Explainer: காலநிலை மாற்றத்தால் இன்னும் 30 ஆண்டுக்குள் வரப்போகும் அரிசி பற்றாக்குறை - ஆய்வில் வெளியான தகவல்!

மாதிரி படம்

வடகிழக்கு இந்தியாவின் பீகாரில் உள்ள தெற்காசியாவிற்கான போர்லாக் இன்ஸ்டிடியூட்டின் பண்ணையில் நெல் தோட்டங்கள் குறித்து இந்த ஆராய்ச்சி கவனம் செலுத்தியது.

  • News18
  • Last Updated :
  • Share this:
30 ஆண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் அரிசி உணவை நம்மால் சாப்பிட முடியுமா? நெல் மகசூல் செய்யும் உலகின் மிகப்பெரிய பகுதிகளில் ஒன்றான இந்தியாவில் கள ஆய்வை மேற்கொண்ட இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குழு கேட்ட கேள்விதான் இது. காலநிலை மாற்றத்தால் தினசரி உண்ணும் அரிசி உள்ளிட்ட தானியங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவலை இந்தக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், மண் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதும், அறுவடை நேரத்தில் கழிவுகளை கட்டுப்படுத்துவதும், அடுத்த 30 ஆண்டுகளில் அரிசி பற்றாக்குறையின் அபாயத்தைக் குறைப்பதற்கான முக்கிய வழிகள் என்று ஆராய்ச்சிக்குழு தெரிவித்துள்ளது.

வடகிழக்கு இந்தியாவின் பீகாரில் உள்ள தெற்காசியாவிற்கான போர்லாக் இன்ஸ்டிடியூட்டின் பண்ணையில் நெல் தோட்டங்கள் குறித்து இந்த ஆராய்ச்சி கவனம் செலுத்தியது. 2050-க்குள் அரிசி மகசூல் மற்றும் நீர் தேவையை மதிப்பிடுவதும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு ஏற்றவாறு நெல் விவசாயிகள் எவ்வாறு மகசூல் செய்ய முடியும் என்பதை மதிப்பிடுவதும் இந்த ஆய்வின் நோக்கமாக இருந்தது.

இது குறித்து இல்லினாய்ஸ் பல்கலைக்கழக வேளாண் மற்றும் உயிரியல் பொறியியல் துறையின் பேராசிரியரும் ஆய்வின் முதன்மை ஆசிரியருமான பிரசாந்தா கலிதா கூறியதாவது, " வானிலை மாறும்போது, அவை பயிர் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான வெப்பநிலை, மழை மற்றும் கார்பன் டை ஆக்சைடு செறிவு ஆகிய அனைத்தையும் பாதிக்கிறது. ஒட்டுமொத்தமாக, ஒரு கிலோ அரிசியின் உற்பத்திக்கும், செயலாக்கத்திற்கும் சுமார் 4,000 லிட்டர் நீர் தேவைப்படுகிறது," என்று அவர் மேலும் கூறினார். நெல் விளைச்சலுக்கான மகசூல் விகிதங்கள் மற்றும் தட்பவெப்ப நிலைகளை வளர்ப்பதற்குத் தேவைப்படும் நீரின் அளவை கலிதாவின் குழு மதிப்பீடு செய்தது. அரிசி உற்பத்தியைத் தக்கவைக்க தற்போது செயல்படுத்த வேண்டிய உத்திகளைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் கணினி உருவகப்படுத்துதல் மூலம் சில மாதிரிகளை ஆய்வு செய்தனர்.

நீர் தேவைகள் மற்றும் கழிவுகளை குறைத்தல்:

நெல் விவசாயிகள் தற்போதைய நடைமுறைகளைத் தொடர்ந்தால், நெல் மகசூல் 2050க்குள் கணிசமாகக் குறையக்கூடும் என்று ஆய்வு மதிப்பீடு செய்துள்ளது. இது பற்றி பேராசிரியர் கலிதா குறிப்பிட்டுள்ளதாவது, "எங்கள் மாதிரிகளின் முடிவுகள் பயிர் வளர்ச்சியின் நிலை குறைந்து வருவதைக் காட்டுகிறது. நீங்கள் பயிரிட்ட நாள் முதல் அறுவடை நாள் வரை மொத்த முதிர்ச்சிக்கான நேரம் குறைந்து வருகிறது. பயிர்கள் வேகமாக முதிர்ச்சியடைந்து வருகின்றன. இதன் விளைவாக, விளைச்சலின் முழு திறனையும் விவசாயிகள் பெறவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட உத்திகளில் ஒன்று மாற்று சிகிச்சைக்கு பதிலாக நேரடி விதை அரிசியைப் பயன்படுத்துவது. இந்த செயல்முறை சுற்றுசூழலுக்கு எந்த ஒரு பாதகத்தையும் விளைவிக்காது. மேலும் குறைந்த நீரில் கணிசமான உற்பத்தியும், அதேபோன்ற விளைச்சலுடனும் பயிரிட அனுமதிக்கும். அதேபோல பயிர் எச்சங்களை நிலப்பரப்பில் வைத்திருப்பது, மண் பாதுகாப்பிற்கான ஒரு வடிவம் என்றும் இந்த செயல்முறை தண்ணீரைப் பாதுகாப்பதற்கான ஒரு உத்தி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also read... ஆட்டோவில் விட்டுச்சென்ற பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஓட்டுநர் - குவியும் பாராட்டு!

அறுவடையின் போதும் அதற்குப் பின்னரும் உணவுக் கழிவுகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். உணவு மற்றும் வேளாண் அமைப்பின் கூற்றுப்படி, இது பயிர்களில் சுமார் 30% ஆகும். இந்த இழப்புகளைக் குறைப்பதற்கான முயற்சிகள் பயிர் கிடைப்பதையும் உணவுப் பாதுகாப்பையும் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆய்வின் கண்டுபிடிப்புகளின்படி, நெல் உற்பத்தியில் 60% அதிகரிப்பு அடைவதற்கான சிறந்த உத்தி, கூடுதல் நீர் தேவைகளை குறைப்பதும் மேற்கண்ட இரண்டு விவசாய நுட்பங்களையும் இணைப்பதும் ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: