நீங்கள் உங்களது நண்பர்களுடன் இரவு டின்னர் சாப்பிடுவதற்காக வெளியிடத்திற்கு சென்றுள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம். அந்த சமயத்தில் அங்கு அரசியல் அல்லது சினிமா அல்லது விளையாட்டுப் போட்டி குறித்து விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எல்லோரும் அவரவர் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
நீங்களும் கூட உங்கள் கருத்தை முன்வைத்திருப்பீர்கள். ஆனால், திடீரென நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் விஷயத்தை வாழ்க்கையில் ஏற்கனவே ஒருமுறை நீங்கள் அனுபவ ரீதியில் எதிர்கொண்டதாக ஒரு உணர்வு தோன்றும். உங்களுக்கு அந்த விஷயம் தெரிந்திருக்காவிட்டாலும் அப்படித்தான் தோன்றும். அதற்குப் பெயர் தான் ‘தேஜா ஊ’.
உதாரணத்திற்கு, எம்எல்ஏ ஒருவர் குடியிருப்பு பகுதிக்கு சென்றபோது, அங்கு பொது கோரிக்கையை முன்னிறுத்தி இளைஞர் ஒருவர் சரமாரியான கேள்விகளை எழுப்பியதாக உங்கள் நண்பர் ஒருவர் கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கும் அந்த நிகழ்வுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. நீங்கள் எம்எல்ஏவை பார்த்திருக்க கூட மாட்டீர்கள். ஆனால், முன்னொரு சமயத்தில் எம்எல்ஏ-விடம் நீங்களும் கூட வாக்குவாதம் செய்ததைப் போன்ற கற்பனை உங்கள் மனதில் வந்து செல்லும்.
இதுபோன்ற கற்பனையான நினைவுகளைத் தான் ‘தேஜா ஊ’ என சொல்கின்றனர். இது பிரெஞ்சு மொழிச் சொல் ஆகும். ஏற்கனவே உணரப்பட்ட அனுபவம் என்பது இதன் பொருள் ஆகும். இளைஞர்களுக்கு இத்தகைய மனநிலை தோன்றுவது இயல்பான விஷயம் தான். ஆனால், சிலர் இதை ஏதோ தீராத பிரச்சினையாக கருதிக் கொள்வார்கள்.
சட்டென மறையும் தேஜா ஊ
உங்கள் மனதில் கற்பனையாக தோன்றிய அனுபவத்தை நீங்கள் ஆழ்ந்து சிந்திப்பதற்குள் அது உங்கள் நினைவில் இருந்து மறைந்துவிடும். தற்போதைய கேள்வி என்ன என்றால், ஏன் இதுபோன்ற நினைவுகள் நமக்கு ஏற்படுகிறது என்பதுதான். இதை ஆழ்ந்து புரிந்து கொள்வது கடினம். இருப்பினும் எளிமையான விளக்கத்தை நாம் பார்க்கலாம்.
Also Read : விமான ஜன்னல்களை நீங்கள் கவனித்தது உண்டா? வழக்கத்திற்கு மாறான ஒன்று அதில் இருக்கும்
டெம்பரல் லோப் : நமது மூளையில் டெம்பரல் லோப் என்ற பகுதி உள்ளது. நீண்ட கால நினைவுகள், நிகழ்வுகள், நினைவில் நிற்கும் விஷயங்கள் ஆகியவை இங்கு தான் சேமிக்கப்படுகிறது. இந்த நரம்பு மண்டலத்தில் சில தொந்தரவுகள் ஏற்படக் கூடும். அதுதான் தேஜா ஊ எனப்படுகிறது.
எனினும், இதுதான் தேஜா ஊ என்ற மிகச் சரியான விளக்கத்தை ஆய்வாளர்கள் இதுவரையிலும் தெரிவிக்கவில்லை. நமது மனம், நடக்காத சில விஷயங்களை முன்கூட்டியே தெரிந்ததை போல, அதன் அவுட்லைன் ஒன்றை தயார் செய்து கொண்டிருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். லாஜிக்கலாக இதற்கும், உங்களுக்கும் தொடர்பு இல்லை என தெரிந்தாலும், ஏதோ மனசுல தட்டுகிறது என்று சிலர் சொல்வார்கள். இன்னும் சிலர் இதை முற்பிறவியின் நினைவுகளாக கருதுகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.