Home /News /explainers /

ஸ்டார்பக்ஸின் புதிய CE0-வாக பதவியேற்கும் லக்ஷ்மன் நரசிம்மன்.. பின்னணி என்ன?

ஸ்டார்பக்ஸின் புதிய CE0-வாக பதவியேற்கும் லக்ஷ்மன் நரசிம்மன்.. பின்னணி என்ன?

லக்ஷ்மன் நரசிம்மன்

லக்ஷ்மன் நரசிம்மன்

Laxman Narasimhan : லக்ஷ்மன் சக்திவாய்ந்த நுகர்வோர் பிராண்டுகளை உருவாக்குவதில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட ஒரு திறன் மிக்கத் தலைவர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மன் உலகின் சிறந்த காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார். லக்ஷ்மன் நரசிம்மன் ரெக்கிட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.

ரெக்கிட்டின் டியூரெக்ஸ் ஆணுறைகள், என்ஃபாமில் பேபி ஃபார்முலா மற்றும் மியூசினெக்ஸ் குளிர்பானம் ஆகியவற்றையும் தயாரிக்கிறது. முன்னதாக பெப்சிகோவில் அதன் உலகளாவிய தலைமை வணிக அதிகாரியாக பணியாற்றிய 55 வயதான இவர், ஸ்டார்பக்ஸ் நிறுவனரான ஹோவர்ட் ஷுல்ட்ஸுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அக்டோபர் 1 ஆம் தேதி லக்ஷ்மன் நரசிம்மன் நிறுவனத்தில் சேர்க்கப்பட்டார் என்றாலும் ஏப்ரல் 2023 இல் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என்றும் ஸ்டார்பக்ஸ் கூறியது. அதுவரை இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி ஹோவர்ட் ஷூல்ட்ஸ் நிறுவனத்தை வழிநடத்துவார். லக்ஷ்மன் நரசிம்மன் ஏப்ரல் 1 வரை ஹோவர்ட் ஷூல்ட்ஸுடன் இணைந்து ஸ்டார்பக்ஸின் நிர்வாக நடவடிக்கைகளை கவனிப்பார்.

இரண்டாவது முறை ஏவத் தயாராகும் நாசாவின் ஆர்டெமிஸ் 1..

கடந்த ஏப்ரல்-ஜூன் மாதங்களில், சீனாவில் கோவிட் கட்டுப்பாடுகள் ஸ்டார்பக்ஸ் வணிகத்தை மெதுவாக்கியதால், அமெரிக்காவில் வலுவான விற்பனையின் காரணமாக ஸ்டார்பக்ஸ் தேவை அதிகரித்ததாக அறிவித்தது. அதன் செயல் திறனையும் வணிகத்தையும் அதிகரிக்கவே லக்ஷ்மன்னை நியமித்ததாக கூறியது.

"லக்ஷ்மன் சக்திவாய்ந்த நுகர்வோர் பிராண்டுகளை உருவாக்குவதில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட  திறன் மிக்கத் தலைவர்," என்று ஷூல்ட்ஸ் லக்ஷ்மன் நரசிம்மனை வரவேற்று ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

லக்ஷ்மன் நரசிம்மன் யார்?
லக்ஷ்மன் நரசிம்மன் இந்தியாவில் பிறந்து வெளிநாட்டில் குடியுரிமை வாங்கிய இந்திய வம்சாவளி ஆவார்.

நரசிம்மன் இந்தியாவின் புனேவில் வளர்ந்தார். புனேவில் உள்ள பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டமும், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள லாடர் இன்ஸ்டிட்யூட்டில் முதுகலை ஜெர்மன் பட்டம் மற்றும் வார்டன் பள்ளியில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலை பட்டமும் பெற்றார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நிதியில் எம்பிஏ பட்டம் பெற்றார்.

நரசிம்மன் 2012 வரை 19 ஆண்டுகள் மெக்கின்சி( McKinsey) நிறுவனத்தில் பணிபுரிந்தார். அவர்களின் புது தில்லி அலுவலகத்தின் இயக்குநராகவும் இருப்பிட மேலாளராகவும் உயர்ந்தார்.

INS Vikrant : 2 கால்பந்து மைதானத்தை விட பெரிய இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல்

2012 இல், அவர் பெப்சிகோவில் சேர்ந்தார், தலைமை வணிக அதிகாரியாக உயர்ந்தார். அங்கு அவர் அமெரிக்கா, ஆசியா மற்றும் இந்தியாவில் அதன் நுகர்வோர், சில்லறை மற்றும் தொழில்நுட்ப நடைமுறைகளில் கவனம் செலுத்தினார்.

செப்டம்பர் 2019 இல் ராகேஷ் கபூருக்குப் பிறகு அவர் ரெக்கிட் பென்கிசரின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆனார். அதன்பின்னர் அந்த நிறுவனத்தின் உடல்நலம் மற்றும் சுகாதார தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிக்க வலி செய்தார். அவர் பெப்சிகோவில் உலகளாவிய தலைமை வணிக அதிகாரியாகவும் பணியாற்றினார். லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் செயல்பாடுகளை கவனித்து வந்தார்.

கடந்த வியாழனன்று, Reckitt, அதன் CEO பதவியில் இருந்து லக்ஷ்மன் நரசிம்மன் விலகுவதாக அறிவித்தது, அதைத் தொடர்ந்து FTSE-பட்டியலிடப்பட்ட Reckitt இன் பங்குகள் 4 சதவீதம் சரிந்தன. தற்போது உலகின் காபி விற்பனையில் கொடி கட்டிப் பறக்கும் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Coffee

அடுத்த செய்தி