வெயிலுக்கு ஏத்த வெள்ளரி சாதம்...தயார் செய்வது எப்படி!

வெயிலுக்கு ஏற்ற வெள்ளரி சாதம் எவ்வாறு செய்யலாம் என்பதை இதில் காணலாம்

வெயிலுக்கு ஏத்த வெள்ளரி சாதம்...தயார் செய்வது எப்படி!
வெயிலுக்கு ஏற்ற வெள்ளரி சாதம்... தயார் செய்வது எப்படி!
 • Share this:
வெள்ளரி சாதம் செய்யத் தேவையான பொருட்கள்:

 • பச்சரிசி - 1 கப் • வெள்ளரி துருவல் - 1/2 கப்

 • பச்சை மிளகாய் - 4

 • பெருங்காயத்தூள் - சிறிதளவு
 • உப்பு - தேவையான அளவு

 • இஞ்சி - ஒரு துண்டு

 • கருவேப்பிலை - சிறிதளவு

 • கடுகு - 1/2 தேக்கரண்டி

 • எலுமிச்சம் பழச்சாறு - ஒரு மேசை கரண்டி

 • மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

 • உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

 • நெய் - தேவையான அளவு


செய்முறை:

 • முதலில் அரிசியை உப்பு சேர்த்து உதிரியாக இருக்கும் படி வடித்து கொள்ளவும்.

 • பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

 • பின்னர் நெய்யை காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து, வெள்ளரி துருவலையும் உப்பையும் சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின்னர் இறக்கவும்.

 • இறக்கிய பின்னர் சாதம் கலந்து எலுமிச்சை பழச் சாறு சேர்த்து கிளறி பரிமாறினால் சுவையான வெள்ளரி சாதம் சட்டென ரெடி!

First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading