ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

'குரங்கு அம்மை' என்று அழைக்க காரணம் என்ன? அதிகரிக்கும் புது வைரஸ்!

'குரங்கு அம்மை' என்று அழைக்க காரணம் என்ன? அதிகரிக்கும் புது வைரஸ்!

குரங்கு வைரஸ்

குரங்கு வைரஸ்

Monkeypox | குரங்கு அம்மை ஏன் இப்படி திடீரென்று வேகமாக பரவி வருகிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

  சமீபத்திய வாரங்களாக உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. குறைந்தது 12 நாடுகளில் 80க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். 80 கேஸ்களை தவிர்த்து உலக சுகாதார அமைப்பு மேலும் 50 சந்தேகத்திற்கிடமான கேஸ்களை விசாரித்து வருவதாகவும் மேலும் சில கேஸ்கள் பதிவாகும் என்றும் கூறியுள்ளது.

  ஒன்பது ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இந்த தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் தொலைதூர பகுதிகளில் இந்த நோய் மிகவும் பொதுவாக காணப்பட்டாலும் இது ஒரு அரிதான வைரஸ் தொற்று ஆகும், இது பெரும் பலம் மிக்கது அல்ல மற்றும் பெரும்பாலான மக்கள் சில வாரங்களிலேயே குணமடைவார்கள் என்று இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது. ஆனால், இந்த நோய்க்கு ஏன் குரங்கு அம்மை என்கிற பெயர் வந்தது?

  'மங்கி பாக்ஸ்' என்ற பெயருக்கான காரணம் என்ன?

  1958 ஆம் ஆண்டில் ஆய்வக குரங்குகளில் கண்டறியப்பட்ட பின்னர் விஞ்ஞானிகள் இதற்கு குரங்கு அம்மை என்ற பெயரைக் கொண்டு வந்தனர். 1970 ஆம் ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசில் பெரியம்மை நோயை அகற்றுவதற்கான தீவிர முயற்சியின் போது சிலரிடம் குரங்கு அம்மை கண்டறியப்பட்டது. அதுவே மங்கி பாக்ஸ் நோயின் முதல் பதிவு ஆகும். மேலும் அன்றிலிருந்து மற்ற மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த சில மனிதர்களுக்கு குரங்கு அம்மை பதிவாகியுள்ளது.

  இதற்கு தடுப்பூசி ஏதேனும் உள்ளதா?

  குரங்கு அம்மை மற்றும் பெரியம்மை சில ஒற்றுமையைப் பகிர்ந்துகொள்வதால், பெரியம்மைக்கான மருந்து நோய் அம்மைக்கு எதிராக சில நல்ல பாதுகாப்பை வழங்குகிறது. ஆய்வுகளின்படி, குரங்கு அம்மையை தடுப்பதில் இம்வானெக்ஸ் ஸ்மால்பாக்ஸ் தடுப்பூசி ஆனது சுமார் 85 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும். மேலும் குரங்கு அம்மை ஆனது பெரியம்மை நோயை விட குறைவான தொற்று மற்றும் குறைவான நோய் தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. உலக சுகாதார அமைப்பின்படி,புதிய தடுப்பூசிகளும் உருவாக்கப்பட்டுள்ளன, அவற்றில் ஒன்று குரங்கு அம்மையை தடுப்பதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

  Also Read : ஆயிரத்தில் ஒருவரால் மட்டுமே இந்த புகைப்படத்தில் இருக்கும் யானை கண்டுபிடிக்க பிடியும்... நீங்கள்?

  எப்படி பரவுகிறது?

  குரங்கு அம்மை ஏன் இப்படி திடீரென்று வேகமாக பரவி வருகிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. குரங்கு அம்மை அவவ்ளவு மனிதர்களிடையே எளிதில் பரவாது, மாறாக கொறித்துண்ணிகள் போன்ற காட்டு விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாக கருதப்படுகிறது. ஒருவருக்கு 'மங்கி பாக்ஸ் ரேஷ்' இருக்கும் பட்சத்தில், அவரை தொடுவது, அவர் பயன்படுத்தும் ஆடை, படுக்கை அல்லது துண்டுகள் ஆகியவைகளின் வழியாக குரங்கு அம்மை பரவும். குரங்கு அம்மை ஆனது தோல் கொப்புளங்கள் அல்லது சிரங்குகளை தொடுவதன் வழியாகவும் பரவும். மேலும் குரங்கு அம்மை சொறி உள்ள ஒருவரின் இருமல் அல்லது தும்மல் மூலமாகவும் இந்த வைரஸ் பரவுகிறது.

  என்னென்ன அறிகுறிகள்?

  டபுள்யூஎச்ஓ-வின் கூற்றுப்படி, குரங்கு அம்மையின் இன்க்யூபேக்ஷன் காலம் பொதுவாக 6 முதல் 13 நாட்கள் வரை இருக்கும், ஆனால் இது 5 முதல் 21 நாட்கள் வரை கூட இருக்கலாம். ஆரம்ப அறிகுறிகளில் காய்ச்சல், தலைவலி, முதுகுவலி, நிணநீர் முனைகளில் வீக்கம் (swollen lymph nodes), குளிர்ச்சி மற்றும் சோர்வு ஆகியவைகள் அடங்கும். தோல் வெடிப்பு பொதுவாக காய்ச்சல் தோன்றிய 1 - 3 நாட்களுக்குள் தொடங்குகிறது. சொறி உடற்பகுதியில் இருப்பதை விட முகம் மற்றும் கை கால்களில் அதிகமாக காணப்படும். குரங்கு அம்மை பொதுவாக 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும் அறிகுறிகளுடன் ஒரு சுய-வரம்பிற்குட்பட்ட நோயாகும்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Monkeypox