Home /News /explainers /

Covid-19 Mutation : XE கொரோனா மாறுபாடு என்றால் என்ன? 4வது அலையை உருவாக்குமா?

Covid-19 Mutation : XE கொரோனா மாறுபாடு என்றால் என்ன? 4வது அலையை உருவாக்குமா?

சீனா

சீனா

XE Corona Variant | ஒமைக்ரான் தொற்றின் உட்பிரிவுகளான பிஒய்.1, பிஒய்.2 ஆகியவற்றின் மறுசீரமைப்பே, XE மாறுபாடு ஆகும்

தென்னாப்பிரிக்கா  நாட்டுக்கு பயண வரலாறு கொண்ட  50 வயது பெண் ஒருவருக்கு  'XE' என்ற  கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு  கண்டறியப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், இந்த செய்தி பலரையும்  அதிர்ச்சியில்  ஆழ்த்தியுள்ளது.

வைரஸ் மாறுபாடுகளை புரிந்து கொள்ளுதல்: 

அனைத்து வைரஸுகளுமே காலப் போக்கில் மாற்றமடையும். இதைத் திரிபு (Mutations) என்று அறிவியலாளர்கள் சொல்கின்றனர். அதிலும், சார்ஸ்- கோவிட்-19 (கொரோனா வைரஸ்) ஆர்என்ஏ மரபணுக்களைக்  கொண்டுள்ளது. ஆர்என்ஏ மரபியல் பொருள் விரைவாகவும் அதிகமாகவும் மாற்றம் அடைந்து கொண்டேயிருக்கும் என்று கூறப்படுகிறது. உண்மையில், ஆர்என்ஏ மரபியல் வைரஸ்களை வகைப்படுவதுத்துவது  மிகவும் கடினம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அந்த வகையில், 2019ம் சீனாவில் கண்டறியப்பட்ட சார்ஸ்-கோவிட்- 19 எனும் வைரஸ்  நூற்றுக்கணக்கான பிறழ்வுகளை கொண்டுள்ளது. இதில், சில மாறுபாடுகள் மட்டும் அதிவேகமாக பரவக்கூடிய தன்மை கொண்டதாகவும், மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை தாக்கி அழிக்கும் தன்மை பெற்றதாகும் உள்ளன.

அவற்றில், 2020 அக்டோபர் மாதம் மகாராஷ்டிராவில்  முதன்முறையாக கண்டறியப்பட்ட (B.1.617- டெல்டா வகை) இந்தியாவில் இரண்டாவது அலை உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. மனிதர்களிடையே இந்த தொற்று வகை அதிவேகமாகப் பரவியது. நுரையீரல் போன்ற உறுப்புகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மிகப்பெரிய நெருக்கடியை இந்திய சந்தித்தது.  தற்போது வரை, டெல்டா வகை மிகவும் கவலையளிக்கக் கூடியதாக (Variation Of Concern) வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த டெல்டா வகை வைரஸ் B1.617.1, B.1.617.2, B.1.617.3 என்ற மூன்று உட்பிரிவுகளை கொண்டதாக இருந்தது. இதில், B.1.617.2 உட்பிரிவு  (Delta Plus) மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக உலக சுகாதார மையம் வகைப்படுத்தியது.









































WHO label Pango  
lineage
Earliest documented  
samples 
Date of designation 
AlphaB.1.1.7United Kingdom,
Sep-2020


VOC: 18-Dec-2020

Previous VOC: 09-Mar-2022
BetaB.1.351South Africa,
May-2020


VOC: 18-Dec-2020

Previous VOC: 09-Mar-2022
GammaP.1Brazil,
Nov-2020


VOC: 11-Jan-2021

Previous VOC: 09-Mar-2022
DeltaB.1.617.2 India,Oct-2020

 VOI: 4-Apr-2021

VOC: 11-May-2021
OmicronB.1.1.529Multiple countries, Nov-2021VOC: 26-Nov-2021

ஒமைக்ரான் தொற்று: 

இது சார்ஸ் – கோவ்-2-வின் உருமாறிய புதிய வகை ஆகும் (B.1.1.529 அல்லது ஒமைக்ரான்). இது,  2021 நவம்பர் 24 அன்று முதன் முதலாக  தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அதிவேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை தாக்கி அழிக்கும் தன்மை பெற்றதாகவும் பார்க்கப்பட்டது. எனவே, இதனை கவலையளிக்கக்கூடிய மாறுபாடாக உலக சுகாதார மையம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது. இந்தியாவில், மூன்றாவது அலை ஏற்பட முக்கிய பங்கு வகித்தது.

ஒமைக்ரான் வகையில் பல்வேறு உட்பிரிவுகள் உள்ளன (Sub-Lineage). இதில், குறிப்பாக பிஒய்.1, பிஒய்.2 ஆகிய இரண்டு உட்பிரிவுகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதில், பிஒய்.1 வகையை விட, பிஒய்.2 வகை தொற்று, அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பரவும் தன்மை, தீவிரம் மற்றும் தடுப்பூசிகளிலிருந்து தப்பிக்கும் அம்சங்கள்  இதனிடம் இருந்தன . எனவே, பிஒய்.2 வகை மாறுபாட்டை Variation of Concerns பட்டியலில் தொடர்ந்து இருந்து வருகிறது.

XE மாறுபாடு என்றால்  என்ன ? 

ஒமைக்ரான் தொற்றின் உட்பிரிவுகளான பிஒய்.1, பிஒய்.2 ஆகியவற்றின் மறுசீரமைப்பே, XE மாறுபாடு ஆகும். அதாவது, பிஒய்.1 வகையில் காணப்பட்ட பிறழ்வுகளும், பிஒய்.2 வகையில் உள்ள பிறழ்வுகளும் இந்த புதிய வகை கொண்டுள்ளது.

XD (Delta + BA.1) , XF (Delta + BA.1) இதர மறுசீரமைப்பு கொரோனா மாறுபாடுகளையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.



XE முதலில் எங்கு கண்டறியப்பட்டது:  கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்து நாட்டில், XE என்ற மாறுபாட்டை கண்டறிந்தனர்.  இங்கிலாந்து, ஐரோப்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இதன் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை, இந்தியாவில் இந்த வைரஸ் கண்டறியப்படாமல் இருந்தது. தற்போது, மகாராஷ்டிராவில் இந்த வகை தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிடவில்லை.

இதன் தீவிரத் தன்மை என்ன ? ஒமிக்ரான் கொரோனா வகைகளில் இருந்து மறுசீரமைப்பு  பெற்ற இது, ஒமிக்ரான் நோய்த் தீவிரத்  தன்மையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்காது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த தொற்று கண்டறியப்பட்ட போதிலும், தற்போது வரை பெரிய நெருக்கடியை ஏற்படுத்தவில்லை என்ற போக்கும் இங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

மேலும், புதுவகைகளினால் ஏற்படும் தீவிர நோயைத் தடுப்பதில் தடுப்பு மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று விஞ்ஞான தரவுகள் காண்பிக்கிறது. தற்போது, இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களில் 98% பேர் முதல் டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர். 83% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டு முழு பாதுகாப்பை பெற்றுள்ளனர். எனவே, புதிய வகைகள் மற்றுமொரு அலையை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல  என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

இருந்தாலும், 



இங்கிலாந்து நாட்டில் தற்போது பிஒய்.2 வகை  காரணமாக  கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.  ஜனவரி மாத நடுப்பகுதி வரை பிஒய்.1 வகை பரவல் அதிகரித்து (ஊதா)  வந்த நிலையில், பிஒய்.2  வகை  தற்போது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது (பச்சை). XE  வகையில் உள்ள மரபணுக்கள் கிட்டத்தட்ட  பிஒய்.2  வகையை  ஒத்திருப்பதாக  ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, பிஒய்.2  வகையை விட, இது கூடுதல் பரவல் தன்மை கொண்டதாக இருக்கலாம் என்று ஆய்வளார்கள் தெரிவிகின்றனர்.
Published by:Salanraj R
First published:

Tags: Corona, CoronaVirus

அடுத்த செய்தி