Home /News /explainers /

ஹைட்ரஜன் எரிபொருள் மூலமாக கிடைக்கும் நன்மைகள் என்னென்ன - தெரிந்து கொள்வோம்

ஹைட்ரஜன் எரிபொருள் மூலமாக கிடைக்கும் நன்மைகள் என்னென்ன - தெரிந்து கொள்வோம்

ஹைட்ரஜன் எரிபொருள்

ஹைட்ரஜன் எரிபொருள்

Hydrogen Fuel Cells : மின்சார வசதி எங்கும் நிறைந்துள்ளது என்பதாலும், நாடெங்கிலும் ஆங்காங்கே சார்ஜிங் நிலையங்கள் அமைகக்ப்படுகின்றன என்பதாலும், அதை நோக்கிய பயணம் வேகமடைந்து வருகிறது.

பெட்ரோல், டீசல் எரிபொருட்களுக்கு மூலதனமாக விளங்கும் கச்சா எண்ணெயை பல ஆண்டுகளாக உறிஞ்சிவிட்ட நிலையில், உலகெங்கிலும் கச்சா எண்ணெய்க்கான மூல ஆதாரங்கள் நாளுக்கு, நாள் குறைந்து கொண்டே வருகின்றன. இது மட்டுமல்லாமல், பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்படுத்துவதால், அதிக புகை கலந்து சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது. இதன் விளைவாக பருவநிலை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இதனை கட்டுக்குள் கொண்டு வரும் வகையிலும், பெட்ரோல், டீசல் போன்ற புதைவடிவ எரிபொருள்களுக்கு மாற்றாக நிலையான எரிபொருள் வழிமுறைக்கு மாற சர்வதேச சமூகம் கடந்த சில ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. அந்த வழிமுறையை பின்பற்றி, இந்தியாவும் நிலையான எரிபொருள் தேவையை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போதைய சூழலில், இந்த நோக்கத்தை நிறைவேற்ற ஏதுவாக இரண்டு எரிபொருள் வகைகள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவதாக எலெக்ட்ரிக், இரண்டாவதாக ஹைட்ரஜன் ஆகும்.

மின்சார வசதி எங்கும் நிறைந்துள்ளது என்பதாலும், நாடெங்கிலும் ஆங்காங்கே சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன என்பதாலும், அதை நோக்கிய பயணம் வேகமடைந்து வருகிறது. ஆனால், ஹைட்ரஜன் எரிபொருள் பயன்பாடு குறித்து இன்னும் தெளிவான சூழல் இல்லாத நிலை காணப்படுகிறது.

இதையும் படியுங்கள் : 'டவுன்' ஆகி.. மீண்டும் 'ஸ்டெடி' ஆன ட்விட்டர் தளம்! என்ன நடந்தது?

ஆகவே, நிலையான எரிபொருள் என்ற தேவையை நிறைவு செய்வதிலும், பசுமையான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதிலும், ஹைட்ரஜன் எரிபொருளுக்கு உள்ள பங்குகள் குறித்து இந்த செய்தி மூலமாக விரிவாக பார்க்க இருக்கிறோம்.

எங்கேயும், எப்போதும் : 

இந்தப் பூமியில் எப்போதும் எடுத்துக் கொள்ள தயார் நிலையில் இருக்கும் பொருள்களில் நைட்ரஜனும் ஒன்று. இதை எளிதாக உற்பத்தி செய்து கொள்ள முடியும். இதனால், ஜீரோ கார்பன் என்ற இலக்கை வெகுவிரைவாக எட்ட முடியும்.

திறன் வாய்ந்தது : 

ஒவ்வொரு எரிபொருளின் செயல்பாடும் அதன் கிராவிமெட்ரிக் டென்சிட்டி திறன் கொண்டு கணக்கீடு செய்யப்படுகிறது. உதாரணமாக, டீசலின் கிராவிமெட்ரிக் டென்சிட்டி என்பது 45 எம்ஜே/கேஜி ஆகும். இயற்கை வாயுவின் கிராவிமெட்ரிக் டென்சிட்டி என்பது 55 எம்ஜே/கேஜி ஆகும். இந்த எரிபொருள்களுடன் ஹைட்ரஜனை ஒப்பிடுகையில், அதன் திறன் 3 மடங்கு அதிகம் ஆகும். அதாவது, இதன் கிராவிமெட்ரிக் டென்சிட்டி என்பது 120 எம்ஜே/கேஜி ஆகும்.

இதையும் படியுங்கள் :  டொனால்ட் டிரம்பின் புதிய ஆப் சோதனை தொடங்கியது... அறிமுகம் எப்போது தெரியுமா?

நல்ல துணை தயாரிப்புகள் : 

ஒவ்வொரு எரிபொருளையும் ஆய்வாளர்கள் கண்டறியும்போது, கார்பன் வெளியேற்றம் மற்றும் இதர மாசுபாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பிரதான நோக்கம் ஆகும். அந்த வகையில், தண்ணீர் மற்றும் வெப்பம் ஆகிய இரண்டை மட்டுமே துணை பொருட்களாக உற்பத்தி செய்யப்படுகிறது. ஆகவே, ஹைட்ரஜன் வாயு நல்லதொரு மாற்று எரிபொருளாக உள்ளது.

சார்பின்மை : 

தற்போது ஒட்டுமொத்த உலகமும், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான ஓபெக் கூட்டமைப்பை சார்ந்து இயங்கி வருகிறது. ஆனால், ஹைட்ரஜன் வாயு பயன்பாட்டுக்கு வந்தால், இதுபோன்ற ஆதிக்கம் தகர்க்கப்பட்டு, புதிய சுந்திரமான, தன்னிறைவான சூழல் ஏற்படும். இதனால், உலகளாவிய உறவுகள் பலப்படும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Fuel Price, Fuel Price Increased

அடுத்த செய்தி