கொரோனா வைரஸின் 2ம் அலை பாதிப்பு தணிந்து வரும் நிலையில், கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. தமிழ் நாடு - கேரள எல்லையான செறுவாரக்கோணத்தை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த ஜூன் 7ம் தேதி குழந்தை பிறந்த நிலையில், ஜூன் 28ம் தேதி அவருக்கு ஜிகா வைரசுக்கான அறிகுறிகள் தென்பட்டன. மொத்தம் 1 9 பேருக்கு அறிகுறிகள் ஏற்பட்டதால், அவர்களது சளி, ரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், அண்மையில் குழந்தை பெற்றெடுத்த பெண் உட்பட 15 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஏ.டி.எஸ் வகை கொசுக்கள் மூலமாகவே ஜிகா வைரஸ் பரவுகிறது. அதிகாலை, பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில் இந்த கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் என்றும்,இந்த கொசுக்கள் டெங்கு, சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சலை பரப்பும் தன்மை கொண்டவை எனவும், உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
Also Read : தடுப்பூசி எப்படி தயாரிக்கப்படுகிறது?
கர்ப்பிணிகள் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டால், கருவும் பாதிக்கப்படும் என்றும், இதனால் கருச்சிதைவு மற்றும் குறை பிரசவம் ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள் வரை உடலில் இருக்கும் என தெரிவிக்கும் மருத்துவர்கள், 2 முதல் 7வது நாளில் அறிகுறிகள் தென்படும் எனவும் கூறியுள்ளனர்.
ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், காய்ச்சல்,தலைவலி, தோலில் நமைச்சல், மூட்டுகளில் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நோய்க்கென பிரத்யேக சிகிச்சை, தடுப்பூசிகள் இல்லை என தெரிவிக்கும் மருத்துவ நிபுணர்கள், கொசுக்கள் கடிக்கமால் பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகள், குழந்தைகள் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Also Read : டெல்டா வேரியண்ட் அறிகுறிகள் vs அசல் கோவிட் அறிகுறிகள்- வேறுபாடுகள் என்ன?
தமிழ் நாடு எல்லையில் ஜிகா வைரஸ் தென்பட்டுள்ளதால், குமரி மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே, சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஜிகா வைரஸ் குறித்து தமிழ்நாட்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை என கூறினார். கேரளாவில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது சேயும் தற்போது நலமுடன் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kerala, Zika Virus