ஹோம் /நியூஸ் /Explainers /

Explained: கோவாக்சின், கோவிஷீல்டு மிக்ஸிங் - சாதக, பாதகங்கள் என்ன?

Explained: கோவாக்சின், கோவிஷீல்டு மிக்ஸிங் - சாதக, பாதகங்கள் என்ன?

கோவாக்சின், கோவிஷீல்டு

கோவாக்சின், கோவிஷீல்டு

இரண்டு தடுப்பூசிகளையும் மாற்றி செலுத்திக் கொள்ளலாமா? என கேள்விகள் இருந்த நிலையில் ஐ.சி.எம்.ஆர், புதிய ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், மற்றொரு டோஸ் கோவிஷீல்டு செலுத்திக்கொள்ளும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

அடினோவைரஸ் வெக்டர் பார்மைக் கொண்டது கோவிஷீல்டு. செயலிழப்பு செய்யப்பட்ட வைரஸ்களால் உருவாக்கப்பட்டது கோவாக்சின். இந்த இரண்டு தடுப்பூசிகளையும் மாற்றி செலுத்திக் கொள்ளலாமா? என கேள்விகள் இருந்த நிலையில் ஐ.சி.எம்.ஆர், புதிய ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், சித்தார்த் நகர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் முதலில் கோவிஷீல்டு செலுத்திக் கொண்ட மக்களுக்கு, ஆறு வாரங்களுக்குப் பிறகு 2வது டோஸ் தடுப்பூசி தவறுதலாக செலுத்தப்பட்டது. கோவிஷீல்டு செலுத்துவதற்கு பதிலாக அவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. களத்தில் இறங்கிய ஐ.சி.எம்.ஆர், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் ஒரே மாதிரியாக செலுத்திக் கொண்டவர்களையும், தவறுதலாக மாற்றி தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் ஆய்வுக்குட்படுத்தியது.

ALSO READ |  கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டா? விளக்கும் நிபுணர்கள்..!

இதில், ஒரே தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்களைவிட முதலில் கோவிஷீல்டு, பின்னர் கோவாக்சின் செலுத்திக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதை உறுதி செய்துள்ளது. எனினும் இந்த முடிவுகள் முதல்கட்ட ஆய்வுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வு சொல்வது என்ன?

ஐ.சி.எம்.ஆர் ஆய்வு குறித்து பேசிய முன்னணி மருத்துவர் வினீதா பால், எதிர்பாராதமாக நிகழ்ந்த தவறை, ஐ.சி.எம்.ஆர் ஆய்வுக்கு பயன்படுத்தியது பாராட்டத்தக்கது என்றார். ஆனால், 18 நபர்களிடம் எடுக்கப்பட்ட முடிவுகளை வைத்து முழுமையான தீர்வாக கருத முடியாது, இது பூர்வாங்கமான ஒன்று என விளக்கமளித்த அவர், ஒரே மாதிரியான இரண்டு தடுப்பூசிகளைக் காட்டிலும் மாற்று தடுப்பூசிகள் செலுத்தும்போது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி தூண்டுதல் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருப்பது சாதகமான அம்சம் என குறிப்பிட்டார். கோவிஷீல்டின் இரண்டு டோஸ்கள் செலுத்திக் கொள்ளும்போது அத்தகைய முடிவுகளை பார்க்க முடியவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

ALSO READ |  ஆப்கானியர்களை கொல்வதை நிறுத்துங்கள்: உலகத் தலைவர்களுக்கு கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் வேதனை வேண்டுகோள்

தடுப்பூசி நிபுணர் மருத்துவர் ககன்தீப் சிங் காங் பேசும்போது, பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் மாற்று தடுப்பூசிகளின் சேர்க்கைகள், ஒரே தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களைவிட தாழ்ந்தவை அல்ல என்பதை காட்டியிருப்பதாக கூறினார். பொதுப்பயன்பாட்டுக்கு வரும்போது எத்தகைய முடிவுகளைக் கொடுக்கும் என்ற தரவுகள் இல்லை என்பதையும் அவர் தெரிவித்தார்.

தடுப்பூசிகள் மாற்றி செலுத்திக் கொள்ளலாமா?

தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக் கொள்ளலாமா? என்பதற்கான தரவுகள் மிகக் குறைந்த அளவில் மட்டுமே இருப்பதாக கூறியுள்ளது. ஆஸ்ட்ரா ஜென்கா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டவர்களுக்கு, இரண்டாவது டோஸ் தடுப்பூசி ஒருவேளை கிடைக்கவில்லை என்றால் எம்.ஆர்.என்.ஏ (பைசர் மற்றும் மாடர்னா) வகை தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம் என அந்த நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. தடுப்பூசிகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் கலப்பு முறைகள் குறித்து பொதுவாக அறிவுறுத்தப்படுகின்றன.

ALSO READ |  கதியின்றி தவிக்கும் ஆப்கன் மக்களின் பரிதாப நிலை... மனதை உலுக்கும் புகைப்படங்கள்

வேறு எந்த தடுப்பூசிகளையும் மாற்றி செலுத்திக் கொள்ளும் வகையில் இருந்தால், பகுப்பாய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. ஒரே நிறுவனத்தின் 2 டோஸ்களையும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பொதுவாக நிறுவனங்கள் கலப்பு தடுப்பூசிகளை பரிந்துரைப்பதில்லை என கூறியுள்ள உலக சுகாதார மையும், இது வணிகம் சார்ந்த விஷயம் என்பதால் நிறுவனத்தின் முடிவுகளுக்குள் தலையிட முடியாது எனவும் தெரிவித்துள்ளது. இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை பயன்படுத்துவது குறித்து நீண்ட கால அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கோவாக்சின், கோவிஷீல்டு பயன்படுத்தலாமா?

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் டோஸ்களை மாற்றி செலுத்திக் கொள்வது குறித்து போதுமான தரவுகள் இல்லை என நிபுணர்கள் கூறியுள்ளனர். முதல்கட்ட தரவுகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகளவு தூண்டுகிறது என்கிற முடிவுகளை கொடுத்துள்ளதாகவும், பல்வேறு சூழல்கள் மற்றும் நபர்களிடம் பரிசோதனை செய்ய வேண்டியிருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளனர். தொடக்க ஆய்வுகளின் முடிவுகளைக் கொண்டு, தீர்வுகளைக் கொடுக்க இயலாது எனவும் நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

ALSO READ |  பழங்கள் கெடாமல் இருக்க கார்பன் அடிப்படையிலான காகித ரேப்பர்களை உருவாக்கிய விஞ்ஞானிகள்!

ஐரோப்பிய நாடுகளில் முதன் முதலாக ஆஸ்ட்ரா ஜென்கா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு ரத்த உறைவு ஏற்படுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, எம்.ஆர்.என்.ஏ வகை தடுப்பூசிகளை செலுத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டது. எனினும், அவசர காலத்துக்காக பரிந்துரைக்கப்பட்ட இந்த முடிவுகள் இன்னும் ஆய்வுக்குட்படுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

' isDesktop="true" id="530785" youtubeid="BCLqT296k7M" category="explainers">

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Corona Vaccine, Covid-19