ஹெபடைடிஸ் நோய் என்பது நேரடியாக கல்லீரலை பாதிக்கும். கல்லீரலில் திசுக்களில் அழற்சியை ஏற்படுத்தும் ஹெபடைடிஸ், கல்லீரல் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். உலகளவில் லட்சக்கணக்கானோர் ஹெபடைடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் தொடக்கத்தில் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாது. தீவிர நிலையை எட்டியபிறகே, அதன் அறிகுறிகள் முழுமையாக வெளிப்படும். அப்போது, பாதிக்கப்பட்டவர் மிகவும் ஆபத்தான நிலையை எட்டியிருப்பார்.
முன்கூட்டியே கண்டுபிடித்தால் மட்டுமே உரிய சிகிச்சை அளிக்க முடியும். உலகளவில் ஹெபடைடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 10ல் 9 பேருக்கு ஹெபடைடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பது ஆபத்தான கட்டத்தில் மட்டுமே தெரிய வருகிறது. உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிடில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஹெபடைடிஸ் வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உலகம் முழுவதும் ஜூலை 28ஆம் தேதி உலக ஹெபடைடிஸ் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
ஹெபடைடிஸ் நாள் வரலாறு:
அமெரிக்க மரபியலாளரும், மருத்துவருமான பரூச் சாமுவேல் ப்ளம்பெர்க்கின் நினைவாக ஹெபடைடிஸ் நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஹெபடைடிஸ் பி வைரஸைக் கட்டுப்படுத்துவது குறித்து அவர் ஆற்றிய பணிகள் இந்நாளின் நினைவு கூறப்படுகிறது. நோபல் பரிசு பெற்ற அவர் ஜூலை 28ஆம் தேதி 1925 ஆம் ஆண்டு பிறந்தார். முதன்முதலாக ஹெபடைடிஸ் வைரஸைக் கண்டுபிடித்தது மட்டுமல்லாமல், அதற்கான தடுப்பூசியையும் உருவாக்கினார். 2010ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற உலக சுகாதார கூட்டத்தில் அவருடைய பிறந்த நாளை ஹெபடைடிஸ் விழிப்புணர்வு நாளாக கடைபிடிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
Must Read | இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் செய்வதால் இந்த பக்க விளைவுகள் எல்லாம் ஏற்படுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஹெபடைடிஸ் வைரஸ் வகைகள்:
ஹெபடைடிஸ் வைரஸ்களில் 5 வகைகள் உள்ளன. அவை ஏ, பி, சி, டி, இ. இதில் ஏ மற்றும் இ வகை ஹெபடைடிஸ் வைரஸ்கள் அசுத்தமான நீர் மற்றும் உணவு வழியாக பரவுகின்றன. ஹெபடைடிஸ் பி வைரஸ் பாலியல் உறவு மூலம் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவுகிறது. ஏற்கனவே, பாதிக்கப்பட்ட ஒருவரின் ரத்தத்தை செலுத்துவதன் மூலமும் பரவுகிறது. பாதிக்கப்பட்ட தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவும். ஹெபடைடிஸ் சி வைரஸ் பாதிக்கப்பட்ட ரத்தத்தின் வழியாக பரவுகிறது. ஏற்கனவே ஹெபடைடிஸ் பி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெபடைடிஸ் டி பாதிப்பு ஏற்படும்.
தற்போதைய நிலையில் ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸால் பாதிக்கப்பட்டோர் அதிகளவில் இறக்கின்றனர். ஆண்டுதோறும் சுமார் 13 லட்சம் பேர் ஹெபடைடிஸ் பாதிப்பால் கல்லீரலை இழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்த நோயால் பாதிகப்பட்ட பலர், கொரோனா வைரஸ் காலத்தில் இறந்துள்ளதாகவும், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தில் அவர்களுக்கான உரிய சிகிச்சை கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Explainer, Healthy Life, Liver Health