ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

இந்தியாவில் வறுமை குறைவு.. பட்டினி விகிதம் அதிகம் - புள்ளி விவரங்கள் சொல்லுவது என்ன?

இந்தியாவில் வறுமை குறைவு.. பட்டினி விகிதம் அதிகம் - புள்ளி விவரங்கள் சொல்லுவது என்ன?

இந்திய வறுமை நிலை

இந்திய வறுமை நிலை

MPI இல் பயன்படுத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (2019-21) இலிருந்து 71% தரவு தொற்றுநோய்க்கு முன்பே சேகரிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

சமீபத்தில் UNDP , பல பரிமாண வறுமை MPI  அறிக்கையை  வெளியிட்டது. அதில்  2005-06 முதல் 2019-21 வரையிலான 15 ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவில் 41.5 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் முதல் 10 ஆண்டுகளிலும்   மூன்றில் ஒரு பகுதியினர் அடுத்த ஐந்து ஆண்டுகளிலும்  வெளியேறியுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் Oxford Poverty and Human Development Initiative (OPHI) ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பல பரிமாண வறுமை அறிக்கைபடி , நாட்டில் 2005-06 இல் 55.1% ஆக இருந்த வறுமையின் அளவு 2019-21 இல் 16.4% ஆகக் குறைந்துள்ளது மற்றும் 10 MPI குறிகாட்டிகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டது. இதன் விளைவாக MPI மதிப்பு மற்றும் வறுமையின் நிகழ்வு பாதியாக குறைந்துள்ளது.

உலகளவில், 111 வளரும் நாடுகளில் உள்ள மொத்த 610 கோடி மக்களில், 19.1% அல்லது 120 கோடி பேர் வறுமையில் வாழ்கின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர்.

காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுபெறும் - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

இந்தியாவில் 22.8 கோடி பேர் இன்னும்  ஏழைகளாக உள்ளனர், அவர்களில் 9.7 கோடி பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பட்டினி குறியீட்டில் 117 நாடுகளில் இந்தியா 102 வது இடத்தில் இருந்தது கடந்த வாரம் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில், ஐந்து இடங்கள் சரிந்து 121 நாடுகளில் 107 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில் பசி குறியீட்டு முறை கணக்கிடப்பட்டதை இந்தியா கடுமையாக விமர்சித்தது. இதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

அதன்படி 2019 இன் அறிக்கையிலிருந்து, 14.4 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்தியது. ஆனால் 14.4 கோடி மக்கள் ஒரே நேரத்தில் வறுமையில் இருந்து மீட்கப்பட்டால், பசி குறியீட்டில் இந்தியா எப்படி ஐந்து படிகள் வீழ்ச்சியடையும் என்ற குழப்பம் நிலவுகிறது.

திடீரென்று அதிகப்படியான அயோடின் மாத்திரைகளை வாங்கிக்குவிக்கும் உக்ரைன் மக்கள்... காரணம் என்ன?

அறிக்கைகளின் ஆய்வு முரண்பாடுகளுக்கு காரணம், UNDP இன் MPI அறிக்கை, இந்தியாவில் வறுமையின் மீதான கோவிட் தொற்றுநோயின் விளைவுகளைக் கருத்தில் கொள்ளவில்லை. ஏனெனில் MPI இல் பயன்படுத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (2019-21) இலிருந்து 71% தரவு தொற்றுநோய்க்கு முன்பே சேகரிக்கப்பட்டது.

இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட உலக வங்கியின் வறுமை மற்றும் பகிரப்பட்ட செழுமை அறிக்கை, 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் கடுமையான வறுமையில் வாடிய ஏழு கோடி பேரில், இந்தியர்கள் 5.6 கோடி பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2011-12 ஆம் ஆண்டிலிருந்து வறுமை குறித்த தரவுகளை அரசாங்கம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Poverty, United Nation