Explainer: விஸ்கி, ஸ்காட்ச் மற்றும் போர்பன் இவற்றுக்கு இடையே உள்ள உண்மையான வித்தியாசம் என்ன?

Explainer: விஸ்கி, ஸ்காட்ச் மற்றும் போர்பன் இவற்றுக்கு இடையே உள்ள உண்மையான வித்தியாசம் என்ன?

மாதிரி படம்

விஸ்கி என்பது புளித்த தானிய மேஷ் (பார்லி, சோளம், கம்பு அல்லது கோதுமை) ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் வடிகட்டப்பட்ட மதுபான வகையாகும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மதுப்பிரியர்கள் அதிகம் விரும்பும் ரகங்களில் ஸ்காட்ச் விஸ்கி மற்றும் போர்பன் விஸ்கி ஆகியவற்றிற்கு தனி இடம் உண்டு. இவை ஒரே மாதிரியானவை தானா அல்லது இவற்றுக்கு இடையில் இருக்கும் வித்தியாசங்கள் என்ன என்று யோசித்ததுண்டா?

விஸ்கி என்பது புளித்த தானிய மேஷ் (பார்லி, சோளம், கம்பு அல்லது கோதுமை) ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் வடிகட்டப்பட்ட மதுபான வகையாகும். விஸ்கி இது பீர் போலல்லாமல் தீவிர ஆல்கஹால் தன்மை உடையது. விஸ்கிகள் பல வடிவங்களில் வருகின்றன.

விஸ்கி பல ரகங்களில் வந்தாலும் உண்மையில் அவற்றை வேறுபடுத்தி காட்டுவது என்னவென்றால்,எந்த நாட்டில் தயாரிக்கப்படுகிறது, அதை வடிகட்டும் செயல்முறை மற்றும் விஸ்கி தயாரிக்க பயன்படுத்தப்படும் தானியங்கள் உள்ளிட்டவை ஆகும்.

Whiskey அல்லது Whisky.?

மேலே இருக்கும் விஸ்கி ஸ்பெல்லிங்கில் எது சரி என்று யோசிக்க வேண்டாம். இரண்டுமே சரி தான். ஐரிஷ் மற்றும் அமெரிக்கர்கள் விஸ்கியை ஒரு "e" உடன் உச்சரிக்கிறார்கள். அதே நேரத்தில் ஸ்காட்டிஷியர்கள் "e" ஐ சேர்ப்பதில்லை. கனடா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட உலகின் பெரிய விஸ்கி தயாரிப்பாளர்களும் ஸ்காட்டிஷ்யர்களை போல Whisky என்பதையே பின்பற்றுகிறார்கள். உலகின் பிற பகுதிகளும் இதையே பின்பற்றுகின்றன.

விஸ்கி என்பது ஒரு பரந்த வகை மது பானமாகும். நிறம், சுவை மற்றும் வாசனை ஆகியவற்றில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. விஸ்கி உலகம் என்பது ஸ்காட்ச், போர்பன், ஜாப்னிஸ், ஐரிஷ், டென்னசி, கனடியன், கம்பு விஸ்கி மற்றும் பலவிதமான பாணிகளால் நிரம்பியுள்ளது. இவற்றின் விலை தரத்தை பிரதிபலிக்கும் வகையில் மிக அதிகமாகவும் இருக்கின்றன. குறைந்த விலை முதல் இடைப்பட்ட விலை கொண்ட விஸ்கி ரகங்களும் புழக்கத்தில் உள்ளன.

ஸ்காட்ச்:

இதில் பல நூறு ஆண்டுகளாக பிரபலமாக இருக்கும் ஒரு ரகம் ஸ்காட்ச் ஆகும். இதன் தனித்துவ சுவை இதன் பிரபலத்திற்கு காரணம். பெரும்பாலான மக்கள் விஸ்கியை நினைக்கும் போது அவர்கள் ஸ்காட்லாந்தையும் நினைக்கிறார்கள். ஸ்காட்ச் என்பது ஸ்காட்லாந்து நாட்டில் விளையும் மால்ட் அல்லது தானியத்துடன் தயாரிக்கப்படும் விஸ்கியின் ஒரு பாணி. ஸ்காட்லாந்தில் விஸ்கி தயாரிப்பது மிகவும் தீவிரமான பணியாக செய்யப்படுகிறது.

ஸ்காட்ச் பெரும்பாலும் மால்ட் செய்யப்பட்ட பார்லியிலிருந்து தயாரிக்கப்பட்டு ஓக் பீப்பாய்களில் பதப்படுத்தப்பட்டு சில செயல்முறைகளுக்கு பின் விற்பனைக்கு வருகிறது. தங்கள் மது தயாரிப்பை ஸ்காட்ச் என்று அழைக்க விரும்பும் டிஸ்டில்லர்கள், ஸ்காட்லாந்தில் தங்கள் விஸ்கியை தயாரிக்க வேண்டும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது மற்ற விஸ்கிகளை போல, போதை ஏறுவதற்காக குடிக்கும் ஒன்று அல்ல. ஸ்காட்ச் குடிப்பவர்கள் அதன் ஆற்றல், விலையுர்ந்த மற்றும் பாரம்பரியத்தை அனுபவிப்பார்கள்.இரவு உணவுக்கு பின் ஒரு சிப் அடிக்க மிகவும் சிறந்த ஒன்றாக இருக்கிறது ஸ்காட்ச்.

போர்பன்:

அமெரிக்காவின் தனித்துவமான தயாரிப்பு இந்த "போர்பன்' விஸ்கி. எல்லா போர்பனும் விஸ்கி தான், ஆனால் எல்லா விஸ்கியும் போர்பன் அல்ல. இதன் உண்மையான அர்த்தம் போர்பன் விஸ்கி குடிப்பவருக்கு நன்கு புரியும். ஒரு விஸ்கியை போர்பன் ரகம் என்று அழைக்க, அதன் மேஷ் (தயாரிப்பு வடிகட்டப்பட்ட தானியங்களின் கலவை) குறைந்தது 51% சோளத்தைக் கொண்டிருக்க வேண்டும். போர்பனின் தனித்துவமான தன்மை அதன் செய்முறையில் 51 முதல் 79 சதவீதம் சோளத்திலிருந்து வருகிறது.

Also read... அமெரிக்காவில் உடை அவிழ்வதைக் கூட கவனிக்காமல் திருட்டில் ஈடுபட்ட பெண்!

மீதமுள்ள சதவீத மேஷிற்கு வழக்கமான மால்ட் பார்லி மற்றும் கம்பு அல்லது கோதுமை ஆகியவற்றால் நிரப்பப்படும். பின் இந்த கலவை எரிந்த ஓக் கொள்கலன்களில் சேமிக்கப்படும். போர்பன் விஸ்கியில் கலருக்காக கேரமல் பயன்படுத்தப்படாது. கேரமல் பயன்படுத்தினாலே அந்த விஸ்கியை போர்பன் என்று சொல்ல முடியாது. போர்பனில் சேர்க்கக்கூடிய ஒரே விஷயம் தண்ணீர். பல விஸ்கி காக்டெயில்களில் போர்பன் ஸ்பிரிட் இடம்பெற்றுள்ளது.

போர்பான்கள் ஏராளமான சோளத்தால் ஆனவை, அவை மகிழ்ச்சிகரமான இனிப்பான சுவையை கொண்டுள்ளன. இந்த தனி சுவையை பெரும்பாலான பார்லி மற்றும் கம்பு அடிப்படையிலான விஸ்கிகளில் காண முடியாது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: