பருவமழை காலத்தில் டெங்கு, மலேரியா ஏற்படாமல் தடுப்பது எப்படி?

சர்வதேச கொசுக்கள் தினம் இன்று

மனித வரலாற்றில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செழித்து வளர்ந்த ஒரே ஒரு வேட்டையாடும் இனம் என்றால் அது கொசுக்கள் தான்.

  • Share this:
கொசுக்களால் ஏற்படும் நோய் மற்றும் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20ம் தேதி உலக கொசுக்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. முதன் முதலில் பெண் கொசுக்கும் மலேரியாவிற்கும் இடையிலான தொடர்பைக் கண்டுபிடித்த சர் ரொனால்ட் ரோஸ் என்பவரின் நினைவாக இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இவர் மலேரியா நோய் குறித்த கண்டுபிடிப்புகள் மூலம் மருத்துவ வரலாற்றின் போக்கை மாற்றியவர்.

மனித வரலாற்றில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செழித்து வளர்ந்த ஒரே ஒரு வேட்டையாடும் இனம் என்றால் அது கொசுக்கள் தான். கொசுக்கள் பல்வேறு திசையன் (vector-borne) மூலம் பரவும் நோய்களை கொண்டு வருகிறது. குறிப்பாக கொசுக்கள் மலேரியா மூலம் இறப்பையும் அழிவையும் கொண்டு வருகிறது. உலகின் கொடிய விலங்குகளின் கணக்கெடுப்பின்படி, கொசுக்கள் வியக்கத்தக்க வகையில் முதலிடத்தில் உள்ளன.

இந்த தினம் தோற்றுவிக்கப்பட்டதற்கான முக்கியத்துவமும் வரலாறும் :

1930-களில் இருந்து, லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் பிரிட்டிஷ் மருத்துவர் சர் ரொனால்டின் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மனிதர்கள், மலேரியா மற்றும் கொசுக்களுக்கிடையேயான தொடர்பைக் கண்டறிந்ததைக் கொண்டாட இந்த நாள் தோற்றுவிக்கப்பட்டது. அதிலும் மலேரியா போன்ற கொடிய நோய்க்கான காரணத்தை கண்டறிந்த நிகழ்வு, சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் இதன் மூலம் மனிதர்கள் பாதுகாக்கப்படுவதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

1897 ஆம் ஆண்டில், மலேரியா ஒட்டுண்ணியை மனிதர்களில் பரப்ப பெண் கொசுக்கள், அதாவது பெண் அனோபிலஸ் கொசுக்கள் காரணம் என்பதை சர் ரொனால்ட் கண்டுபிடித்தார். அன்றைய காலத்தில் இது ஒருவரை கொல்லக்கூடிய ஒரு கொடிய நோயாக இருந்தது. மிக சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மலேரியாவால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 435,000 க்கும் அதிகமானோர் இறக்கின்றனர். அது மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 219 மில்லியன் மக்களை மலேரியா பாதித்து வருவதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆபத்து இல்லாத இடங்களில் வசிப்பவர்களுக்கு, பிரச்சினையின் தீவிரம் மிக விரைவில் தெரியாது.

Also Read : தினமும் காலை எழுந்ததும் நீங்கள்  தவறாமல் செய்ய வேண்டிய 6 விஷயங்கள்…

மலேரியா காய்ச்சல் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது பெரும்பாலும் உலகெங்கிலும் உள்ள வெப்பமண்டல இடங்களை பாதிக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அனோஃபெலஸ் மற்றும் ஏடிஸ் போன்ற பல கொசு இனங்களுக்கு இந்தியா சாதகமான இனப்பெருக்க இடமாக இருப்பதால், மஞ்சள் காமாலை, டெங்கு, மலேரியா மற்றும் பல நோய்களுக்கு ஒரு முக்கிய இடமாக இந்தியா விளங்குகிறது.

இந்த நிலையில் உலக கொசுக்கள் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் மலேரியா காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதை எவ்வாறு தடுப்பது என்பது பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பது மிகவும் முக்கியம். அத்துடன் மலேரியா சிகிச்சை ஆராய்ச்சிக்கு நிதி திரட்டுவதையும் இந்த தினம் நோக்கமாக கொண்டுள்ளது.

மலேரியா, டெங்கு நோய்க்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்:

இந்த நோய் வராமல் இருக்க சிறந்த வழி கொசுக் கடியில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதுதான். கொசுக்களின் எண்ணிக்கையை முன்கூட்டியே கண்டறிவதற்கும் பொருத்தமான கட்டுப்பாட்டு உத்திகளை செயல்படுத்துவதற்கும் திசையன் (vector-borne) கண்காணிப்பு முக்கியமானது. இதுதவிர குட்டைகள், தண்ணீர் பாத்திரங்கள் மற்றும் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுப் பெருக்கத்தைத் தடுக்க, தண்ணீர் தேங்காமல் அதனை மணல் போட்டு மூட வேண்டும்.

அதேபோல பாத்திரங்களில் இருக்கும் தண்ணீரை மூடி வைக்க வேண்டும். மழைநீரை சேகரிக்கும் திறந்த இடங்களில் தேவையில்லாத பொருள்கள் அகற்றப்பட வேண்டும். போதுமான வடிகால் இல்லாத அடைப்புகள் மற்றும் தட்டையான கூரைகளை தவறாமல் சரிபார்த்து சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர் அல்லாத நீர் தொட்டிகள் அல்லது வீட்டை சுற்றியுள்ள குளங்களில் லார்விவோரஸ் மீன்களை விடுவதன் மூலமும் கொசு பெருகுவதை தடுக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: