Home /News /explainers /

இன்று உலக சிங்கங்கள் தினம்: அழிவின் விளிம்பில் இருக்கும் வனராஜாக்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாள்!

இன்று உலக சிங்கங்கள் தினம்: அழிவின் விளிம்பில் இருக்கும் வனராஜாக்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாள்!

கோப்பு படம்

கோப்பு படம்

இயற்கையின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) சிவப்பு பட்டியலில் சிங்க இனங்கள் ஆபத்தான உயிரினங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலக சிங்கங்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வன விலங்குகளின் வாழ்வாதாரம் குறித்து குறைந்து வரும் விழிப்புணர்வு மற்றும் சிங்கங்களின் குறைந்து வரும் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்கான ஆதரவை சேகரிக்கும் நோக்கில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

தற்போது, ​ இயற்கையின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) சிவப்பு பட்டியலில் சிங்க இனங்கள் ஆபத்தான உயிரினங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன. ஆசிய சிங்கமானது இந்தியாவில் காணப்படும் ஐந்து பெரிய பூனைகளில் ஒன்றாகும். மற்ற நான்கு விலங்குகளில் ராயல் பெங்கால் புலி, இந்திய சிறுத்தை, மேக சிறுத்தை மற்றும் பனிச்சிறுத்தை ஆகியவை அடங்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் குஜராத் அரசால் நடத்தப்பட்ட கம்பீரமான தோற்றமுடைய சிங்கங்களின் கணக்கெடுப்பின்படி, அவற்றின் எண்ணிக்கையில் சிறிது உயர்வைக் காட்டியது. 2015 ஆம் ஆண்டில் 523-ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை 2020 ல் 674 ஆக உயர்ந்தது. சிங்கங்களின் எண்ணிக்கையில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 29 சதவிகித அதிகரிப்பைப் பதிவு செய்தது. அவற்றின் வாழ்விடம் 2015 இல் 22,000 சதுர கிலோமீட்டரில் இருந்து 2020 இல் 30,000 சதுர கிமீ வரை விரிவடைந்துள்ளது.

உலக சிங்கங்கள் தோன்றிய தினத்தின் வரலாறு:

சிங்கங்கள் மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா முழுவதும் சுதந்திரமாக சுற்றி வந்திருந்தாலும் கூட, கடந்த 100 ஆண்டுகளில் சுமார் 80 சதவிகித விலங்குகள் மறைந்துவிட்டன. சிங்கங்கள் தற்போது 25 ஆப்பிரிக்க நாடுகளிலும் ஒரு ஆசிய நாட்டிலும் வாழ்ந்து வருகின்றன. மேலும் சமீபத்திய கணக்கெடுப்பின்படி அவற்றின் எண்ணிக்கை ஏறக்குறைய 30,000 இலிருந்து 20,000 ஆக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் காணப்படும் ஆசிய சிங்கங்கள் பெரும்பாலும் தடைசெய்யப்பட்ட கிர் காடு, தேசிய பூங்கா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன. இருப்பினும், கடந்த காலங்களில், சிங்கங்கள் மேற்கில் சிந்து முதல் கிழக்கில் பீகார் வரை இந்தோ-கங்கை சமவெளியில் உலா வந்ததாக கூறப்படுகிறது. பல ஓவியங்கள், இலக்கியங்கள் மற்றும் சிங்க வேட்டையின் பதிவுகள் மூலம் அவை இந்திய புராணங்களின் ஒரு பகுதி என்பது தெளிவாக தெரியும்.

மேலும் தேசிய சின்னமாக விளங்கும் சிங்கம், நம் கலாச்சார அடையாளத்தின் ஒரு பகுதி என்பதை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது மட்டுமே சிங்கங்கள் பெரிய அளவில் வேட்டையாடப்பட்டன. இதனால் அவற்றின் எண்ணிக்கை அவற்றின் அசல் வரம்பில் இருந்து குறைந்துவிட்டது. இதையடுத்து சிங்கங்கள் வேட்டையாடப்படுவதை தவிர்ப்பதற்கும் அவற்றின் வாழ்விடங்களை பெருக்குவதற்கும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தின் முக்கியத்துவம்:

சிங்கங்கள் அவற்றின் வாழ்விடத்தில் உள்ள மற்ற விலங்குகளை வேட்டையாடுவதன் மூலமும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்வதன் மூலமும் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்க உதவி புரிகின்றன. சிங்கங்கள் தங்கள் இரையின் மக்கள்தொகையை அதாவது மான் போன்ற விலங்கின கூட்டங்களை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கின்றன. ஏனெனில் அவை மந்தையில் பலவீனமான உறுப்பினர்களை இலக்காகக் கொண்டு தாக்குகின்றன. அவற்றின் பாதுகாப்பு இயற்கை வனப்பகுதிகள் மற்றும் வாழ்விடங்களை பாதுகாக்க உதவுகிறது மற்றும் இதையொட்டி, பல்லுயிர் மேலாண்மைக்கு உதவுகிறது.

Also read... ஹிரோஷிமா தினம் அனுசரிக்கப்படுவதற்கான காரணமும், வரலாறும்!

இந்திய அரசு ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் காட்டு ராஜாவை பாதுகாக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் வனப்பகுதி குறைதல் மற்றும் அழிந்து வரும் இயற்கை வாழ்விடங்கள் ஆகியவற்றால் அவை மனித வாழ்விடங்களை நெருங்குகின்றன. ஏனெனில் அவர்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை விட்டு இரையையும் நிலப்பகுதியையும் தேடத் தொடங்கியுள்ளதால் இப்போது மனித வசிப்பிடங்களில் நுழைகின்றன. இந்த பிரம்மாண்டமான வேட்டையாடும் இனம் பாதுகாக்கப்படாவிட்டால், பிற உயிரினங்களும் மற்றும் இப்பகுதியின் ஒன்றோடொன்று தொடர்புடைய சுற்றுச்சூழல் அமைப்புகளும் பாதிக்கப்படும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Lion

அடுத்த செய்தி