Home /News /explainers /

ஆதீனத்திற்கு பல்லக்கு தூக்குவது எங்கிருந்து தோன்றியது? முதலில் பல்லக்கை பயன்படுத்தியது யார்?

ஆதீனத்திற்கு பல்லக்கு தூக்குவது எங்கிருந்து தோன்றியது? முதலில் பல்லக்கை பயன்படுத்தியது யார்?

தருமபுரம் ஆதினம்

தருமபுரம் ஆதினம்

ஆதீன கர்த்தாக்களுக்கு பல்லக்கு தூக்கும் முறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது எங்கிருந்து தோன்றியது, முதன்முதலில் பல்லக்கை பயன்படுத்தியது யார்?

    சிவபெருமானை முழுமுதற்கடவுளாக முன்னிறுத்தி வழிபடுவது சைவ சமயம். சைவ சித்தாந்தத்திற்கு அடிப்படையாக விளங்குவது ஆகமங்களும், வேதங்களும். இவற்றை கற்றுக் கொடுப்பதற்கும், சைவ சமயத்தை வளர்ப்பதற்கும் உருவாக்கப்பட்டதே ஆதீனங்கள். அத்துடன் கோயில்களை நிர்வகிப்பதும், அதன் சொத்துகளை பராமரிப்பதும் ஆதீனங்களின் அறப்பணி. ஆதீனத்தின் ஆதிகால பெயர் மடங்களே. உரிமை என்ற பொருள் தரும் சமஸ்கிருத சொல்லே ஆதீனம்.

    சைவ சமயத்தை வளர்க்க அரசர்கள் முதல் அன்றாட கூலிகள் வரை கொடுத்த அறக்கொடைகள் மூலம் உருவாக்கப்பட்டதே ஆதீனங்கள். தமிழ்நாட்டில் அந்தந்த மடங்கள் அமைந்துள்ள இடங்களின் பெயரைக் கொண்டே அழைக்கப்படுகின்றன ஆதீனங்கள். மதுரை ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் என தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்களின் எண்ணிக்கை 56.

    முதன்முதலில் ஆதீனத்தை தோற்றுவித்தவர் அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர். மூன்று வயதிலேயே தெய்வக்களையுடன் தெவிட்டாத தேனமுது பாடல்களால் சிவனை பூசித்தவர் திருஞானசம்பந்தர். 5ஆம் நூறாண்டில் வாழ்ந்த அவர், மதுரை ஆதீனத்தை தோற்றுவிக்க காரணமாக இருந்தவர் கூன் பாண்டிய மன்னன். சைவத்தையும் தமிழையும் மதுரையில் நிலைநாட்டிய திருஞானசம்பந்தரின் வழியில் திருவாவடுதுறை, தருமபுரம், காஞ்சி என ஆங்காங்கே தோற்றுவிக்கப்பட்டன ஆதீனங்கள்.

    Also read : என் உயிருக்கு ஆபத்து... பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்திக்க உள்ளேன் - மதுரை ஆதீனம்

    இந்த ஆதீனங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும், ஏராளமான கோயில்களும் உரிமை. சொத்துகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை கோயில் பராமரிப்புக்கும், சைவ சமய வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும் என்பதே விதி. சைவ சமயத்தை வளர்ப்பதற்காக ஏற்பட்ட சைவ மடங்கள், தமிழ் வளர்ச்சிக்கு செய்த பங்கு அளப்பரியது. மடங்களில் தங்கி பலருக்கும் தமிழ் நூல்களை கற்பித்த புலவர்கள் ஏராளம்.

    திருவாவடுதுறை, தருமபுரம் தொடங்கி பல மடங்களில் வாழ்ந்த புலவர்கள் இயற்றிய நூல்கள் பல இலக்கிய வாழ்வு கொண்டவை. திருஞானசம்பந்தரை பின்பற்றி தமிழ் இலக்கியங்களில் கவனம் செலுத்திய ஆதீன கர்த்தாக்கள், அவ்வாறே பின்பற்றியதுதான் பல்லக்கு முறை. சிறு வயது முதல் பதிகங்களைப் பாடி பல்வேறு ஊர்களைச் சுற்றிவந்தார் திருஞானசம்பந்தர். அவருக்கு, கடலூர் மாவட்டம் திருவரத்துறை பகுதி மக்கள் கொடுத்த அன்பு பரிசு பல்லக்கு. அன்று முதல் பல்லக்கை பயன்படுத்தியே பயணங்களை மேற்கொண்டார் திருஞானசம்பந்தர்.

    மதுரை மடாதிபதியாக மாறிய பின்னரும் மாறவில்லை அவரது பழக்கம் ஆனால், மடாதிபதி என்றாலே பல்லக்கில்தான் பயணம் செய்ய வேண்டும் என்று மாற்றிக் கொண்டனர் அதன்பிறகு வந்த ஆதீன கர்த்தாக்கள்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Dharmapuram Aadheenam, Madurai Adhinam

    அடுத்த செய்தி