Home /News /explainers /

இன்போசிஸ் Non-Compete Clause என்றால் என்ன? நடைமுறைப்படுத்த முடியுமா?

இன்போசிஸ் Non-Compete Clause என்றால் என்ன? நடைமுறைப்படுத்த முடியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

குறிக்கப்பட்ட ஒரு காலம் வரை, தன்னை யொத்திய தொழிலில், வணிகத்தில் அல்லது போட்டி நிறுவன அலுவலகத்தில் பணி செய்வதை  தடை செய்கிற உடன்பாடாகும்.

    திறமையான ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதை தடுக்கும் விதமாக இன்போசிஸ் நிறுவனம் ஊழியர்களின் ஒப்பந்தத்தில் உள்ள 'Non-Compete Clause'- ஐ செயல்படுத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    Non-Compete Clause என்றால் என்ன? 

    Non- compente Clause மூலம் தன்னை யொத்திய நிறுவனங்களில் பணி செய்வதை தடை செய்கிற ஒரு உடன்பாடு ஆகும். நிறுவனத்தை  விட்டு வெளியேறிய ஊழியர்கள், குறிக்கப்பட்ட ஒரு காலம் வரை, தன்னை யொற்றிய தொழிலில், வணிகத்தில் அல்லது போட்டி நிறுவன அலுவலகத்தில் பணி செய்வதை  தடை செய்கிற உடன்பாடாகும். 

    இந்த உடன்பாட்டின் படி, ராஜினாமா செய்த  இன்ஃபோசிஸ் ஊழியர் ஒருவர், முந்தைய 12 மாதங்களில் போட்டி நிறுவனம் என்று இன்போசிஸ் நிறுவனம் பட்டியலிட்ட  போட்டி நிறுவனங்களில் குறைந்தது ஆறு மாத காலம் சேர முடியாத சூழல் உருவாகும். இன்போசிஸ் தனது போட்டியாளர்கள் என்று  TCS, Accenture, IBM, Cognizant , Tech Mahindra, HCL  உள்ளிட்ட நிறுவனங்களை பட்டியலியிட்டள்ளது.  

    நிறுவனம் இத்தகைய நிர்பந்ததை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று இன்போசிஸ் ஊழியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமும், கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகமும் உடனடியாக இதில் தலையிட்டு ஊழியர்களின் உரிமையை மீட்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளனர்.

    ஏன், இந்த நிலை: 

    கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டங்களில், நாட்டில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதியின் சர்வதேச தேவை அதிகரிப்பால், ஐடி  நிறுவனங்களுக்கு இடையே போட்டா போட்டி  நிலவுகிறது.

    முன்னதாக, இன்ஃபோசிஸ் நிறுவனம், 22 நிதியாண்டின் நான்காவது காலாண்டுக்கான வரவு செலவு அறிக்கையை நேற்று வெளியிட்டது. 2022 நிதியாண்டில், நிறுவனத்தின் டிஜிட்டல் ( உதாரணமாக,  Cloud computing) சந்தையின் மதிப்பு  41.2% அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 38.8 சதவீத நேர்மறையான வளர்ச்சியாகும். நான்காவது காலாண்டில் அதன் நிகர லாபம் 5,686 கோடியாக உள்ளது.

    ஆனால், அதே சமயம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேறும் விகிதம் 27.7 % ஆக உள்ளது. இது, சமீப காலங்களில் பதிவான அதிகப்படியான எண்ணிக்கியாகும். 




















    மார்ச் 31,2022டிசமபர் 31,2021மார்ச் 31,2021
    பெண் ஊழியர்களின் விகிதம்39.6%39.6%38.6%
    ஊழியர்கள் வெளியேற்ற விகிதம்27.7%25.5%10.9%

    அதேபோன்று, டிசிஎஸ் நிறுவனமும் இத்தைகைய நெருக்கடியை சந்தித்து வருகிறது. மார்ச் மாதம் வெளியான அதன் நிதி நிலை அறிக்கையில், ஊழியர்கள் வெளியேறும் விகிதம் 17% ஆகா இருந்தது.        

    ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த முடியுமா? (Enforceability)? 

    இந்திய அரசியலமைப்பின் சுதிந்திரத்துக்கான உரிமையில்,  (பிரிவு-19)  விழைதொழில் (Profession ), வாழ்தொழில் (Occupation)  வணிகம் (trade or business) செய்வதற்கு உரிமை உடையோர் என்று தெரிவிக்கப்பட்டுளளது.  மேலும், பிரிவு 21ல் நாட்டில் உள்ள பிரஜைகள் அனைவருக்கும் உயிருக்கும், உடல்சார் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் அனைத்து வகையான ஒப்பந்தங்களும்  1872ம்  ஆண்டு இயற்றப்பட்ட இந்திய ஒப்பந்த சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதில், குறிப்பாக பிரிவு 27ல்,  வணிகத்தை  தடை செய்கிற உடன்பாடு செல்லாதது என்று தெரிவிக்கப்பட்டுளளது.






    பிரிவு 27:   எவரொருவரையும் சட்டப்பாடியுள்ள எந்த வகையானதுமான ஒரு தொழிலை, வாணிகத்தை அல்லது அலுவலை நடத்துவதில் இருந்து தடைசெய்கின்ற உடன்பாடு ஒவ்வொன்றும் அந்த அளவுக்கு செல்லாதது ஆகும்.

      Raunak Singh  என்ற ஆய்வளாளர்,  "Enforceability Of ‘Non-Compete Clause' Under An Employment Agreement" என்ற தனது கட்டுரையில்,  Non-Compete Clause, தொடர்பான முந்தைய வழக்குகளில் மேன்மை நீதிமன்றங்கள், நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் ஊழியர்களின் அடிப்படை உரிமையை பறிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என்றளவில் தீர்ப்பளித்தாக கூறுகிறார்.



    உதாரணமாக, Foods Ltd. v. Bharat Coca-cola Holdings Pvt. Ltd வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் பணிகாலத்துக்கு பிந்தைய நாட்களில் தடைபோடுவது இந்திய ஒப்பந்த சட்டத்தின் கீழ் எதிரானது, செல்லாதது என்று தீர்ப்பளித்தது.

    இருப்பினும், Wipro Limited v. Beckman Coulter International S.A, Niranjan Shankar Golikari v. The Century Spinning உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், நீதிமன்றங்களை பிரிவு 27-ஐ  சற்று தாராண்மை போக்கொடு  அணுகினர். குறிப்பாக,  தன்னையொத்த நிறுவனங்களில் போட்டி நிறுவனங்களில் ஊழியர்களை தடை செய்கிற போக்கு வாழ்த்தொழில் செய்வதற்கான உரிமையை பறிக்கும் விதமாக அமையாது. குறிப்பாக, Non-compete அல்லது non-solicitation (நிறுவனத்தின் தொடர்புகளை பயன்படுத்துவது) அல்லது confidentiality (நிறுவனத்தின் தொழில் ரகசி யங்களை பாதுகாப்பது) போன்ற காரணங்கள் பிரிவு 27-ல் விதிவிலக்காக கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுளளது.

    எவ்வாறாயினும், இந்த ஒப்பந்த உடன்பாடு நியாமானதாகவும், ஊழியர்களின் உரிமைகளை பறிக்காததாகவும் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றங்கள் பல்வேறு வழக்குகளில்  பதிவு செய்துள்ளன.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Infosys

    அடுத்த செய்தி