நேபாளம் சுமார் 80 ஆண்டுகளாக நிலநடுக்கங்களை சந்தித்து வருகிறது. மிதமானது முதல் மிகக்கடும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலநடுக்கம் வரை ஏராளமான வகைகளையும் சந்தித்துள்ளது. ஆனால் ஏன் நேபாளத்தில் இத்தனை நிலநடுக்கங்கள் வருகிறது என்று சிந்தித்ததுண்டா? காரணம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்..
பூமியின் மேலோடு பெரிய டெக்டோனிக் தகடுகளால் ஆனது. சில நேரங்களில் முழு கண்டங்களையும் உள்ளடக்கிய இந்த நிலப்பரப்புகள், தொடர்ந்து நகர்ந்து ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டிருக்கின்றன. ஒரு சில தகடுகள் சேரும். ஒரு சில தகடுகள் விலகும். இந்த இரண்டு செயலாலும் புவியியல் மாற்றங்கள் உண்டாகும்.
இமயமலை. இந்தியா, நேபால், சீனா, பாகிஸ்தான் நாடுகளில் பரவியிருக்கும் இந்த மலை புவியியல் சொல்லப்படும் 2 டெக்டானிக் தட்டுகளின் இணைவால் ஏற்படுகிறது. ஐரோப்பிய-ஆசிய மற்றும் இந்திய தட்டு இணையும் இடத்தில் அதன் அழுத்தம் காரணாமாக நிலம் மேல்நோக்கி வளர்ந்து வருகிறது.
2 தட்டுகளும் ஒன்றின் மேல் மற்றொன்று அழுத்தம் கொடுப்பதால் இந்த இணைவு பகுதியில் நிலம் நகர்வுகளுக்கு உட்படும். எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம் முதலானவை ஏற்படும். இந்த 2 தட்டுகள் இணையும் இடத்தில் நேபாளம் அமைந்துள்ளது. இந்த 2 தட்டுகளும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 செமீ என்ற விகிதத்தில் இவை ஒன்றுக்கொன்று எதிராகவும் கீழும் அழுத்திக்கொள்கின்றன.
இந்த டெக்டானிக் தட்டுகளின் அழுத்தத்தால் கீழ் அடுக்கில் உராய்வும் மோதலும் நடைபெறும். அதை மையம் என்று சொல்வர். அந்த மோதலின் தாக்கம் நிலத்தில் மேற்பரப்பை அடையும் போது நிலநடுக்கம் உணரப்படும். நிலம் உறுதியாக இருந்தால் பாதிப்பு குறைவாக இருக்கும். நேபாளம் மலை பிரதேசம் என்பதால் நிலை ஸ்திரத்தன்மை விரைவாக குலையும் தன்மை கொண்டதாக இருக்கிறது.
நேபாளத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட காத்மாண்டு பள்ளத்தாக்கின் அடியில் 300 மீட்டர் ஆழமான களிமண் அடுக்கு உள்ளது. இது பள்ளத்தாக்கிற்குள் நிலநடுக்கத்தின் நில அதிர்வு அலைகளை பிரதிபலிக்கிறது மற்றும் தீவிரப்படுத்துகிறது. இதன் விளைவாக மண் திரவமாக்கல் என்று அழைக்கப்படுகிறது. அதிர்வுகள் திடமான நிலத்தை புதைமணல் போன்றவற்றுக்கு மாறும் போது இது நிகழ்கிறது.
குலசேகரப்பட்டினத்தில் எதற்காக இந்தியா ஏவுதளத்தை உருவாக்கி வருகிறது?
கீழடுக்கு முதல் மண் புரள்வதால் அது மேலே வரும் பொது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நிலத்தில் விரிசல் ஏற்படுவது, கட்டிடங்கள் வீழ்வது, கோபுரங்கள் சரிவது, புதிய பள்ளங்கள், மேடுகள் உருவாவதை பார்க்க முடியும். இதை ரிக்டர் அளவுகளில் குறிப்பிடுவர். இது செத்த அளவை கணக்கிட உதவும்.
ஏப்ரல் 2015 இல், நேபாளத்தை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவிலான பேரழிவுகரமான நிலநடுக்கத்தால் கிட்டத்தட்ட 9,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 22,000 பேர் காயமடைந்தனர். இது 800,000 வீடுகள் மற்றும் பள்ளி கட்டிடங்களை சேதப்படுத்தியது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நேபாளத்தின் கோட்டாங் மாவட்டத்தில் உள்ள பகுதியில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் மார்டின்பிர்ட்டாவில் மையம் கொண்டு காத்மாண்டுவிலிருந்து கிழக்கே 450 கிமீ தொலைவில் உள்ள கோட்டாங்கை காலை 8:13 மணியளவில் தாக்கியது என்று தேசிய நில அதிர்வு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Earthquake, Nepal