ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

குலசேகரப்பட்டினத்தில் எதற்காக இந்தியா ஏவுதளத்தை உருவாக்கி வருகிறது?

குலசேகரப்பட்டினத்தில் எதற்காக இந்தியா ஏவுதளத்தை உருவாக்கி வருகிறது?

குலசேகரப்பட்டினத்தில் எதற்காக இந்தியா ஏவுதளத்தை உருவாக்கி வருகிறது?

குலசேகரப்பட்டினத்தில் எதற்காக இந்தியா ஏவுதளத்தை உருவாக்கி வருகிறது?

Kulasekarapattinam launch station ; பெரிய ரக ராக்கெட்டுகளை ஏவும் ஸ்ரீஹரிகோட்டா தளம் சிறிய ரக ஏவுகணையை ஏவும்போது சாந்தினிக்கும் எரிபொருள் மற்றும் பாதை சிக்கலை சரி செய்யவே குலசேகர பட்டினத்தில் இரண்டாவது ஏவுதளத்தை உருவாக்கி வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையில் பேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், நாட்டின் விண்வெளித் திட்டத்திற்காக இந்தியா உருவாக்கி வரும் இரண்டாவது விண்வெளித் தளத்திற்காக தமிழக அரசின் மூலம் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

இந்தியாவின் இரண்டாவது விண்வெளி ஏவு தளத்தை நிர்மாணிப்பதற்காக தமிழ்நாட்டில் அமைந்துள்ள குலசேகரப்பட்டினத்தில் கிட்டத்தட்ட 83%, அதாவது 2,350 ஏக்கரில் 1,950 நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதுள்ள மனிதவளத்தை, விண்கலத்தின் அத்தியாவசிய வசதிகளை நிறுவுவதை மேற்பார்வையிடவும், ஏவுதல் தொடர்பான முக்கியமான செயல்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவது விண்வெளித் தளம் நிறைவடைந்ததும், செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கான மனிதவளத் தேவை மதிப்பிடப்படும் என்று கூறினார். இரண்டாவது விண்வெளி நிலையம் 2024 அல்லது 2025க்குள் ஏவுவதற்கு தயாராக இருக்கும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையம் மற்றும் அதன் சிறப்பு என்ன?

இந்தியா தற்போது ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டு ஏவுதளங்களுடன் ஒரு விண்வெளி நிலையம் இயங்குகிறது. 1970களின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டது. 1993 முதல், பிஎஸ்எல்வி மற்றும் அதன்பின், ஜிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி எம்கே3 ராக்கெட்டுகளையும் ஏவியது.

ISRO : விண்வெளி சுற்றுலா நோக்கி பறக்கும் இஸ்ரோ

கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள இது, பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ளதால், இங்கிருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் பூமியின் மேற்கு-கிழக்கு சுழற்சியின் கூடுதல் வேகத்தால் எளிதாக விண்ணை அடைகின்றன. இந்த விளைவால் குறைந்த சக்தி கொண்டு ஏவுகணையை இயக்கும் ஆற்றல் கிடைக்கும். குறைந்த பட்ஜெட்டில் விண்வெளி வெற்றிகளை இந்திய பெற இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.  மற்ற நாடுகளின் ஏவுதளங்கள் விண்வெளிக்கு போகவே அதிக நேரம் எடுக்கும். எரிபொருளும் கூடும். அந்த சிக்கல் இங்கில்லை.

கடலுக்கு சற்று அருகிலேயே அமைந்துள்ளதால்  ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகள் கிழக்கு நோக்கி பறந்து, கடலுக்கு மேலே உயரும். எனவே, விபத்துகள் ஏற்பட்டால், ராக்கெட் மற்றும் அதன் குப்பைகள் கடலில் மட்டுமே விழும், இதனால் பெரிய பேரழிவு தவிர்க்கப்படுகிறது.

இந்தியாவிற்கு ஏன் புதிய விண்வெளி நிலையம் தேவை?

ஸ்ரீஹரிகோட்டா கனமான ராக்கெட்டுகளை ஏவுவதற்கு ஏற்றதாக இருந்தாலும், இஸ்ரோவில் இனி வரவிருக்கும் சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக பயன்படுத்த இருக்கும் 500 கிலோ சிறிய ராக்கெட்டுகளை ஏவ பெரிய சவாலாக இருக்கிறது.

துருவ சுற்றுப்பாதையில் (துருவங்களுக்கு மேலே பூமியைச் சுற்றி வரும்) ராக்கெட்டுகள் செலுத்தப்படும் போது ஸ்ரீஹரிகோட்டா ஒரு சவாலை எதிர்கொள்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஒரு ராக்கெட் தென் துருவத்தை நோக்கி பயணிக்கும் போது, ​​அந்த ராக்கெட் தீவு நாடான இலங்கையை கடந்து செல்ல வேண்டும். ஒரு நாட்டிற்கு மேல் பறக்கும் அபாயம் இருப்பதால், இந்தியாவின் ராக்கெட்டுகள் இலங்கை நிலப்பரப்பைத் தவிர்ப்பதற்காக ஒரு சூழ்ச்சியைச் செய்ய வேண்டியுள்ளது. எனவே, ராக்கெட் நேர்கோட்டில் பறக்காமல், வளைந்த பாதையில் சென்று திருப்பம் எடுக்கும்.

இந்த சூழ்ச்சியைச் செய்ய, ராக்கெட் கூடுதல் எரிபொருளை எரிக்க வேண்டும். பெரிய ராக்கெட்டுகள் ராக்கெட்டின் சுமை சுமந்து செல்லும் திறனில் அதிக தாக்கம் இல்லாமல் இந்த சூழ்ச்சியை செய்ய முடியும் என்றாலும், SSLV போன்ற சிறிய ராக்கெட்டுகள் அதிக எரிபொருளை இந்த சுழற்சியால் இழக்க நேரிடும். இதனால் ராக்கெட்டின் சுமந்து செல்லும் திறன் குறைகிறது. எனவே, சிறிய ராக்கெட்டுகளை ஒரே நேர்கோட்டில் ஏவக்கூடிய இடத்தை இந்தியா தேடிக்கொண்டிருந்தது.

முக்கிய மருந்துகளின் விலையை 70% குறைக்க மத்திய அரசு திட்டம்!

தமிழ்நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள குலசேகரப்பட்டினம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. இங்கிருந்து ஏவப்படும் போது, ​​SSLV போன்ற சிறிய ராக்கெட்டுகள் மற்றும் இந்திய ஸ்டார்ட்-அப்களால் உருவாக்கப்படும் ராக்கெட்டுகள் எரிபொருளைச் சேமித்து துருவத்தை நோக்கி நேராகப் பறக்க முடியும். 

சிறிய ராக்கெட்டுகளை உருவாக்குவதற்கும், ஒன்று சேர்ப்பதற்கும், ஏவுவதற்கும் எளிதானது என்பதால், அத்தகைய சிறிய ராக்கெட்டுகளுக்கு ஒரு பிரத்யேக விண்வெளி நிலையம் இருப்பது இந்தியாவிற்கு முக்கியம். குறைந்த செலவில் சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த விரும்பும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறிய ராக்கெட்டுகள் கவர்ச்சிகரமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: ISRO, Isro launch, Kulasekarapattinam, Sriharikota