Home /News /explainers /

Biotech's Covaxin vaccine: கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியை நிறுத்தும் பாரத் பயோடெக் - காரணம் என்ன?

Biotech's Covaxin vaccine: கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியை நிறுத்தும் பாரத் பயோடெக் - காரணம் என்ன?

தடுப்பூசி - மாதிரிப்படம்

தடுப்பூசி - மாதிரிப்படம்

அவசரகால பயன்பாட்டு பட்டியல் (EUL) அங்கீகாரதுக்குப் பிந்தைய ஆய்வு (14 - 22 மார்ச் 2022)  முடிவுகள் அடிப்படையிலும், நல்ல உற்பத்தி நடைமுறைகளில் (GMP) காணப்பட்ட சமீபத்திய குறைபாடுகளை  நிவர்த்தி செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது

மேலும் படிக்கவும் ...
யுனிசெப் போன்ற ஐக்கிய நாடுகளின் அமைப்புகள் பாரத் பயொடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை கொள்முதல் செய்வதை நிறுத்தியுள்ளது. மேலும், கோவக்சின் தடுப்பூசி பெற்ற நாடுகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார மையம் வெளியிட்ட குறிப்பில், ’அவசரகால பயன்பாட்டு பட்டியல் (EUL) அங்கீகாரதுக்குப் பிந்தைய ஆய்வு (14 - 22 மார்ச் 2022)  முடிவுகள் அடிப்படையிலும், நல்ல உற்பத்தி நடைமுறைகளில் (GMP) காணப்பட்ட சமீபத்திய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது".

மேலும் அந்த குறிப்பில்,"பாரத் பயோடெக் நிறுவனம் தனது உற்பத்தி குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உறுதி பூண்டுள்ளது. உற்பத்தி குறைபாடுகள் ஏற்படுவதைக் குறைக்கவும், தடுக்கவும் முறையான செயல் திட்டத்தை உருவாக்கி வருகிறது. மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு, உலக சுகாதார மையக் கட்டுபாட்டாளாருக்கு உரிய அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கும் .  எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தடுப்பூசி ஏற்றுமதிக்கான உற்பத்தியை நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளது,” என்று கூறியது.



பாரத் பயோக் டெக் நிறுவனம், கோவாக்சின் என்ற தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) தேசிய வைராலாஜி மையத்துடன் இணைந்து உருவாக்கியது (public-private partnership). 2021, ஜனவரி மாதம் இந்த தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்தது. மேலும், 12-18 வயதுடையவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியைப் பயன்படுத்த, 24 டிசம்பர் 2021 அன்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் அடிப்படையில், 2022 ஜனவரி 3ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள  15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் திட்டம் தொடங்கப்பட்டது.  இந்த பிரிவினருக்கு 'கோவாக்சின்' மட்டுமே செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரத் பயொடேக் நிறுவனம்:  இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் பங்கு  முக்கியமானது என்றாலும், தொடக்கத்திலிருந்தே இந்த நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறது.

உதாரணமாக, 25,800 தன்னார்வலர்களிடம் 3 கட்டமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை அறிக்கைகளை தாக்கல் செய்தது. ஆனால், தடுப்பூசியின் செயல்திறன் குறித்த எந்தவித தரவுகளும் வெளியிடப்படவில்லை. இதனை, பல்வேறு அறிவியல் ஆய்வாளர்களும் கேள்விக்கு உட்படுத்தினர். ஆனால், அவசர கால பயன்பாட்டுக்கு 2ம் கட்ட மனித பரிசோதனையில் பெறப்பட்ட நோய் எதிர்ப்பு திறன் குறித்த தரவுகளே போதுமானது என்று தெரிவித்தனர்.



ஆனால், மத்திய மருத்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு இந்த தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் செயல்திறன் மிக்கது என்று தெரிவித்தனர். மேலும், அவசர சூழலுக்கு கட்டுப்பாடுகளுடன் இந்த தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி அளித்தாலும், இந்நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ளும் பரிசோதனையும் தொடரும் (Clinical Trial Mode) என்று தெரிவித்தனர்.

அடுத்ததாக, உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால பயன்பாடு ஒப்புதலுக்காக பாரத் பயோடெக் நிறுவனம்  2021, ஜூலை மாதம் விண்ணப்பம் செய்தது. ஆனால், இதற்கு ஒப்புதல் வழங்க பல நாட்கள் எடுத்துக் கொண்டது. இறுதியாக, அவசர கால பயன்பாட்டிற்கு உபயோகிக்க நவம்பர் மாதம் தான் ஒப்புதலளித்தது.

இதற்கிடையே, அவசரகால பயன்பாடுக்கு ஒப்புதல் வழங்கக் கோரிய இந்நிறுவனத்தின் விண்ணப்பத்தை பிரேசில் அரசு ரத்து செய்தது.  முன்னதாக, பிரேசிலுக்கு 20 லட்சம் தடுப்பூசிகள் வழங்க  பிரெகிஸா மெடிகாமென்டோஸ், என்விக்சா ஆகிய  நிறுவனங்களுடன் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. ஆனால், இந்த ஒப்பந்தம் முறைகேடானது என்றும், பெரும் ஊழல் பணம் கைமாறியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதனையடுத்து, இரண்டு நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை பாரத் பயோடெக் நிறுவனம் ரத்து செய்தது.

தடுப்பூசி உற்பத்தி - தேவை: 

உலகளாவிய கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலையில் இருந்து இந்தியா கிட்டத்தட்ட மீண்டு விட்டது என்றே சொல்லலாம். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,096 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது, 13,013 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது, பாதிக்கப்பட்டவர்களில் இந்த எண்ணிக்கை 0.03% ஆகும். தினசரி பாதிப்பு விகிதம் 0.24 சதவீதமாக குறைந்துள்ளது. வாராந்திர பாதிப்பு விகிதம் 0.23 சதவீதம் ஆக உள்ளது.



மேலும், இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களில் 98% பேர் முதல் டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர். 83% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டு முழு பாதுகாப்பை பெற்றுள்ளனர். இதனால், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வேகம் வெகுவாக குறைந்துள்ளது.



தடுப்பூசி செலுத்தப்படும் வேகம் இந்தியாவில் குறைந்து வருகிறது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மட்டும் தான் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுவருகிறது. எனவே, உள்நாட்டில் தடுப்பூசியின் தேவைகள் குறையத் தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம்.  இதனடிப்படையில் தான், மற்றும் 13-14 வயதுடையவர்களுக்கும் (2008, 2009 மற்றும் 2010-ஆம் ஆண்களில் பிறந்தவர்களுக்கு, அதாவது ஏற்கனவே 12 வயதை கடந்தவர்களுக்கு) 16 மார்ச் 2022 முதல் தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த வயது பிரிவினருக்கு ஐதராபாதில் உள்ள பயாலஜிக்கல்-இ நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோர்பிவேக்ஸ், தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

ஏற்றுமதி: 

எனவே, பெரு நிறுவனங்களும், இந்திய அரசும்  தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இந்த சூழநிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது, உலகளாவிய தடுப்பூசி விநியோக சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது 14 நாடுகள் கோவாக்சின் தடுப்பூசியை  பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பார்த் பயோடெக் வருமானத்தையும் இது முடக்கும்.
Published by:Salanraj R
First published:

Tags: Covaxin, Covid-19 vaccine, WHO

அடுத்த செய்தி