Explainer: பாராளுமன்ற கமிட்டி ஒழித்துக்கட்ட நினைக்கும் விபிஎன் சேவை என்றால் என்ன? அதனால் என்ன ஆபத்து?

பல்வேறு நாடுகளின் அரசுகள் இணைய பயன்பாட்டுக்கு தங்களின் நாட்களில் வரைமுறையை வகுத்து வைத்தாலும் கூட, விபிஎன் சேவை இணைய பயன்பாட்டாளர்களுக்கு அதனை முறியடிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இது போல தடைகள் அல்லது கட்டுப்பாடுகளை கொண்டிருக்கும் நாடுகளின் கட்டுப்பாடுகளை தகர்க்கும் வல்லமையை விபிஎன் வழங்குகிறது.

இந்தியாவில் சைபர் குற்றங்களை தடுக்க விபிஎன் சேவைகளை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.

  • Last Updated :
  • Share this:
 

சைபர் கிரிமினல்கள் தங்களின் அடையாளத்தை மறைப்பதற்கு இந்த விபிஎன் சேவை உதவுகிறது என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் ஆன்லைனில் பிரைவசி தேவைப்படுவோருக்கு விபிஎன் சேவை கை கொடுத்து வருகிறது. நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுகளை வீட்டில் இருந்தே பணிபுரிவதற்கு இதைத் தான் பெரிதும் நம்பியுள்ளனர்.


விபிஎன் என்றால் என்ன?

விர்சுவல் பிரைவேட் நெட்வொர்க் என்பதன் சுருக்கமே விபிஎன் (VPN) ஆகும். இது ஒரு இணைய பாதுகாப்பு கருவியாகும், இது ஒரு குறைந்த பாதுகாப்பான பொது அல்லது உங்கள் வீட்டு இணைய இணைப்புடன் இணைக்கப்படும் போது ஒரு தனியார் நெட்வொர்க்கை எளிதாக உருவாக்க உதவுகிறது. நெட்வொர்க் போக்குவரத்தை என்கிரிப்ட் செய்து உங்கள் ஐபி முகவரி மற்றும் இருப்பிடத்தை மறைப்பது இதன் முதன்மை வேலை. இதனால் மூன்றாம் தரப்பு டிராக்கர்கள், உங்கள் இணைய சேவை வழங்குநர் (ISP), வலைத்தளங்கள், மால்வேர்கள், ஸ்பைவேர்கள் மற்றும் பிற வகையறாக்கள் உங்கள் சாதனத்தில் நீங்கள் பதிவிறக்கும் மற்றும் பதிவேற்றும் தரவை அடையாளம் காண முடியாது.
மேலும், நீங்கள் விபிஎன் பயன்படுத்தும் போது உங்கள் ஐபி முகவரி, இருப்பிடம் அல்லது ஆன்லைனில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று யாரும் பார்க்க முடியாது. உங்கள் ஆன்லைன் அமர்வை ஒரு ஹேக்கர் யூகிக்க முடிந்தாலும், அது என்கிரிப்ட் செய்யப்படும்.


 

விபிஎன் ஏன் முக்கியம்?

கார்ப்பரேட் தரவைப் பாதுகாப்பதில் VPN கள் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.
பெரும்பாலான நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதித்திருப்பதால், VPN சேவைகளைப் பயன்படுத்துகின்றன, இதனால் ஹேக்கர்கள் அதிகாரப்பூர்வ தரவு மற்றும் முக்கியமான நிர்வாக கடவுச்சொற்கள் உள்ளிட்ட கோப்புகளை இடைமறிக்க முடியாது. VPN கள் இல்லாத நிலையில், நிறுவனங்களின் போட்டியாளர்கள், மூன்றாம் தரப்பு டிராக்கர்களைப் பயன்படுத்தி முக்கியமான ஊழியர்களை ஆன்லைனில் இலக்காக்கி ரகசிய வணிகத் தரவைப் பிரித்தெடுக்க முடியும்.


விபிஎன் ஏன் ஆன்லைனில் பாதுகாப்பானது?

நீங்கள் அலுவலக வேலைகளை செய்யாத நேரத்திலும் கூட ஆன்லைன் வங்கி கணக்குகளின் பாஸ்வோர்டுகள், சமூக வலைத்தளங்களின் பாஸ்வோர்டுகள், இமெயில் போன்ற பிற நடவடிக்கைகளை பாதுகாப்பாக மேற்கொள்ள முடியும். மூன்றாம் தர டிராக்கர்களிடமிருந்து விபின் சேவைகளே நம்மை காக்கின்றன.


ஏர்டெல், ஜியோ அல்லது பிஎஸ்என்எல் என எந்தவொரு நிறுவனத்திடமிருந்தும் நீங்கள் ஒரு புதிய பிராட்பேட் இணைப்பை வாங்கும் போது உங்களின் ஆன்லைன் செயல்களை அந்நிறுவனங்களால் சுலபமாக கண்காணிக்க முடியும். அந்நிறுவனங்கள் அளிக்கும் மோடம் ரவுட்டர் போன்ற சாதனங்களையே நீங்கள் பயன்படுத்துவதால் அவர்களால் தொலைதூரத்தில் இருந்தே உங்களது இணைய கான்ஃபிகரேஷனை ரீசெட் செய்ய முடியும். இது தவிர என்னற்ற வகைகளில் உங்கள் இணையத்தின் கட்டுப்பாட்டை கைக்குள் வைத்துக் கொண்டு பிரவுசிங் வரலாறினை பயன்படுத்தி விளம்பரங்களை காட்ட முடியும். இது போன்ற செயல்களில் இருந்து உங்களை காப்பது விபிஎன் மட்டுமே..


புவியியல் வரம்பை விபிஎன் மீறுவது எப்படி?

பல்வேறு நாடுகளின் அரசுகள் இணைய பயன்பாட்டுக்கு தங்களின் நாட்களில் வரைமுறையை வகுத்து வைத்தாலும் கூட, விபிஎன் சேவை இணைய பயன்பாட்டாளர்களுக்கு அதனை முறியடிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இது போல தடைகள் அல்லது கட்டுப்பாடுகளை கொண்டிருக்கும் நாடுகளின் கட்டுப்பாடுகளை தகர்க்கும் வல்லமையை விபிஎன் வழங்குகிறது.


பொது வைபையிலும் பாதுகாப்பு கிடைப்பது எப்படி?

ரயில்வே நிலையங்கள், சைபர் கேஃபே, காபி ஷாப், ரெஸ்டாரண்ட், ஓட்டல்கள் போன்ற இடங்களில் உள்ள வைஃபைகள் இணைய திருடர்களின் பொக்கிஷமாகும். மேற்கண்ட இடங்களில் இலவச வைஃபையை பயன்படுத்தும் போது உங்கள் சாதனத்தில் மால்வேர், உங்களின் லொகேஷனை தெரிந்து கொள்ளும் வசதி, பாஸ்வோர்டுகளை திருடுவது, ரிமோட் அனுகலுக்கான அனுமதி போன்றவற்றை உங்களின் டிவைஸ்களில் மேற்கொள்கின்றனர் சைபர் திருடர்கள். இது போன்ற ரிஸ்குகளை விபிஎன் தவிர்க்கிறது.


பாராளுமன்ற கமிட்டி விபிஎன்-ஐ தடை செய்ய நினைப்பது ஏன்?

விபிஎன் சேவைகளாலும், டார்க் வெப் எனப்படும் இணைய குற்றத்தில் ஈடுபடுவோர்களாலும் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இனைய சேவை வழங்குநர்களின் உதவியுடன் விபிஎன் சேவைகளுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று பாராளுமன்ற கமிட்டி பரிந்துரைத்திருப்பதாக மீடியா நாமா செய்தி வெளியிட்டிருக்கிறது.


 
Published by:Arun
First published: