World Milk Day 2021: இந்த நாள் தோன்றியதற்கான வரலாறு, முக்கியத்துவம்!

மாதிரி படம்

தினமும் ஒரு நபருக்கு 300 கிராமுக்கும் அதிகமான பால் கிடைப்பதை இந்தியா உறுதி செய்து வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் ஆரோக்கியமான மற்றும் சீரான வாழ்க்கை வாழ பால் அத்தியாவசியமானதாக இருக்கிறது. மேலும் வருடாந்திர "உலக பால் தினம்" அனுசரிக்கப்படுவதன் மூலம் பாலின் முக்கியத்துவத்தை உலகெங்கிலும் பரப்ப ஒரு வாய்ப்பாக அமையும் என்று பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில், 150 மில்லியன் டன்களுக்கும் அதிகமான உற்பத்தியை மேற்கொள்ளும் உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளர்களில் ஒன்றாக இந்தியா மாறிவிட்டது. தினமும் ஒரு நபருக்கு 300 கிராமுக்கும் அதிகமான பால் கிடைப்பதை இந்தியா உறுதி செய்து வருகிறது. உலக பால் தினம் உலகம் முழுவதும் எப்போது கொண்டாடப்படுகிறது. இதன் முக்கியத்துவம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

உலக பால் தின வரலாறு:

கடந்த 2001 ஆம் ஆண்டில் தான் உலக பால் தினத்தை ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) அறிமுகப்படுத்தியது. உலகளாவிய உணவாக பாலின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்கும், பால் துறையை கொண்டாடுவதற்கும், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி அன்று இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

உலக பால் தினத்தின் முக்கியத்துவம்

இந்த நாளில், பால் மற்றும் பால் பொருட்களை உட்கொள்வதன் மூலம் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து உலகெங்கிலும் தீவிரமாக ஊக்குவிக்கப்படுகின்றன. இதில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரத்தை பால் எவ்வாறு ஆதரிக்கிறது என்பதும் உள்ளடங்கும்.

பால் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு பயனளிப்பது மட்டுமல்லாமல், உலக உணவு முறையின் ஒரு முக்கிய அங்கமாக பால் துறை உள்ளது. இது உலகெங்கிலும் உள்ள பலருக்கு பொருளாதார, ஊட்டச்சத்து மற்றும் சமூக நலன்களை வழங்குகிறது. இந்தியா ஒரு விவசாய தேசமாக இருப்பதால், பால் நாட்டின் பிரதான உணவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு வீட்டு சமயலறையிலும் பாலைப் பயன்படுத்தும் முறை மாறுபடுகிறது. ஆனால் இது ஓவ்வொரு நாளும் குறைந்தது ஒரு உணவின் முக்கிய பகுதியாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

2021 ஆம் ஆண்டிற்கான பால் தின கருப்பொருள் என்ன?

இந்த ஆண்டு, உலக பால் தினத்திற்கான கருப்பொருள் "பால் துறையின் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல், ஊட்டச்சத்து மற்றும் சமூக-பொருளாதாரத்தை மேம்படுத்துவது" குறித்து கவனம் செலுத்தும். பால் வளர்ப்புக்கு குறைந்த கார்பன் எதிர்காலத்தை உருவாக்க உதவுவதன் மூலம் பால் விவசாயத்தை மீண்டும் உலகிற்கு அறிமுகப்படுத்துவதையும் இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவறாமல் உணவில் சேர்ப்பது குறித்து ஒவ்வொரு ஆண்டும் மேலும் விழிப்புணர்வை பரப்புவதை இந்த ஆண்டிற்கான குறிக்கோள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த தினம் உலகம் முழுவதும் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

கொரோனா தொற்றுநோய் காரணமாக, எந்தவொரு பெரிய நிகழ்வுகளும் இந்த ஆண்டு கொண்டப்படுவதில்லை. இருப்பினும், உலகளாவிய பால் தளத்தால் பல பிரச்சாரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த கொண்டாட்டங்கள் மே 29 - 31ம் தேதிகளில் நடைபெறவுள்ள 'பால் மகிழ்ச்சி பேரணியுடன்' தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Also read... மீன் கடையில் இருந்த அரிய வகை நண்டு - கடல்வாழ் உயிரினத்துறையிடம் ஒப்படைத்த சமையல் கலைஞர்!

கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில், 'பால்' கொள்முதல் செய்வது போன்ற அடிப்படை வசதிகளை அணுக முடியாமல் இருப்பவர்களுக்கு பால் பாக்கெட்டுகளை நன்கொடையாக அளிப்பதன் மூலமும் நாம் அனைவரும் இந்த நாளை கொண்டாட முடியும்.

பால் குடிப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் எவ்வாறு மேம்படுகிறது?

பால் என்பது ஒரு ஊட்டச்சத்து நிறைந்த திரவமாகும். இதனை பாலூட்டி உயிரினங்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவாக அளிக்கின்றன. பொதுவாக மனிதர்கள் அருந்தும் பால் வகைகள் மாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் ஆடுகளிலிருந்து கிடைக்கின்றன. இந்த நிலையில் பால் குடிப்பதன் 4 ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

1. ஊட்டச்சத்து நிறைந்தவை: பால் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும்.

2. தரமான புரதம்: பால் ஒரு புரதச்சத்து நிறைந்த மூலமாகும். ஒரு கப் பாலில் 8 கிராம் புரதம் நிறைந்திருக்கிறது. உடலின் சரியான செயல்பாட்டிற்கு புரதம் மிக முக்கியமானது. ஏனெனில் இது வளர்ச்சி மற்றும் பராமரிப்பு, செல்லுலார் பழுது மற்றும் நோயெதிர்ப்பு மண்டல ஒழுங்குமுறை ஆகியவற்றிற்கு உதவுகிறது.

3. எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்: பால் குடிப்பது ஆரோக்கியமான எலும்புகளை பலப்படுத்துகிறது. இது கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களின் சக்திவாய்ந்த கலவையாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் வலுவான, ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க பால் மிக அவசியம்.

4. பல்துறை மூலப்பொருள்: பால் என்பது உங்கள் உணவில் எளிதில் சேர்க்கக்கூடிய பல்துறை மூலப்பொருள் ஆகும். ஸ்மூத்திஸ், ஓட்ஸ், காபி, சூப்கள் உள்ளிட்டவற்றில் இதனை பயன்படுத்தலாம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: