• HOME
  • »
  • NEWS
  • »
  • explainers
  • »
  • என்டமிக் நிலையில் இந்தியா.. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

என்டமிக் நிலையில் இந்தியா.. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

கொரோனா

கொரோனா

என்டெமிக் நிலை என்றால் குறிப்பிட்ட மக்கள் குழுவானது வைரஸூடனேயே வாழ பழகிக்கொள்ளும் நிலையாகும்.

  • Share this:
உலகளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. முதல் மற்றும் இரண்டாம் அலையில் மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டனர். உயிரிழப்புகள் முதல் பொருளாதாரம் வரை என கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட மக்கள், அந்த பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீள முடியவில்லை. இந்நிலையில், 3வது அலையை இந்தியா எதிர்நோக்கியிருக்கிறது. அக்டோபர் மாதத்தில், கொரோனா வைரஸின் 3வது அலை நாடு முழுவதும் உச்சத்தைத் தொடும் என மருத்துவ நிபுணர்கள் மத்திய அரசை எச்சரித்துள்ளனர்.

அதன் முன்னோட்டமாக கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது. இது குறித்து பேசிய உலக சுகாதார மையத்தின் மூத்த அறிவியலாளர் மருத்துவர் சௌமியா சுவாமிநாதன், இந்தியா என்டெமிசிட்டி (endemicity) என்ற நிலையை எட்டியிருப்பதாக கூறியுள்ளார். அவரின் இந்தக் கருத்து மக்களிடையே அச்சத்தை உருவாக்குபவையாக உள்ளது.

என்டெமிக் நிலை (Endemic Stage) என்றால் என்ன?

என்டெமிக் நிலை குறித்து மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் விளக்கும்போது, குறிப்பிட்ட மக்கள் குழுவானது வைரஸூடனேயே வாழ பழகிக்கொள்ளும் நிலை என கூறியுள்ளார். அதாவது, அந்த மக்களிடத்தில் மீண்டும் மீண்டும் உருமாறிய வைரஸ் திரிபு பரவிக்கொண்டே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். இந்த நிலையை இந்தியா அடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஏதாவதொரு பகுதியில் வைரஸின் தீவிரம் அதிகமாகவும், மற்ற பகுதிகளில் குறைவாகவும் இருக்கும். ஆனால், வைரஸ் முற்றிலும் இல்லை என்ற நிலை இருக்காது.



உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கும்போது, இந்தியாவில் பல்வேறு வகையான பன்முகத்தன்மை கொண்ட மக்கள் வாழ்வதாக தெரிவித்தார். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியின் நிலையும் இடத்துக்கு இடம் மாறுபட்டதாக இருப்பதாக தெரிவித்த அவர், இதனால் வைரஸின் தொற்றின் திரிபுகள் உருவாகிக்கொண்டே இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார். மூன்றாவது அலையைப் பொறுத்தவரை அதிக மக்கள் தொகை கொண்ட இடங்கள், முதல் மற்றும் இரண்டாவது அலையில் குறைவான பாதிப்பை எதிர்கொண்ட பகுதிகள், தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ள இடங்கள் மற்றும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளதவர்களிடையே அதிக பாதிப்புகள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



இந்த பாதிப்பின் தீவிரத்தை அடுத்த சில மாதங்களில் பார்க்க முடியும் என்றும் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கொடுத்துள்ள விளக்கத்தில், பன்முகத்தன்மை கொண்ட மக்கள் குழுக்கள் வாழும் இடங்களில் வைரஸ் திரிபுகளின் பரவல் இருந்து கொண்டே இருக்கும் என கூறியுள்ளது. அந்தப் பகுதிகள் மக்கள் வைரஸூடன் வாழக் கற்றுக்கொள்வார்கள் என்றும் விளக்கமளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: