேங்காய் பால் சேர்த்தால் ஆஹா என்ன ருசி! சுவையான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ரெடி!
புத்துணர்ச்சி ஊட்டும் கேரளா புட்டு
 • Share this:
கேரளா புட்டு செய்ய தேவையான பொருட்கள்:

 • பச்சரிசி - 1 கிலோ • தேங்காய் துருவல் - 1 தேங்காய்

 • உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

 • முதலில் பச்சரிசியை 5 மணி நேரம் ஊறவைத்து நன்கு கழுவ வேண்டும்.

 • பின்னர் ஒரு துணியில் 20 முதல் 25 நிமிடங்களுக்கு உலர விடவும்.

 • லேசான ஈரப்பதம் இருக்கும் பொழுது மாவு மில்லில் கொடுத்து புட்டரிசி போல் நன்கு உடைத்து கொள்ளவும்

 • பின்னர் உடைந்த புட்டரிசியை ஒரு கடாயில் மெல்லிய தீயில் லேசாக வறுத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

 • இந்த மாவில் இரண்டு கப் எடுத்து கொண்டு அதில் உப்பு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து 15 நிமிடங்கள் வைக்கவும்.

 • பிறகு புட்டு குழாயில் ஒரு பங்கு புட்டு மாவு, தேங்காய் துருவல் மறுபடியும் புட்டு மாவு வைத்து 5 நிமிடம் வேகவைக்க வேண்டும்.

 • இதற்கு கடலை கறி மற்றும் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி உண்ணுவர்.

First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading