Home /News /explainers /

கடல் நீரில் குறையும் ஆக்சிஜன் அளவு- கடல் நிறம் இடத்துக்கு இடம் வேறுபடுவது ஏன்?

கடல் நீரில் குறையும் ஆக்சிஜன் அளவு- கடல் நிறம் இடத்துக்கு இடம் வேறுபடுவது ஏன்?

கடலின் நிறத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் தொடர்பு உண்டு.

கடலின் நிறத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் தொடர்பு உண்டு.

வானிலை மாற்றம், குளோபல் வார்மிங் என்ற புவி வெப்பமடைதல் நிகழ்வுகளினால் குறிப்பாக மானுட நடவடிக்கைகளினால் ஐரோப்பிய யூனியன் அளவுக்கு கடலில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளது. அதாவது 17 லட்சத்து 28 ஆயிரத்து 99 சதுர மைல்கள் கடல் நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
  "நீல நிறம்.. வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்"  என்ற எம்.ஜி.ஆர். பாடல் ஒரு காலத்தில் ஹிட் பாடல். ஆனால் வான் பற்றி தெரியவில்லை, கடலின் நிறம் நீலம் அல்ல என்பதுதான் அறிவியல் உண்மை. நாம் மெரீனா கடற்கரையில் பார்க்கும் கடல் ஒரு மாதிரி கருப்பு கலராக இருக்கும் அதுவே விஜிபி போன்ற இடங்களில் பார்த்தால் நீல நிறமாக இருக்கும்.

  கடலின் நீறம் பலதும் கலந்த நீல நிற ஜாடையில் இருக்குமே தவிர கடலின் நிறம் நீலம் அல்ல என்பதே விஞ்ஞானிகள் கூறும் உண்மை. நாசா கடலாராய்ச்சியாளர் ஜெனே கார்ல் ஃபெல்ட் மேன் கூறுவதென்னவெனில், “கடல் நீர் நிறம் நீலமல்ல, அது தெள்ளத்தெளிவான நீர்தான். கடல் நீரின் மேல்புற நிறம் என்பது அதன் ஆழத்தைப் பொறுத்தது. அதில் என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்தது, அதன் அடியில் என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்து கடல் நீரின் நிறம் இடத்துக்கு இடம் மாறுபடும்” என்கிறார்.

  ஒரு கண்ணாடி தம்ளரில் நீரை நாம் நிரப்புகிறோம் என்றால் நீரின் நிறம் கிரிஸ்டல் கிளியராக இருக்கும். ஏன் தெரியுமா? ஒளி அதன் வழியாக, அதன் ஊடாக கடைசி வரை பாய்வதுதான். ஒளி பாய்வதில் இடையூறு இல்லாமல் இருந்தால் நீரின் நிறம் தெள்ளத்தெளிவான நிறத்தில் இருக்கும். ஆனால் ஆழமான நீர் நிலைகளில் ஒளி அடியாழம் வரை செல்ல முடியவில்லை எனில் அது நீல நிறமாகத் தெரியும்.

  அடிப்படை பவுதீகம் இதனை விளக்கும்: சூரியனிலிருந்து வெளிவரும் ஒளி என்பது பலதரப்பட்ட அலை நீளம் உடைய ஸ்பெக்ட்ரம் ஆகும். இந்த வேவ் லெந்த் அல்லது ஒளி அலை நீளமாக இருக்கும் போது சிகப்பு, ஆரஞ்சு நிறங்கள் தோன்றுகின்றன, ஒளிஅலை நீளம் குறைவாக இருக்கும் போது நீல நிறமாக தெரியும். பச்சை நிறமாகத் தெரியும். சூரிய ஒளி கடல் நீர் மீது விழும்போது அது கடல் நீர் மூலகங்களுடன் வினையாற்றுகிறது. இதனால் ஒளி சிதறல் ஏற்படும் அல்லது ஒளி உள்வாங்கப்படும். நீரில் நீர் மூலகங்கள் தவிர வேறு எதுவும் இல்லை எனில் சூரிய ஒளியின் குறுகிய அலை ஏதோ ஒன்றின் பட்டு சிதறும். இதனால் கடல் நீல நிறமாகத் தோற்றமளிக்கிறது. நீளமான, சூரிய ஓளியின் சிகப்பு பகுதி கடல் நீரின் மேற்புறத்தில் உறிஞ்சப்படும்.  நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை பெரும்பகுதி அளிப்பது கடல் நீர்தான்!

  கடலின் ஆழம் மற்றும் கடல் நீரின் அடிப்பகுதி ஆகியவையும் கடலின் நிறத்தை தீர்மானிக்கிறது. கிரீஸ் நாட்டில் கடல் நீர் மிக அருமையான கண்ணுக்குக் குளிர்ச்சியான நீலப்பச்சை ரத்தினக் கல் போன்று காட்சியளிக்கும். ஏனெனில் கடல் அடி என்பது அங்கு வெள்ளை மண் அல்லது வெள்ளைப் பாறைகள் ஆகியவை கொண்டதால்தான். இங்கு சூரிய ஒளி ஆழம் வரை சென்று பிரதிபலிப்பதால் அழகான நீல நிறம் கடலுக்கு வந்து விடுகிறது என்கிறார் பெல்ட்மேன்.

  கடலின் மேற்புற நிறம்தான் அதன் ஆழத்தில் அடியாழத்தில் என்ன நடக்கிறது என்பதன் பிரதிபலிப்பு என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கடலின் ஆழத்தில் நுண் தாவரமான phytoplankton உள்ளது, இது ஊட்டச்சத்து நிரம்பியது. இந்த பைட்டோபிளான்க்டன் சூரியனிலிருந்து ஆற்றலை உள்வாங்க குளோரோபில்லைப் பயன்படுத்தி நீரையும் அதில் உள்ள கரியமில வாயுவையும் உயிர்ம திரவபொருளாக மாற்றுகிறது. இதன் பெயர்தான் போட்டோ சிந்தசிஸ். இந்த பைட்டோபிளாங்டன் தான் நாம் சுவாசிக்கும் பிராணவாயுவில் பாதியை அளிக்கிறது. இந்த பைட்டோபிளாங்க்டன் நீருக்கு பச்சை தன்மையை அளிக்கிறது.

  இந்த பைட்டோ பிளாங்க்டன் அதிகம் உள்ள கடல் நீலப்பச்சையிலிருந்து பசுமை நிறத்தில் காட்சியளிக்கும். பைட்டோபிளாங்டன் இல்லையெனில் நாம் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது என்கிறார் ஃபெல்ட்மேன். இது உணவுச்சங்கிலி கூட மீன்கள் சாப்பிடும் சிறு சிறு தாவரங்களினால் தான் மீனுக்கு சத்து கிடைக்கிறது. ஆகவே கடல் நீர் மாசு அடைந்தால் பைட்டோபிளாங்டன் ஆரோக்கியமற்ற அளவுக்கு பெருகும். அதாவது மாசுக்கும் சேர்த்து அது உணவளித்து அழிந்து போகும். நீரின் அடியாழத்துக்குச் சென்று அழுகிப் போய்விடும் இதுதான் கடல்நீரின் ஆக்சிஜன் தன்மையை இழக்கச் செய்கிறது.

  கடல் நீரில் குறையும் ஆக்சிஜன் அளவு:

  வானிலை மாற்றம், குளோபல் வார்மிங் என்ற புவி வெப்பமடைதல் நிகழ்வுகளினால் குறிப்பாக மானுட நடவடிக்கைகளினால் ஐரோப்பிய யூனியன் அளவுக்கு கடலில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளது. அதாவது 17 லட்சத்து 28 ஆயிரத்து 99 சதுர மைல்கள் கடல் நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளது என்று 2018-ம் ஆண்டின் ஆய்வு ஒன்று கூறுகிறது.  காரணம் வானிலை மாற்றம், கடல் நீர் வெப்பம் அதிகரிப்பதால் அதில் ஆக்சிஜன் அளவு குறைவாகவே இருக்கும். பைட்டோபிளாங்டன் தான் நம்மை வாழ வைக்கிறது, ஆனால் எது நல்லதோ அதுவே அதிகமாகும் போது பெருகும்போது அபாயகரமாக உள்ளது, நம் மூதாதைய தமிழர்கள் மிக அழகாக கூறியது போல் ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Environment, Global warming, Oxygen

  அடுத்த செய்தி