Environment: வறட்சி மற்றும் பாலைவனமாக்கலை எதிர்க்கும் சர்வதேச நாள் 2021!

மாதிரி படம்

தற்போதைய சூழ்நிலையில் நான்கில் ஒரு பகுதி நிலங்கள் மட்டுமே பயன்படுத்தாமல் இருக்கின்றன. தொழிற்சாலைகள், வீடுகள், சாலைகள் என மக்களின் அன்றாட பயன்பாட்டுக்காக இயற்கை நிலங்கள் பயன்படுத்தபடுகின்றன.

  • Share this:
காலநிலை மாற்றம் மனித சமூகத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், இயற்கை மாசுபாட்டை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் இருக்கின்றன. சுற்றுச்சூழல் மாசு உணவு முதல் மனித வாழ்வியல் வரை அனைத்து காரணிகளிலும் ஒட்டுமொத்தமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதனை சரிசெய்ய வேண்டுமானால் வளமான நில அமைப்புகளை அதிகமாக உருவாக்க வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டுக்கான வறட்சி மற்றும் பாலைவனமாக்கலை எதிர்த்து போராடும் சர்வதேச நாளான ஜூன 17 ஆம் தேதி, மீட்டுருவாக்கம், நிலம் மீட்பு ஆகிய மூன்று மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நில மீட்டுருவாக்கத்தின் நன்மைகள்:

தற்போதைய சூழ்நிலையில் நான்கில் ஒரு பகுதி நிலங்கள் மட்டுமே பயன்படுத்தாமல் இருக்கின்றன. தொழிற்சாலைகள், வீடுகள், சாலைகள் என மக்களின் அன்றாட பயன்பாட்டுக்காக இயற்கை நிலங்கள் பயன்படுத்தபடுகின்றன. எஞ்சியிருக்கிற நிலங்கள் மட்டுமே விவசாயம் செய்வதற்காக அல்லது காலியாக இருக்கின்றன. நிலங்கள் மீட்டுருவாக்கம் செய்வது என்பது காலியாக உள்ள நிலங்களை வளம் பொருந்திய நிலங்களாக மாற்றுவதாகவும். இதன்மூலம், பொருளாதாரம், கல்வி, உணவு பொருட்கள் உற்பத்தி, வருவாய் அதிகரிப்பு என பல வாய்ப்புகள் உள்ளன. இயற்கை பேரிடர்களில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அல்லது மனிதர்கள் பிரச்சனைகளின்றி வாழ வேண்டும் என விரும்பினால் நிலங்களை மீட்டுருவாக்கம் செய்வதில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவசாயங்களுக்கு நிலங்களை பயன்படுத்தும்போது எத்தகைய பக்கவிளைவுகள் ஏற்படாது என தெரிவித்துள்ள ஐ.நா, வீடு அல்லது தொழிற்சாலை பயன்பாடுகளுக்காக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படும்போது உணவு, வருவாய், இயற்கை சமநிலை, மனிதர்களின் வாழ்வியல் என அனைத்தும் பாதிப்பதாக விளக்கம் அளித்துள்ளது. நிலங்களை பாதுகாக்கவும், மீட்டுருவாக்கம் செய்யவும் அனைவரும் உழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

நில மீட்டுருவாக்கத்தில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய நிலங்கள்:

1. மண் அரிப்பு மற்றும் பிற வகையான நில சீரழிவைத் தடுக்க நிலம் மற்றும் நீர் மேலாண்மை முறையை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் உள்ளது.

2. பாலைவனமாக்குதலைத் தவிர்ப்பதற்கு, காற்று மற்றும் நீர் மாசுபடுவதை தவிர்ப்பதற்கும், மண அரிப்பை தடுக்கவும், அதிகளவு தாவரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும்.

Also read... Whale: பொம்மைக்கு முத்தம் கொடுத்த திமிங்கலம்... வைரல் வீடியோ!

3. மேய்ச்சல் நிலங்களை விவசாயத்துடன் ஒருங்கிணைப்பது மூலம் ஊட்டசத்துகளை மறுசுழற்சி செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

4. உலர் நிலங்கள் அல்லது பயன்பாட்டில் இல்லாத நிலங்களை நவீன தொழில்நுட்ப கருவிகள் மற்றும் புதிய விவசாய முறைகளை பயன்படுத்தி சீர்படுத்தலாம்.

5. நீர் மறு சுழற்சி முறையை ஊக்கப்படுத்த வேண்டும். மறுசுழற்சி செய்த நீரை விவசாய நிலங்கள் மற்றும் தாவரங்கள் வளர்ப்புக்கு பயன்படுத்தலாம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: