மனிதர்களை போல கடல்வாழ் விலங்குகளும் மனஅழுத்தத்தை அனுபவிக்கிறதா? என்ன சொல்கிறது ஆய்வு..

கடல் வாழ் உயிரினங்கள்

நம்மை போல கடல் வாழ் விலங்குகளும் மன அழுத்தத்தை அனுபவிக்கிறதா என்பதை அறிய விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை தொடங்கியுள்ளனர்.

  • Share this:
கொரோனா வைரஸ் தொற்றுநோய் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நம்மில் நிறைய மன அழுத்தத்தைத் தூண்டியுள்ளது. தொற்று பாதித்தவர்கள், தொற்று பாதிக்காதவர்கள் என அனைவரும் கட்டாய தனிமை, பயம் அல்லது வேலை இழப்பு ஆகிய கவலைகளால் அதீத மனஅழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இவை அனைத்தும் ஒருவரின் ஆரோக்கியத்தில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் விஞ்ஞானிகள் மற்ற உயிரினங்களைப் படிப்பதன் மூலம் நம்மை உடல் ரீதியாக பாதிக்கும் மன அழுத்தத்தை அடையாளம் காணத் தொடங்கியுள்ளனர்.

இந்த ஆராய்ச்சிக்கு ஆய்வக எலிகள் மட்டுமல்ல, திமிங்கலங்கள், இகுவான்கள், மீன்கள் என பல விலங்குகள் உட்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஆராய்ச்சி ஏற்கனவே அந்த உயிரினங்களில் நடத்தப்படும் வேட்டையாடுதல், சிறைப்பிடிப்பு, மாசுபாடு மற்றும் நீருக்கடியில் சத்தம் போன்ற தீங்குகளை பற்றி சில புரிதல்களை உருவாக்கியுள்ளது. இதுவே நாம் ஒருவருக்கொருவர் சுமத்தும் தீங்குகளைப் புரிந்துகொள்ளவும் உதவக்கூடும்.

பல தசாப்தங்களுக்கு முன்னர், விஞ்ஞானிகள் கேள்விக்குரிய ஒரு கதையை நிறுவினர். அதில் அதிக மன அழுத்தத்தை “வகை A” ஆளுமைகளுடன் தொடர்புபடுத்தினர். இந்த அடித்தள ஆராய்ச்சியின் பெரும்பகுதி முதன்மையாக புகையிலைத் துறையால் நிதியளிக்கப்பட்டது. 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் புகைப்படிப்பதால் ஏற்படும் நோய்களின் அதிகரிப்புக்கு இணையாக அமெரிக்காவில் இதய நோய் கடுமையாக உயர்ந்து கொண்டிருந்த நேரத்தில் அந்த ஆராய்ச்சி வெளிவந்தது.

டொபாக்கோ அமைப்பால் நிதியளிக்கப்பட்ட இந்த ஆராய்ச்சியில், மக்களைக் கொல்வது புகைப்பழக்கம் மட்டும் அல்ல, அதோடு சேர்ந்து பிஸியான நவீன வாழ்க்கை முறை, வகை A ஆளுமைகள் மற்றும் நடத்தை ஆகியவற்றுடன் இணைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் அவை முதலில் நம்பகமானதாக இல்லை. பின்னர் மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட ஆய்வுகள் இதய நோய் மற்றும் வகை A நடத்தை அல்லது ஆளுமைகளுக்கு இடையிலான இணைப்பை ஆதரித்தன.

Also Read : உசேன் போல்டுக்கு ட்வின்ஸ் -வைரலாகும் ஃபேமிலி போட்டோ ஷூட்

ஆனால், இதில் மேலும் எதோ ஒரு மதிப்புமிக்க மற்றொரு விஷயம் இருப்பதாக மற்ற ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக சந்தேகித்து வருகின்றனர். இதுகுறித்து டஃப்ட்ஸ் பல்கலைக்கழக உயிரியலாளர் மைக்கேல் ரோமெரோ கூறுகையில், “மன அழுத்தத்தை வரையறுப்பது மிகவும் கடினம். மன அழுத்தம் எப்படி உருவாகிறது என மக்கள் பல ஆண்டுகளாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதாவது இது ஒரு stressor என்று அழைக்கப்படும் ஒரு தீங்கு விளைவிக்கும் தூண்டுதலுக்கு பதிலளிக்கும் விதமாக உடலை இயக்குகிறது. மேலும் stressor என்றால் என்ன? இது ஒரு மன அழுத்த பதிலை இயக்கும் ஒரு உணர்வு ” என்று அவர் கூறினார்.

அவர் தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஆர்க்டிக்கிற்குச் சென்றபோது ஒரு மன அழுத்தம் குறித்து ஒரு நுண்ணறிவு இருந்ததாக அவர் கூறியுள்ளார். ஈரமான, குளிர்ந்த மற்றும் மன அழுத்தத்துடன் கூடிய இடமாக இருந்ததால் அப்பகுதி அவருக்கு மன அழுத்தமாக இருந்தது. ஆனால் அப்பகுதியில் வாழ்ந்த பூர்வீக விலங்குகளுக்கு அல்ல. அவைகள் அந்த சூழலில் வாழ கற்றுக்கொண்டது.

Also Read : ரூ 22,000 சம்பளம்.. அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை.. விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே..

சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர் கலபகோஸில் கடலில் இகுவான்களைப் பற்றி ஆராய்ச்சி நடத்தினார். அவற்றில் ஒரு குழு மட்டும் ஒரு பயங்கரமான எண்ணெய் கசிவிலிருந்து தப்பித்து இருந்தது. ஆனால் அதில் அதிக அழுத்த ஹார்மோன்கள் உள்ள விலங்குகள் சில மாதங்களுக்குப் பிறகு இறப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருந்தது. அதேபோல மீன்கள் குறித்த மற்றொரு ஆய்வில், சுரங்கக் கசிவின் கீழ்நோக்கி வசிக்கும் மீன்கள் மன அழுத்தத்துடன் தொடர்புடைய ஹார்மோன் மாற்றங்களைக் காட்டியதாக தெரியவந்தது.

அவருக்கு பிடித்த மன அழுத்த ஆராய்ச்சி நுட்பத்தில், விஞ்ஞானிகள் கிழக்கு வலது திமிங்கலங்களில் அழுத்த ஹார்மோன் அளவை அளவிட்டனர். அதில் மன அழுத்த ஹார்மோன்கள் இருந்தன. அந்த ஆய்வுகள் சத்தம் மற்றும் மீன்பிடி கோடுகள் மன அழுத்தத்தை அவற்றிற்கு உருவாகியுள்ளன. ஆனால் சில காலங்களுக்கு பிறகு, கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக குறைந்துவிட்ட நாட்களில் திமிங்கலங்களின் மன அழுத்த அளவு சரிந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

Also Read : 30 வயதை கடந்த பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இவைதான்..!

பொதுவாக மன அழுத்த ஹார்மோன்கள் ஒரு பரிணாம வர்த்தகத்தை குறிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கார்டிசோல் என்ற ஹார்மோனைக் கட்டுப்படுத்தும் சிக்கல்களுடன் மன அழுத்தம் தொடர்பான பெரும்பாலான நோய்கள் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இது அழற்சி எதிர்ப்புப் பொருள். ஆனால் அழற்சி எதிர்ப்பு பொருட்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் அடக்குகின்றன. எனவே நீண்டகால கார்டிசோல் ஏற்றத்தாழ்வு ஒரு விலங்கை வைரஸ்கள், பாக்டீரியாக்கள் அல்லது ஒட்டுண்ணிகள் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்பட அனுமதிக்கும். எனவே, அவற்றை மனிதர்கள் துன்புறுத்தாமல் இருப்பது அவை மிகவும் பாதுகாப்பாக இருக்க உதவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: