Home /News /explainers /

யார் இந்த தாலிபான்கள்? வலிமை வாய்ந்தவர்களா இவர்கள்?

யார் இந்த தாலிபான்கள்? வலிமை வாய்ந்தவர்களா இவர்கள்?

தாலிபான்

தாலிபான்

Taliban history in Tamil | கடந்த கால ஆட்சியில் இருந்ததை விட தற்போது தாங்கள் மாறிவிட்டதாக காட்ட தாலிபான்கள் முயன்று வருகின்றனர். பெண்கள் கல்வி கற்கலாம் பணிக்கு செல்லலாம் என்று கூறுகின்றனர். அனைவரையும் மன்னித்து விட்டோம், பழி வாங்கும் நடவடிக்கை இருக்காது என்று கூறியுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
தற்போது திரும்பும் பக்கமெல்லாம் ஆப்கானிஸ்தான் மற்றும் தாலிபான்கள் குறித்த பேச்சுதான். சர்வதேச நாடுகள், ஊடகங்கள் ஆகியவை ஆப்கானிஸ்தானில் நிகழும் அடுத்தடுத்த நிகழ்வை உற்று நோக்கி வருகின்றன. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்ற சில வாரங்கள் ஆகும் என அமெரிக்க உளவுத் துறை கணித்திருந்த நிலையில், இவ்வளவு எளிதாக அவர்கள் வெற்றியை சுவைப்பார்கள் என யாருமே நினைக்கவில்லை. ஒரே வாரத்தில் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பியுள்ள இந்த தாலிபான்கள் யார்?

1980ம் ஆண்டுகளில்  தங்கள் நாட்டை வசமாக்க முயண்ற சோவியத் படைகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானை சேர்ந்த  பலரும் போராட்டத்தில் ஈடுபட்டன. இவர்கள் மொத்தமாக முஜாஹிதீன் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் தாலிபான்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். நாடு முழுவதும் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் பிற நாடுகளின் தாக்கங்களை தங்கள் நாட்டில் இருந்து அகற்றுவதுமே  இவர்களின் நோக்கம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த 1996ம் ஆண்டு காபூலை தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.  பெண்கள் தலை முதல் கால் வரை மூடியிருக்கும் ஆடைகளை அணியவேண்டும், பெண்கள் கல்வி கற்கவோ, வேலைக்கு செல்லவோ கூடாது. ஆண் துணை இல்லாமல் தனியாக வெளியே செல்லக்கூடும் என பெண் உரிமை முற்றிலும் பறிக்கப்பட்டன. தொலைக்காட்சி, பாடல்கள், தடை செய்யப்பட்டதோடு இஸ்லாமிய  விடுமுறை அல்லாத பிற விடுமுறை நாட்களுக்கும் தடை விதிக்கப்பட்டன. கல்லறிந்து கொல்லுதல், உடல் உறுப்புகளை வெட்டுதல், பொது இடத்தில் தூக்கில் போடுவது என கடுமையான தண்டனைகள் தாலிபான் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டன.

2001ம் ஆண்டு  செப்டம்பர் 17ம் தேதி  அமெரிக்காவில் அல்கொய்தா நடத்திய வான் தாக்குதல் இந்த நிலையை மாற்றியது. 19 அல்கொய்தா தீவிரவாதிகள் 4 விமானங்களை  கடத்தி  உலக வர்த்தக மையம், பெண்டகன், வாஷிங்டன், பென்சில்வானியா ஆகிய இடங்களில் தாக்குதலை நடத்தினர். 2,700க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர். அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார். தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானில் இருந்து அவர் இந்த தாக்குதல்களை ஒருங்கிணைத்தார்.

இந்த தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாத நடவடிக்கைகளை வேரோடு அழிக்க உறுதியேற்ற அமெரிக்கா, அதற்கான நடைமுறைகளில் இறங்கியது. ஆப்கானிஸ்தானை அமெரிக்கா குறிவைக்க காரணமே அல்கொய்தா தான்,  அமெரிக்காவில் தாக்குதல் நடைபெற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே அமெரிக்கா மற்றும் அதன் நேசப் படைகள் ஆப்கானிஸ்தான் மீது படை எடுத்தன. அல்கொய்தாவுக்கு தாலிபான்கள் உதவி செய்வதை தடுத்து நிறுத்தவும் ஆப்கானிஸ்தானை தங்களின் புகழிடமாக அல்கொய்தா பயன்படுத்துவதை தடுக்கவுமே அந்நாட்டின் மீது படை எடுத்ததாக அமெரிக்கா தெரிவித்தது.

அமெரிக்க படையெடுப்பால் தங்கள் ஆட்சியை இழந்த தாலிபான், அமெரிக்க மற்றும் அதன் நேச நாடுகளுக்கு எதிரான தாக்குதலை தொடங்கியது

தாலிபான்


தாலிபான் தலைவர்கள்

மௌலவி ஹிபதுல்லா அகுந்ஸாதா தாலிபான் இயக்கத்தின் முன்னாள் தலைமை நீதிபதி. 2016ம் ஆண்டு முதல் தாலிபான் இயக்கத்தின் தலைவர்,  அரசியல், மதம் மற்றும் ராணுவ விவகாரங்களில் முடிவெடுக்கும் அங்கீகாரம் படைத்தவராக உள்ளார்.

தலிபான் அமைப்பை நிறுவி அதன் முதல் தலைவராக இருந்தவர் முல்லா முகமது உமர் என்பவர். இவரின் தலைமையில் தான் 1996ல் முதல்முறையாக தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது. பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் முல்லா முகமது உமர் பலியானார்.

மற்றொரு முக்கிய தலைவர் முல்லா அப்துல் கனி பரதர், தாலிபான் இயக்கத்தை தோற்றுவிற்றவர்களில் ஒருவரான பரதர்,  அந்த அமைப்பின் அரசியல் குழுவை கவனித்து வருகிறார். அண்மையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சரையும் பரதர் சந்தித்து பேசியுள்ளார்.

தாலிபான்களும் டொனால்ட் டிரம்பும்

2017ம் ஆண்டு அமெக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும் தாலிபான்கள் அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினர். அதில், தங்கள் நாட்டில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெற வேண்டும் என்று கோரியிருந்தனர்.  எனினும் இந்த விவகாரத்தில் முடிவு எட்டப்படாமலேயே இருந்தது. இறுதியாக கடந்த ஆண்டு தாலிபான்கள் மற்றும் டிரம்ப் அரசாங்கத்துக்கு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

தங்கள் படைகளை விலக்கி கொள்வதாகவும் 5000 தாலிபான் கைதிகளை விடுவிப்பதாகவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டது. அதேபோல், தங்கள் மண்ணில் இருந்து அல்கொய்தாவோ வேறு அமைப்புகளோ அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக தாலிபான்கள் ஒப்புக்கொண்டனர். எனினும், இந்த அமைதி ஒப்பந்தம் அமைதியை ஏற்படுத்தவில்லை.

தலிபான் தலைவர்கள்


கடந்த 2 தசபங்களில் ஆப்கானிஸ்தானில் வன்முறை அதன் உச்சத்தை தொட்டுள்ளது. தங்கள் ஆதிக்கத்தை அதிகரித்த தாலிபான்கள் இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் 60%- 70% பகுதிகளில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு குழு அறிக்கையின் மூலம் தெரியவந்தது. மேலும் அமைதியை ஏற்படுத்துவதில் தாலிபான்களுக்கு விருப்பம் இல்லை என்பதும் தங்களின் படை பலத்தை அதிகரிப்பதிலேயே அவர்கள் கவனம் செலுத்துவது குறித்தும் இந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டது.

தாலிபான்களின் தேவை என்ன?

கடந்த கால ஆட்சியில் இருந்ததை விட தற்போது தாங்கள் மாறிவிட்டதாக காட்ட தாலிபான்கள் முயன்று வருகின்றனர். சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அமைதி நடவடிக்கைகளுக்கு முயற்சி, அனைவரையும் இணைத்த அரசாங்கம்,  பெண்களுக்கு உரிமை என பலவற்றுக்கும் அவர்கள் உத்தரவாதம் வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானில் மீண்டும் பள்ளிக்கு செல்ல தொடங்கிய சிறுமிகள்!


தலிபான் செய்தித் தொடர்பாளர் சொஹைல் ஷாஹீன் கூறுகையில், பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படுவர் என்றும்  தூதரக அதிகாரிகள்,  செய்தியாளர்கள், என்.ஜி.ஓ.நபர்கள் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பணியாற்றலாம் என்றும் அவர் கூறியுள்ளார். எனினும், தாலிபான்களின் முந்தைய ஆட்சியின் இருண்ட காலம் மீண்டும் திரும்பலாம் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் உட்பட பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

வலிமை பொருந்தியவர்களா தாலிபான்கள்

அமெரிக்கா தனது படைகளை விலக்கிக்கொண்ட பின்னர் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்ற சில மாதங்களாவது ஆகும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு மாறாக சில நாட்களிலேயே மொத்த ஆப்கானிஸ்தானையும் தாலிபான்கள் கைப்பற்றினர். இதற்கு தாலிபான் வலிமையானவர்கள் என்பதை ஆப்கான் படையினர் மிகவும் பலவீனமானவர்கள் என்பதே பொருத்தமான காரணமாக இருக்கும்.

ஆப்கான்ஸ்தானில் பல லட்சம் டாலர்களை அமெரிக்கா செலவு செய்துள்ளது. அந்நாட்டு வீரர்களுக்கு பயிற்சி வழங்கியதோடு அல்லாமல் நவீன கருவிகளையும் வழங்கியது. தாலிபான் இயக்கத்தில் ஒரு லட்சம் பேர் வரை இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், ஆப்கான் படையில்  3 லட்சம் பேர் வரை இருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை கூறுகிறது.

மேலும் படிக்க: அமெரிக்க ராணுவத்தின் பயோமெட்ரிக் கருவியை கைப்பற்றிய தாலிபான்கள்: அச்சத்தில் ஆப்கான் வீரர்கள்!


எனினும், தாலிபான்கள் மீதான அச்சம் காரணமாக ஆப்கானிஸ்தான் அரசப் படைகள் போரிடாமலேயே சரணடைந்தனர். பல முக்கிய பகுதிகளை எவ்வித தாக்குதலும் நடத்தாமலெயே தாலிபான்கள் கைப்பற்றினர்.  ஆப்கானிஸ்தான் படைகளில் இருந்து கணிசமான ஆயுதங்களை தாலிபான்கள் தங்கள் வசம் கொண்டுவந்ததும் இந்த பயத்துக்கு முக்கிய காரணம்.  அமெரிக்கா செலவளித்த பணம் விழலுக்கு இறைத்த நீர்போல வீணானது.

சீனா, ரஷ்யா போன்றவை தாலிபான்களுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறியுள்ள போதிலும் தாலிபான்கள் தலைமையிலான அரசை தாங்கள் அங்கீகரிக்கப்போவதில்லை என கனடா தீர்மானமாக கூறியுள்ளது. பிற நாடுகளின் நிலைப்பாடு தாலிபான்களின் நடவடிக்கையை பொறுத்தே அமையும். எனவே, ஆப்கானிஸ்தான் குறித்த பல நாடுகளின் தற்போதைய கருத்து ‘காத்திருப்போம்’ என்பதுதான்.
Published by:Murugesh M
First published:

Tags: Afghanistan, News On Instagram, Taliban

அடுத்த செய்தி