நைஜீரியாவைச் சேர்ந்த கோஸி ஒகேஞ்சோ இவியாலா (Ngozi Okonjo-Iweala) உலக வர்த்தக சபையின் தலைவராக (World Trade Organization) தேர்தெடுக்கப்பட்டுள்ளார். 66 வயதான அவர் மார்ச் 1-ஆம் தேதி முறைப்படி உலக வர்த்தக சபையின் தலைவராக பதவியேற்க உள்ளார். அன்றைய தேதியில் இருந்து அப்பதவியில் நான்கு ஆண்டுகள் பணியாற்ற உள்ளார்.
உலக வர்த்தக சபையில் உறுப்பினர்களாக இருக்கும் 164 நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்களின் ஒருமித்த ஆதரவை கோஸி ஒகேஞ்சோ இவியாலாவுக்கு தெரிவித்தனர். இதன்மூலம், உலக வர்த்தக சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் பெண், முதல் ஆப்பிரிக்கர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
மேலும், அவர் அமெரிக்காவின் இரட்டை குடியுரிமையையும் வைத்திருப்பதால் உலக வர்த்தக சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் அமெரிக்கர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். கொரோனா வைரஸால் உலகளவில் மிகப்பெரிய பொருளாதார சரிவு நீடித்து வருகிறது. உலகமயமாக்கம் மற்றும் முதலாளித்துவத்துக்கு ஆதரவாக உலக வர்த்தக நிறுவனத்தின் செயல்பாடுகள் இருப்பதாக வளரும் நாடுகள் தொடர்ந்து கடுமையான குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர்.
ALSO READ | ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் அப்ளை செய்வது எப்படி?
இத்தகைய சவாலான சூழ்நிலையில், உலகின் மிகப்பெரிய அமைப்பின் தலைமை பொறுப்பை கோஸி ஒகோஞ்சோ ஏற்றுள்ளார். இதுகுறித்து பேசிய ஒகேஞ்சோ, தான் பதவியேற்றவுடன் கொரோனா வைரஸ் தொற்றுகளினால் ஏற்பட்ட விளைவுகளில் முழு கவனத்தையும் செலுத்துவதாக கூறியுள்ளார்.
குறிப்பாக, பொருளாதாரம் மற்றும் சுகாதாரத்துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனக் கூறினார். மேலும், கோவிட் 19 தடுப்பூசிகள் அனைத்து நாடுகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் எனக் கூறிய ஒகேஞ்சோ, அதற்காக தடைகளாக இருக்கும் ஏற்றுமதி கட்டுபாடுகள் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
ALSO READ | உங்கள் ஆதாரில் திருத்தம் செய்யவேண்டுமா? இத மட்டும் பண்ணா நிமிடத்தில் வேலை முடிஞ்சிரும்..
தடுப்பூசிகள் தயாரிப்பை பல நாடுகளில் தயாரிக்க உலக வர்த்தக அமைப்பு ஊக்குவிக்கும் எனத் தெரிவித்தார். உறுப்பு நாடுகளுக்கு இடையில் இருக்கும் ஏற்றுமதி கட்டணங்கள் மற்றும் வர்த்தக தடைகளை நீக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் என கோஸி ஒகேஞ்சோ இவியாலா உறுதியளித்துள்ளார்.
இந்த பகுதியில், குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோய்களின் போது, உலக வணிக அமைப்பால் செய்ய வேண்டிய பணிகளையும் அவர் ஒப்புக் கொண்டார். உலக வர்த்தக அமைப்பில் நியமிக்கப்பட்ட பின்னர், தனது முதல் முன்னுரிமை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவுகள், குறிப்பாக பொருளாதார மற்றும் சுகாதாரத் துறைகளில் கவனம் செலுத்துவதாக இருக்கும் என்று கூறினார்.
கோஸி ஓகோஞ்சோ இவியாலா (Ngozi Okonjo-Iweala) பொருளாதாரம் மற்றும் நிதித்துறையில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் சுமார் 40 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. நைஜீரியாவின் முதல் பெண் நிதியமைச்சராக பதவி வகித்த அவர், அந்த பதவியில் தொடர்ந்து 2 முறை இருந்தவர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.
2003 முதல் 2006 வரை 3 ஆண்டுகளும், 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகளும் நைஜீரியாவின் நிதியமைசராக இருந்தார். அந்நாட்டின் முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அந்த பதவியில் சுமார் 2 மாதங்கள் மட்டுமே இருந்தார். அவரின் திறமையான நடவடிக்கையால் நைஜீரியாவின் கடன் குறைந்தது.
உலக வங்கியுடனும் சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ள கோஸி ஒகேஞ்சோ இவியாலா, அதன் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அவருடைய பணிக்காலத்தில் 181 பில்லியன் டாலர் நிதியை பல்வேறு திட்டங்களுக்காக கையாண்டிருக்கிறார்.
ALSO READ | EPFO செய்துள்ள புதிய மாற்றம்.. PF பணம் எடுக்கமுடியாமல் இருக்கிறீர்களா? இந்த வழியை பின்பற்றுங்கள்..
GAVI (Global Alliance for Vaccines and Immunisation) எனப்படும் தடுப்பூசி மற்றும் நோய்தடுப்புக்கான உலகளாவிய கூட்டமைப்பின் தலைவராக பணியாற்றி, பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு சாதனங்கள் அதிகளவு சென்று சேர காரணமாகவும் இருந்துள்ளார். இத்தகைய அனுபவங்களை கொண்ட கோஸி ஒகேஞ்சோ இவியாலா, உலக வர்த்தக சபையின் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Africa, America, Ngozi okonjo iweala, Woman, World trade organisation