மருத்துவ உலகில் தொழில்நுட்பப் பயன்பாடு பல்வேறு அதிசயங்களை செய்து வருகிறது. அவற்றில் முக்கியமானது டெக்னிக் 3D பிரின்ட் உடல் உறுப்புகள் மற்றும் பாகங்கள். புத்தகங்கள் மற்றும் ஆய்வுகள் என்ற அளவிலேயே இருந்த இந்த தொழில்நுட்பம், தற்போது புதிய சாதனையை உருவாக்கியுள்ளது. தொடர்ந்து முன்னேறி வரும் மெடிக்கல்-டெக்னாலஜி துறையில் 3D பிரிண்ட் டெக்னிக் பயன்படுத்தி செயற்கை கண்களை உருவாக்கும் முயற்சியில் ஏற்கனவே வெற்றியை கண்ட மருத்துவ உலகம் தற்போது மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது. ஒரு பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட செல்களில் இருந்து தயாரிக்கப்பட்ட 3D ப்ரின்ட் காதுகள் தற்போது இயற்கையான வடிவத்தில் மாறி வருகிறது!
3D பிரின்ட் செய்யப்பட்ட காதுகள் இம்ப்ளான்ட் பொருத்தப்பட்ட பெண் பிறப்பு முதலே வலது காது செயல்படவில்லை. இதற்குக் காரணமாக, மைக்ரோதியா என்ற ஒரு மரபணு நோயை மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த பெண்ணுக்கு செயற்கை காதுகளைப் பொருத்துவதற்கான கிளினிக்கல் டிரையலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் மருத்துவர்கள் மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து தற்போது 3d இம்ப்ளான்ட் பொருத்தப்பட்டுள்ளது.
3D உறுப்புகளை உற்பத்தி செய்யும் raw materialகளில், அமெரிக்க நிறுவனம், உறுப்பு தேவைப்படும் பெண்ணின் செல்களை பயன்படுத்தியுள்ளது. 20 வயது இளம் பெண்ணுக்கு, அவருடைய உடலின் செல்களை வைத்து உருவாக்கப்பட்ட 3d பிரின்ட் செய்யப்பட்ட காது இம்ப்ளான்ட் செய்யப்பட்டது. இம்ப்ளான்ட் செய்த பின்பு அவ்வபோது நடந்த மருத்துவ சோதனையில், அப்பெண்ணின் காது சரியாக வளர்ந்து வருவதாகவும், சிகிச்சை முடிந்த பின்னர் அவரின் உடல் நலம் விரைவில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
Also Read : 'குரங்கு அம்மை' என்று அழைக்க காரணம் என்ன? அதிகரிக்கும் புது வைரஸ்!
ஜூன் மாதம் 2 ஆம் தேதி செய்யப்பட்ட இந்த டிரான்ஸ்பிளான்ட் பற்றிய தகவலை கார்னீஜ் மெலனில் பணியாற்றும் பயோ-மெடிக்கல் என்ஜினியரிங் ஆய்வாளரான ஆடம் ஃபீன்பெர்க் தெரிவித்தள்ளார். இம்ப்ளான்ட் பொருத்தப்பட்ட பின்பு பல விதமான கோளாறுகள், அறுவை சிகிச்சை சார்ந்த் பிரச்சனைகள் ஏற்படலாம்.
முதல் முறையாக ஒரு நபரின் லைவ் செல்களைப் பயன்படுத்தி, உயிருடன் இருக்கும் ஒரு நபரின் உடலில் இந்த 3D இம்ப்ளான்ட் பொருத்தப்பட்டுள்ளது என்பது மருத்துவ உலகில் மிகபெரிய சாதனையாக கருதப்படுகிறது.
பல ஃபெடரல் நிறுவனங்களும் இந்த செயல்முறை பற்றி ஆய்வு செய்து வரும் நிலையில், அறுவை சிகிச்சை மற்றும் எவ்வாறு செயற்கை காது இயற்கையான வடிவில் மாறுகிறது என்பது பற்றிய கூடுதல் தகவல் வெளியாகவில்லை. இந்த முயற்சி வெற்றிபெற்று விட்டால், லட்சக்கணக்கான நோயாளிகள் செயற்கை பாகங்கள் மற்றும் உறுப்புகள் மூலம் பயன்பெறலாம்.
இந்த புதிய டெக்னாலஜி உத்தரவாதமான சான்றுகளை வழங்கினால், இது நீண்ட காலமாக உறுப்பு டிரான்ஸ்பிளான்ட்டிற்கு காத்திருக்கும் நோயாளிகளின் பட்டியலில் இருப்பவர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.