Home /News /explainers /

Anthrax | ஆந்த்ராக்ஸ் நோய் மனிதர்களுக்கு பரவுமா? அதன் அறிகுறிகள் என்ன?

Anthrax | ஆந்த்ராக்ஸ் நோய் மனிதர்களுக்கு பரவுமா? அதன் அறிகுறிகள் என்ன?

ஆந்த்ராக்ஸ் நோய் மனிதர்களுக்கு பரவுமா?

ஆந்த்ராக்ஸ் நோய் மனிதர்களுக்கு பரவுமா?

Anthrax Symptoms | ஆந்த்ராக்ஸ் நோய் என்றால் என்ன, அது மனிதர்களுக்கும் பரவுமா, நோயின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

    பாசில்லஸ் ஆந்த்ராக்சிஸ் என்னும் நுண்ணுயிரியால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஏற்படக் கூடிய நோய்தான் ஆந்த்ராக்ஸ். இது தாவரங்கள் மற்றும் விலங்குகளை உண்ணக்கூடிய பாலூட்டிகளுக்கு மட்டுமே ஏற்படும். இது காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்ட நோய் இல்லை. அதேசமயம் நோயுற்ற விலங்குகளை கையாளும் மனிதர்களுக்கு இது எளிதில் பரவக் கூடிய வாய்ப்பு உள்ளது. 1850-ம் ஆண்டுதான் இந்த ஆந்த்ராக்ஸ் நோய் அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்டது.

    பாசில்லஸ் ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாக்கள் பொதுவாகவே மண்ணில் காணப்படுகிறது. இந்த பூஞ்சைக் கூடுகள் உள்ள நீரை பருகும் விலங்குகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுகிறது. நோயுற்று இறந்த விலங்கை உண்ணுவதாலும், ரத்தம் உறிஞ்சும் பூச்சிகளின் கடியாலும் இது மற்ற விலங்குகளுக்கும் பரவுகிறது. விலங்குகளைப் பொறுத்தவரை அவை ஆந்த்ராக்ஸால் பாதிக்கப்படும் போது தடுமாற்றம், ரத்தப்போக்கு, மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்பட்டு உடனடியாக இறக்கவும் வாய்ப்புள்ளது.

    ஆந்த்ராக்ஸ் மனிதர்களுக்கு பரவுமா?

    மனிதர்களைப் பொறுத்தவரை தோல் வியாதி, நுரையீரல் பாதிப்பு, குடல் பாதிப்பு என 3 விதங்களில் ஆந்த்ராக்ஸ் நோய் ஏற்படுகிறது. நோயுற்ற விலங்குகளை தொடும் போது நம் உடலில் காயங்கள் இருந்தால் அதன் வழியாக இந்த ஆந்த்ராக்ஸ் கிருமி எளிதாக பரவும் வாய்ப்புள்ளது. சுவாசம் மூலமாக கிருமிகள் நுரையீரலை அடைந்தால் ஏற்படும் பாதிப்பு தான் சற்று அபாயகரமானது. பாதிக்கப்பட்டு இறந்த விலங்குகளை உண்பதால் குடல் பாதிப்பு ஏற்படும்.

    Also Read : கொரோனாவை தொடர்ந்து ஆந்தராக்ஸ் பாதிப்பா? சென்னை ஐஐடியில் ஆந்த்ராக்ஸ் நோயால் மான் இறந்ததால் பீதி..!

    ஆந்த்ராக்ஸ் நோயின் அறிகுறிகள்

    ஆந்த்ராக்ஸ் நோயால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கு சளி அல்லது ஃப்ளூ ஏற்படும். உடல் வலி, காய்ச்சல், அசதி, இருமல், இலேசான நெஞ்சுவலியும் ஏற்படக்கூடும். குடல் பாதிப்பு ஏற்பட்டால் வாந்தி, தலைசுற்றல், வயிற்று வலி, கடுமையான பேதியும் உண்டாகும்.

    ஆந்த்ராக்ஸ் நோயின் சிகிச்சை

    ஆந்த்ராக்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மற்றும் மனிதர்கள் முறையான மருத்துவ கண்காணிப்பில் இருப்பதன் மூலமாக இந்த நோயில் இருந்து விடுபட முடியும். ஆந்த்ராக்ஸ் கண்டறியப்பட்ட பகுதியில் உள்ள கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்துவதன் மூலமாக இதன் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

    2016-ம் ஆண்டு கோவை பகுதியில் யானை ஒன்று ஆந்த்ராக்ஸ் நோயால் உயிரிழந்தது. இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள அனைவருக்கும் அரசு சார்பில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாவை உயிர்க்கொல்லி ஆயுதமாக பயன்படுத்த முடியுமா என்ற ஆராய்ச்சிகளும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது
    Published by:Vijay R
    First published:

    Tags: Anthrax, Chennai IIT

    அடுத்த செய்தி