ஹோம் /நியூஸ் /Explainers /

நீல நிற ஆதார் அட்டை பற்றி உங்களுக்கு தெரியுமா? எப்படி விண்ணப்பிப்பது குறித்த விவரங்கள்!

நீல நிற ஆதார் அட்டை பற்றி உங்களுக்கு தெரியுமா? எப்படி விண்ணப்பிப்பது குறித்த விவரங்கள்!

ஆதார் கார்டு

ஆதார் கார்டு

நீல ஆதார் அட்டை என்றால் என்ன, யார் அதைப் பெறலாம், அதற்கான விண்ணப்பம் என்று நீல நிற ஆதார் அட்டையைப் பற்றிய தகவலைத் தெரிந்து கொள்ளுங்கள்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஆதார் அட்டை என்றால் என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு ஆதார் அட்டையிலும் உங்களுக்கென்று தனித்துவமான 12 இலக்க எண் மற்றும் உங்கள் பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் பல விவரங்கள் உள்ளன. நீல ஆதார் அட்டை என்றால் என்ன, யார் அதைப் பெறலாம், அதற்கான விண்ணப்பம் என்று நீல நிற ஆதார் அட்டையைப் பற்றிய தகவலைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தகவல்களை, 2009 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவின் மிகவும் அத்தியாவசியமான ஆவணமாக கருதியது. ‘பால ஆதார்’ எனப்படும் ‘குழந்தைகள் ஆதார்’ என்ற வகையை அரசு அறிமுகப்படுத்தியது. அந்த ஆதார் அட்டை, வழக்கமாக பெரியவர்களுக்கு வழங்கப்படும் வெள்ளை நிறத்தில் இல்லாமல், நீல நிறத்தில் காணப்படும். இந்த நீல நிற ஆதார் அட்டை 12 இலக்க தனித்து அடையாள எண் இருக்கும். குழந்தைக்கு 5 வயது முடிந்தவுடன், ஆதார் எண் செல்லுபடியாகும்.

நீல ஆதார் அட்டை தொடர்பான நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் இங்கே:

வழக்கமான, 18+ வயது நிறைந்தவர்களுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டையை எப்படி உருவாக்கப்படுகிறதோ, அதே நடைமுறையில் பெற்றோர் தங்கள் குழந்தைக்கு ஆதார் பதிவு செய்ய ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும். இதற்குப் பிறகு, அடையாளச் சான்று, முகவரிச் சான்று, உறவின் சான்று, குழந்தை பிறந்த தேதி போன்ற ஆவணங்கள் வழங்க வேண்டும்.

ஒரு நீல ஆதார் அட்டை, வழக்கமான ஆதார் அட்டையை விட பல விதங்களில் வேறுபட்டது. இது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான அட்டை என்பதைத் தவிர்த்து, இதிலே வேறு என்ன வேறுபாடு உள்ளது என்று நீங்கள் யோசிக்கலாம். 'பால ஆதார்' அட்டையான நீல நிற ஆதார் அட்டையில் குழந்தையின் பயோமெட்ரிக் தகவல்கள் இல்லை.

Also Read : மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு - தெளிவுபடுத்திய ஐ.ஆர்.சி.டி.சி

இருந்தாலும், குழந்தைக்கு 5 வயது நிரம்பியவுடன், பயோமெட்ரிக்குகளை கட்டாயமாக சேர்ப்பது UIDAI க்குத் தேவை. மேலும், 15 வயதில். டீன் ஆதார் அட்டைதாரர்களுக்கான பயோமெட்ரிக் புதுப்பிப்பும் இன்னொரு முறை செய்ய வேண்டும்.

UIDAI படி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பள்ளி அடையாள அட்டையைப் பயன்படுத்தி நீல ஆதார் அட்டையைப் பெறுவதற்காக பதிவு செய்யலாம். மேலும், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் சீட்டை ஆவணமாகப் பயன்படுத்தலாம்.

Also Read : டெங்கு அறிகுறிகள் மற்றும் சிகிச்சை குறித்த முழு விவரம்..

நீல நிற ஆதார் பெறுவது எப்படி?

* உங்கள் குழந்தையுடன் பதிவு மையத்திற்குச் செல்லவும்.மேலே குறிப்பிட்டுள்ள தேவையான ஆவணங்களையும் எடுத்துச் செல்லுங்கள். ஆதார் மையத்தில் பதிவு படிவத்தை பெற்று, உங்கள் குழந்தை பற்றிய விவரங்களை நிரப்பவும்.

* பெற்றொரின் ஆதார், குழந்தையின் UID உடன் இணைக்கப்படுவதால், உங்களுடைய ஆதார் எண்ணும் வழங்க வேண்டும்.

* நீல ஆதார் அட்டை வழங்குவதற்கு, நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணை கொடுக்க வேண்டும்.

* பயோமெட்ரிக் தகவல் தேவையில்லை என்பதால், குழந்தையின் ஒரு புகைப்படம் மட்டுமே எடுக்கப்படும்.

* அனைத்து ஆவணங்களின் சரிபார்ப்புக்குப் பிறகு, சரிபார்ப்பு முடிந்தது என்பதை உறுதிபடுத்தும் செய்தி உங்களுக்குக் கிடைக்கும்

சரிபார்ப்பு முடிந்த 60 நாட்களுக்குள், உங்கள் குழந்தைக்கு நீல ஆதார் அட்டை வழங்கப்படும்.

Published by:Vijay R
First published:

Tags: Aadhaar card