முகப்பு /செய்தி /Explainers / Explainer : கோவிஷீல்ட், கோவாக்சின் அல்லது ஸ்புட்னிக் வி - எந்த தடுப்பூசி சிறந்தது?

Explainer : கோவிஷீல்ட், கோவாக்சின் அல்லது ஸ்புட்னிக் வி - எந்த தடுப்பூசி சிறந்தது?

நேச்சர் என்ற விஞ்ஞான இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் நீடிக்கும் நோயெதிர்ப்பை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்பதைக் கண்டறிந்தது. அதன் கண்டுபிடிப்புகளை முடிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், தடுப்பூசிகளால் கிடைக்கும் வாழ்நாள் பாதுகாப்பைக் குறிக்கும் முதல் ஆய்வு இதுவாகும்.

நேச்சர் என்ற விஞ்ஞான இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் நீடிக்கும் நோயெதிர்ப்பை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்பதைக் கண்டறிந்தது. அதன் கண்டுபிடிப்புகளை முடிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், தடுப்பூசிகளால் கிடைக்கும் வாழ்நாள் பாதுகாப்பைக் குறிக்கும் முதல் ஆய்வு இதுவாகும்.

கோவாக்சின் தடுப்பூசி சுமார் 78% பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த தடுப்பூசி கடுமையான அறிகுறிகளையும் இறப்பையும் நிறுத்த 100% பயனுள்ளதாக இருக்கும்.

  • Last Updated :

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மே 1 முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தடுப்பு மருந்து போதுமான அளவு கையிருப்பில் இல்லாததால் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது. நிலைமை சீரானதும் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்துவதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளன. பெரும்பாலானோர் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உடலில் செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டினாலும், ஒரு சிலர் வயது தகுதி இருந்தும் தடுப்பூசி போட்டு கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதற்கு தடுப்பூசி பற்றி வெளியாகியுள்ள எதிர்மறை தகவல்களே காரணமாக உள்ளது. தடுப்பூசி போடு கொண்டால் இறக்க நேரிடும் என்ற ரீதியிலான தகவல்கள் பலரை அச்சம் கொள்ள செய்துள்ளன.

முதல் அலையை காட்டிலும், வைரஸ் தொற்று தீவிரமாக இந்த இரண்டாவது அலையில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது நம் நாட்டில் புழக்கத்தில் உள்ள தடுப்பூசிகள் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது. நாட்டில் இதுவரை சீரம் நிறுவனத்தின் தயாரிப்பான கோவிஷீல்ட், பாரத் பயோடெக் தயாரிப்பான கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன.

சமீபத்தில் மூன்றாவது தடுப்பூசியாக ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்தது. இதனை தொடர்ந்து ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் இறக்குமதி செய்ய டாக்டர் ரெட்டிஸ் லெபாரட்ரிஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. முதற்கட்டமாக இரு நாட்களுக்கு முன் ஹைதராபாத்திற்கு ரஷ்ய நாட்டின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் வந்தன. கொரோனா அச்சுறுத்தலை எதிர்த்து போராட இந்த மூன்று தடுப்பூசிகளும் நாட்டில் பயன்படுத்தப்பட உள்ளன.

corona vaccine, covaxine, covishield

கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் அல்லது ஸ்புட்னிக்-வி இவை மூன்றில் எந்த தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற விவாதம் இப்போது பொதுவில் உள்ளது. இதில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 16 முதல் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், இந்த மூன்று தடுப்பூசிகளுமே கொரோனா வைரஸால் ஏற்படும் தொற்றுநோயை சமாளிக்க சுமார் 90 சதவீதத்திற்கும் மேல் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறி உள்ளார்கள். அதனால்தான் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் எந்த தடுப்பூசிகள் கிடைத்தாலும் அதை போட்டு கொள்வதற்கு முன்னுரிமை கொடுங்கள் என்று கூறுகிறார்கள்.

பொதுவாக இங்கே எழும் கேள்வி என்னவென்றால் மூன்றில் எது சிறந்த தடுப்பூசி?

மூன்று தடுப்பூசிகளுமே சிறந்த பலனை வழங்க கூடியவையே. நீங்கள் வசிக்கும் பகுதியில் கிடைக்கும் இந்த 3 தடுப்பூசிகளில் ஒன்றை போட்டு கொள்வதில் தயக்கம் சிறிதும் இன்றி செயல்படலாம். இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் நாட்டில் துவங்கிய தடுப்பூசி இயக்கத்தில் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பு மருந்துகள் முதற்கட்டமாக செலுத்தப்பட்டன. அப்போதிலிருந்தே இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கோவாக்சின் இந்தியாவில் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் கோவிஷீல்ட் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) ஆகியவை இணைந்து உருவாக்கியது. இது புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் (serum Institute of India) தயாரிக்கப்படுகிறது.

Moderna Covid Vaccine

நன்மைகளில் வேறுபட்டவை..

இந்நிலையில் தான் இந்தியாவின் கொரோனாவிற்கு எதிரான போரில் மே 1 அன்று, ரஷ்ய தடுப்பூசி ஸ்பூட்னிக் வி இணைந்தது. இந்த தடுப்பூசி ரஷ்ய வளர்ச்சி மற்றும் முதலீட்டு நிதியத்தின் (ஆர்.டி.ஐ.எஃப்) உதவியுடன் மாஸ்கோவின் கமாலியா ஆராய்ச்சி நிறுவன தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனத்தில் (Gamaleya Research Institute of Epidemiology and Microbiology) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டியின் ஆய்வகத்தின் மேற்பார்வையில் இந்தியாவில் உள்ள ஆறு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. துவக்கத்தில்1.25 கோடி அளவுகள் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த 3 தடுப்பூசிகளும் சில வழிகள் மற்றும் நன்மைகளில் வேறுபட்டவை. கோவிஷீல்ட் என்பது உலகின் மிக பிரபலமான தடுப்பூசி ஆகும். இது அதிகபட்ச நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. WHO கூட இந்த தடுப்பூசியைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. அதே நேரத்தில், கோவாக்சின் இந்தியாவில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது உருமாறிய வைரஸினை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த தடுப்பூசிகளில் ஒன்றாக தற்போது உருவெடுத்துள்ளது. அதே வழியில், ஸ்புட்னிக் வி இந்தியா உட்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகளின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.

இந்த தடுப்பூசிகள் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன.?

* பொதுவாக தடுப்பூசி என்பது நோயெதிர்ப்பு நினைவகத்தை செயற்கையாகத் தூண்டும் ஒரு முறை. கோவாக்சின் தடுப்பூசியை பொறுத்தவரை வழக்கமான ஒரு தடுப்பூசிகள் செயல்முறையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், இறந்த வைரஸ் உடலில் செலுத்தப்படுகிறது. இது ஆன்டிபாடி பதிலை உருவாக்குகிறது. இதனால் உடல் வைரஸை அடையாளம் கண்டு அதை எதிர்க்க தேவையான ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது.

corona vaccine

* கோவிஷீல்ட் ஒரு வைரல் வெக்டார் தடுப்பு மருந்து. இந்த தடுப்பூசி சிம்பன்ஸியில் காணப்படும் அடினோவைரஸ் ChAD0x1-ஐ பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது. சிம்பன்ஸிகளை பாதிக்கும் இந்த வைரஸில் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் உதவியுடன், கொரோனா வைரஸ் போல தோற்றமளிக்கும் ஒரு ஸ்பைக் புரதம் உருவாக்கப்பட்டுள்ளது. இது உடலில் செலுத்தப்படும்போது பாதுகாப்பைத் தூண்டுகிறது.

* ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் ஒரு வைரல் வெக்டார் தடுப்பு மருந்து தான். இது அடினோ வைரஸின் மாற்றி அமைக்கப்பட்ட மரபணுவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி. ஒரே வித்தியாசம் என்னவென்றால், ஒன்றுக்கு பதிலாக, இது 2 வைரஸ்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

COVID-19 Vaccination: கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டுமா..? உங்கள் சந்தேகங்களுக்கான மருத்துவரின் விளக்கம்

எவ்வளவு இடைவெளி & எத்தனை டோஸ் தேவை?

மூன்று தடுப்பூசிகளுமே இரட்டை டோஸ் தடுப்பூசிகள். நோயெதிர்ப்பு மறுமொழிக்கு தடுப்பூசிகளின் முழு பலனையும் பெற இரண்டு டோஸ்களை அவசியம் போட்டு கொள்ள வேண்டும் என்பதே இதன் பொருள். இந்த தடுப்பூசிகள் உள்ளார்ந்த தசைகள், அதாவது அவை கையில் தோள்பட்டைக்கு அருகில் செலுத்தப்படுகின்றன. கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ் 4 முதல் 6 வாரங்களுக்குள் எடுக்கப்பட வேண்டும். 6 முதல் 8 வாரங்கள் இடைவெளியில் கோவிஷீல்டின் இரண்டு டோஸ்களை எடுத்து கொள்ள வேண்டும். இந்தியாவில் கோவிஷீல்டிற்கு ஆரம்பத்தில் 4 முதல் 6 வார இடைவெளி வைக்கப்பட்டது. ஆனால் 2 டோஸ்களுக்கு இடையிலான நாட்கள் கொஞ்சம் அதிகம் இருந்தால் கோவிஷீல்ட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டது. இதனை அடுத்தே இரு டோஸ்களுக்கு இடையே 6 முதல் 8 வாரங்கள் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு வைக்கப்பட்டது.

covid vaccine

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் 2 டோஸ்களை பெற 3 வார இடைவெளி தேவை என கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று தடுப்பூசிகளும் இந்திய அமைப்பில் பயனுள்ளதாக இருக்கும். இவற்றை 2 முதல் 8 டிகிரி செல்சியஸில் சேமித்து வைக்க முடியும். இதனுடன் ஒப்பிடுகையில், அமெரிக்கா உட்பட பல நாடுகளில், ஃபைசர் மற்றும் மாடர்னாவின் எம்.ஆர்.என்.ஏ (மெசெஞ்சர் ஆர்.என்.ஏ) தடுப்பூசிகளின் தடுப்பூசிக்கு -70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படுகிறது.

எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?

இந்த மூன்று தடுப்பூசிகளு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்து. WHO நிர்ணயித்துள்ள அனைத்து அளவுருக்களையும் இவை நிறைவேற்றுகின்றன. இந்த தடுப்பூசிகளின் செயல்திறன் இன்னும் சோதனை செய்யப்பட்டு தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது.

* கோவிஷீல்டு தடுப்பூசி சுமார் செயல்திறன் விகிதம் 70 சதவீதத்திற்கும் மேல் செயல்திறன் கொண்டதாக அறியப்படுகிறது. இதன் இரு டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகரித்தால் இதன் செயல்திறனும் சற்று அதிகரிக்கிறது. இந்த தடுப்பூசி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அறிகுறிகளிலிருந்து காப்பாற்றுவது மட்டுமல்லாமல், மீட்கும் நேரத்தையும் குறைக்கிறது.

* கோவாக்சின் தடுப்பூசி சுமார் 78% பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த தடுப்பூசி கடுமையான அறிகுறிகளையும் இறப்பையும் நிறுத்த 100% பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

* இந்த அளவில் இந்தியாவின் மிகவும் பயனுள்ள தடுப்பூசி தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் வி. ஏனென்றால் மாடர்னா மற்றும் ஃபைசரின் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் மட்டுமே 90% க்கும் அதிகமான செயல்திறனை நிரூபித்துள்ள தடுப்பூசிகள். இவற்றிற்கு பிறகு, ஸ்புட்னிக் வி 91.6% க்கும் அதிகமான செயல்திறன் விகிதம் உடைய மிகவும் பயனுள்ள தடுப்பூசி ஆகும்.

ஆக மொத்தம் இந்த மூன்று தடுப்பூசிகளும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதன் மூலம் ஏற்படும் உயிரிழப்பை முற்றிலும் நிறுத்த உதவுகின்றன. 2 டோஸ் எடுத்த பிறகு, உங்கள் உடலில் பல ஆன்டிபாடிகள் உருவாகின்றன, அவை தொற்றுநோய்களை திறம்பட எதிர்த்துப் போராடுகின்றன. 2 டோஸ்களை பெற்ற பிறகும் நீங்கள் தொற்று நோய்க்கு ஆளானால் அது சாதாரண குளிரை விட மேலும் அதிகரிக்காது, பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று குறிப்பிடுகின்றனர் சுகாதார நிபுணர்கள்.

First published:

Tags: Corona Vaccine, CoronaVirus, Covaxin, Covid-19, Covishield