தடுப்பூசி எப்படி தயாரிக்கப்படுகிறது?

தடுப்பூசி

தடுப்பூசி தயாரிப்பு எப்படி நடைபெறுகிறது? ஒரு தடுப்பூசி தயாரிக்கப்பட்டு மக்களிடம் வந்து சேர்வதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்பது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.

 • Share this:
  தடுப்பூசி தயாரிப்பு என்பது சில ரசாயனங்களை ஒன்றாக கலப்பது போன்ற எளிதான நடைமுறை அல்ல. அது உயிரியல் தயாரிப்பு முறை. முதலில் வைரஸ் வளர்க்கப்படுவதற்கான நுண்உயிரியான micro organism-ஐ கண்டறிய வேண்டும். அதன் பிறகு வைரஸ், அந்த நுண் உயிரியில் வைக்கப்படும். அந்த வைரஸ் நுண் உயிரியை பாதிக்கும். இந்த நடைமுறையில் நமக்கு தேவையான தடுப்பூசி மூலக்கூறு உருவாகும். பிறகு அதனை அந்த நுண் உயிரியிலிருந்து பிரித்து எடுக்க வேண்டும். இது ரசானயங்கள் உதவியுடன் செய்யப்படும்.

  அதன் பிறகு நுண் உயிரியிலிருந்து கழிவுகள் ஏதும் ஏற்றப்படவில்லை எனது உறுதி செய்ய பல வகையில் வடிகட்டப்படும். தயாரிப்பின் இந்த கட்டத்தில் வைரஸ் செயலிழக்க செய்யப்படும். அதாவது அந்த வைரஸால் தன்னை பெருக்கிக் கொள்ள முடியாது. இதை உறுதி செய்த பிறகு மற்ற பிற திரவங்கள் கலந்து தடுப்பூசி இறுதி வடிவத்தை பெறும். இதன் பிறகு தரத்தை சோதிக்கும் பல நடைமுறைகளுக்கு தடுப்பூசி உட்படுத்தப்படும். அதன் பிறகே தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் படிக்க... 4,00,000ஐ தாண்டிய கொரோனா இறப்பு: உயிரிழப்பில் எந்த நோய்க்கு முதலிடம்!

  இந்த நடைமுறைகள் செய்து முடிக்க பல வாரங்கள் ஆகும். உதாரணமாக கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்க நான்கு மாதங்கள் ஆகும். மற்ற தடுப்பூசிகளை தயாரிக்க குறைந்தது ஆறு முதல் எட்டு வாரங்களாவது ஆகும்.
  Published by:Vaijayanthi S
  First published: