Home /News /explainers /

தொண்டர்களை தக்க வைக்குமா அதிமுக..? ஜெயலலிதாவின் நினைவு நாளில் அதிமுக தலைமை செய்ய வேண்டியது என்ன?

தொண்டர்களை தக்க வைக்குமா அதிமுக..? ஜெயலலிதாவின் நினைவு நாளில் அதிமுக தலைமை செய்ய வேண்டியது என்ன?

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதாவின் நினைவு நாளில் அதிமுக தலைமை செய்ய வேண்டியது என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம்.

  ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அதிமுக தொண்டர்களால் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட ஏராளமான முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

  பிறகு, அதிமுகவை அழிக்க நினைப்பவர்களின் சதியை முறியடித்து கட்சியை காப்போம் என்ற உறுதி மொழியும் அக்கட்சியின் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்து 200 நாட்களாகிறது. அதே போல அதிமுக ஆட்சியை இழந்தும் 200 நாட்களாகிறது. தேர்தலில் தோல்வியடையும் கட்சிகள் தோல்விக்காண காரணங்களை முதலில் ஆராயும்.

  ஜெயலலிதா அவர்களின் தலைமையில் அதிமுக இயங்கிய போது ஒவ்வொரு தோல்விக்கு பிறகும் அதற்கான காரணத்தையும், அதனை சரி செய்யும் வழியையும் உடனடியாக தனக்கே உரிய பாணியில் கண்டறிவார். பிறகு மாவட்ட செயலாளர்களும், கட்சிக்கு துரோகம் இழைத்தவர்கள் அடையாளம் கண்டறியப்பட்டு அதிரடி நடவடிக்கைகளும் தொடங்கும்.

  ஆனால் 2021 தேர்தலுக்கு பிறகு, அந்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுக்கு முன்னதாகவே அதிமுகவில், எதிர்கட்சி தலைவர் பதவிக்கு மோதல் ஏற்பட்டதால், தோல்விக்கான காரணத்தை கண்டறிவதில் அதிமுக தலைமை அதிக அக்கறை செலுத்தவில்லை.

  ஒரு சில அதிமுக தலைவர்கள், தோல்விக்கான காரணமாக 10.5% இடஒதுக்கீடு, கூட்டணி குறித்து பேசிய போதும் அது பலருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதால், மிக அவசியமான ஒரு விவாதத்தை அதிமுக தலைமை தவிர்த்தே சென்றது.
  எந்த படிப்பினையும் இல்லாமல், உள்ளாட்சி தேர்தலுக்கும் தயாரானதால் அதிமுக பெரும் சரிவை சந்தித்தது.

  உள்ளாட்சி தேர்தல் முடிவையும் விமர்சனம் செய்த அதிமுக தலைமை, திமுக தன் அதிகார பலத்தை தவறாக பயன்படுத்தி வெற்றிபெற்றதாக அறிக்கை வெளியிட்டது. அதிமுக தலைவர்கள், திரை மறைவில் மேற்கொள்ள வேண்டிய சுய பரிசோதனையும் செய்ய தவறிவிட்டனர்.

  உள்ளாட்சி தேர்தல் முடிவும், வேகமெடுக்கும் வழக்குகளும், அதிமுக தலைமைக்கு , வரும் காலம் சவால் நிறைந்ததாக  இருக்கும் என்ற உணர்வை நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும்.  நோய் எதிர்பாற்றல் குறைந்த பலவீனமான ஒருரை எல்லா எளிதாக நோய்களை தாக்குவது போல, இரு துருவ அரசியலை தங்கள் பக்கம் திருப்ப சில கட்சிகள் காய் நகர்த்துகின்றன. கூட்டணிக்குள்ளாகவே இருக்கும் போதே, கட்சியின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்த மாணிக்கம் பாஜகவுக்கு தாவியதில் இருந்தே அதிமுக எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதை அரசியல் தெரிந்தவர்களால் நன்கு புரிந்துக்கொள்ள முடியும்.

  Also read: எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: காவல்நிலையத்தில் கொலை முயற்சி புகார்

  ஆட்சியில் இருந்த போது மிக எளிதாக கட்சியை வழி நடத்திய ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் இம்முறை தேர்தல் மூலம் மீண்டும் அதே பொறுப்புக்கு தொண்டர்களால்  தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  கடந்த காலங்களை போல,மக்கள் மத்தியில் செல்வாக்கு பொருந்திய தலைவர் யாரும் இல்லாமல், ஆட்சியிலும் இல்லாமல் 1 கோடிக்கும் அதிகமான தொண்டர்களை வழி நடத்தும் பொறுப்பு தற்போது அதிமுக தலைமைக்கு உள்ளது. கட்சிக்குள் எதிர்ப்பு குரலே எழாமல் கட்சி வழி நடத்துவது ஒரு வகை.

  எதிர்ப்பு குரலை எச்சரிக்கையாகவும், கட்சியின் கடைகோடி உறுப்பினர் ஒருவர் கட்சியின் நலன் கருதி கூறும் ஆலோசனையாக கருதினால், 2016ல் சட்டமன்றத்தில் ஜெயலலிதா சூளுரைத்ததை போல, இன்னும் பல ஆண்டுகளுக்கு செழித்து வளரும். ஜெயலலிதா அவர்களின்  சாதனைகளையும் தொடர முடியும்.

  - இரா.தேவப்பிரியன்.
  Published by:Esakki Raja
  First published:

  Tags: Jayalalitha

  அடுத்த செய்தி