World Elephant Day 2021: தந்தங்களுக்காக அழிக்கப்பட்டு வரும் மாபெரும் உயிரினம்!

யானைகள்

2012ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி அன்று தான் முதன் முதலில் உலக யானைகள் தினம் அனுசரிக்கப்பட்டது.

 • Share this:
  ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. நமது சுற்றுச்சூழல் அமைப்பில் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சர்வதேச தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவற்றின் பாதுகாப்பு மற்றும் வாழ்விடம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதிலும் இந்த நாள் கவனம் செலுத்துகிறது. முன்பு இருந்தது போல யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக எந்த ஒரு செய்திகளும் வரவில்லை என்றாலும், வேட்டையாடுதல், வாழ்விட அழிப்பு, சிறைபிடிப்பது, தவறாக நடத்துவது போன்ற விஷயங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் யானைகள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன.

  உலக யானைகள் தினத்தின் வரலாறு:

  2012ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி அன்று தான் முதன் முதலில் உலக யானைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. தாய்லாந்தை தளமாகக் கொண்ட யானை மறு அறிமுகம் அறக்கட்டளை, கனேடிய திரைப்பட தயாரிப்பாளர் பாட்ரிசியா சிம்ஸுடன் இணைந்து சர்வதேச யானைகள் தின நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. அந்த நாளில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகளின் அவலநிலை மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு முதல், சிம்ஸ் உலக யானைகள் தினத்தை முன்னெடுத்து நடத்தி வருகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அவரது தொண்டு நிறுவனமான உலக யானைகள் சங்கம், பல ஆண்டுகளாக ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதுடன், யானை பாதுகாப்புக்காக சர்வதேச அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த சங்கம் 100 யானைகள் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதனுடன், உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் இந்த நாளின் நோக்கம் குறித்து தனிநபர்களுக்கும், அமைப்புககளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

  யானைகள் தினம் கொண்டாடுவதன் முக்கியத்துவம்:

  WWF-இன் (World Wide Fund for Nature) சமீபத்திய தரவுகளின்படி, உலகம் முழுவதும் சுமார் 4,40,000 யானைகள் உள்ளன. அதேபோல, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 யானைகள் வேட்டையாடுபவர்களால் வேட்டையாடப்படுவதையும் WWF தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. எனவே அவற்றின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை எடுப்பது மட்டுமல்லாமல், சாத்தியமான ‘யானை அழிவு’ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நமது பொறுப்பாகும்.

  Also read... உலக யானைகள் நாள்; ’தாமதம் என்றாலும் பரவாயில்லை’ யானைகளை பாதுகாக்க 5 வழிகள்!

  இந்தியாவில், யானைகள் கலாச்சாரம் மற்றும் மதம் சார்ந்த சின்னங்களாக இருந்தபோதிலும், போதுமான வாழ்விட வசதி இல்லாமல் அவை மோசமாக நடத்தப்படுகின்றன. வேட்டையாடுதல், மின்கசிவு, ரயில் விபத்துகள் மற்றும் விஷம் போன்ற விஷயங்களால் பல யானைகள் இதுவரை பலியாகியுள்ளன. இயற்கையின் உலகளாவிய நிதியத்தின் படி, காட்டு ஆசிய யானைகளின் எண்ணிக்கை 50,000-க்கும் குறைவாக உள்ளது என தெரிவித்துள்ளது. அதாவது அதன் வரலாற்று சராசரி எண்ணைக்கையில் 15% மட்டுமே தற்போது உள்ளது. காட்டு ஆசிய யானைகள் அதிகபடியாக இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன.

  உலக யானை தினத்தின் கருப்பொருள்:

  இந்த ஆண்டு உலக யானை தினத்திற்கான கருப்பொருள் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், கடந்த ஆண்டு இது 'ஹாத்தி ஹமாரா சாத்தி' என்று அறிவிக்கப்பட்டது.
  Published by:Vinothini Aandisamy
  First published: