ஹோம் /நியூஸ் /Explainers /

குடும்ப வாழ்க்கை… பணி… தினம் தினம் சவால்களை எதிர்கொள்ளும் பெண்கள்! ஒரு பார்வை - Explainer

குடும்ப வாழ்க்கை… பணி… தினம் தினம் சவால்களை எதிர்கொள்ளும் பெண்கள்! ஒரு பார்வை - Explainer

நீங்கள் அலுவலகத்தில் அதிகப்படியான வேலை செய்திருந்தால், வீட்டிற்கு திரும்பி வரும்போது வீட்டு வேலைகளைச் செய்ய முடியாவிட்டால், தயங்காமல் உதவி கேளுங்கள்.

நீங்கள் அலுவலகத்தில் அதிகப்படியான வேலை செய்திருந்தால், வீட்டிற்கு திரும்பி வரும்போது வீட்டு வேலைகளைச் செய்ய முடியாவிட்டால், தயங்காமல் உதவி கேளுங்கள்.

நீங்கள் அலுவலகத்தில் அதிகப்படியான வேலை செய்திருந்தால், வீட்டிற்கு திரும்பி வரும்போது வீட்டு வேலைகளைச் செய்ய முடியாவிட்டால், தயங்காமல் உதவி கேளுங்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

வேலைக்கும் சென்று, குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளும் நிலையில் பல பெண்கள் உள்ளனர். இதனை எப்படி சரியாக பேலன்ஸ் செய்வது? என்ற குழப்பம் பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. பணிக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணும், ஒரு அதிசயப் பிறவி தான். ஏனென்றால், அவர்கள் இரண்டு வேறு வேறு வாழ்க்கைகளை வாழ்கின்றனர். அது அவ்வளவு சுலபமில்லை. உழைக்கும் அம்மாக்கள், தங்கள் வேலையில் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நேரத்தை செலவிடுகிறார்கள்.

அதன் பிறகு அவர்களின் குடும்பத்தை கவனித்துக்கொள்வது என்று அதற்கான நேரமும் உழைப்பும் வழங்குவது, அளவிட முடியாதது. பெரும்பாலும், பெண்கள் இந்த இரண்டு துருவங்களையும் சேர்த்து, சரியான முறையில் நிர்வகிக்க போராடுகிறார்கள். இவர்களின் கடின உழைப்பு, கடுமையான மன அழுத்தம் மற்றும் சோர்வு மற்றும் பட்டத்தைக் கூட உண்டாக்கலாம். இங்கு வேலை மற்றும் குடும்பத்துக்காக போராடும் அனைத்து அம்மாக்களுக்கும் உதவ, பெண்கள் தங்கள் வேலையையும் குடும்ப வாழ்க்கையையும் எப்படி எளிதாக பேலன்ஸ் செய்யலாம் என்பதற்கு சில வழிகள் இங்கே.

உங்கள் உடல்நலத்தை பராமரிக்கவும்:

சுவர் இருந்தால் சித்திரம் வரைய முடியும். அது போல, நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான், உங்களால் சரியாக வேலை செய்ய முடியும். எனவே, உங்கள் உடல் நலம் தான் உங்களின் முன்னுரிமை.

நீங்கள் உண்ணும் உணவுகள், தூக்கம், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை நீங்கள் உங்கள் அலுவலக வேலை மற்றும் குழந்தைகளை பார்த்துக்கொள்வதுடன் சேர்த்து, நிர்வகிக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் உடல்நலத்தைப் பராமரிக்கவில்லை என்றால், உடல் மற்றும் மன ரீதியாக நீங்கள் சொர்வடயைக் கூடும். எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாது.

உங்கள் கணவருடன் தெளிவாக உரையாடுங்கள்:

உங்களுக்கு அதிகமான வேலை பளு இருப்பதாக உணர்ந்தால் அல்லது குழந்தைகளை கொள்வதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், உங்கள் பிரச்சனைகளை உங்கள் கணவரிடம் தெளிவாகச் சொல்லுங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் அன்றாட சவால்கள் மற்றும் சிக்கல்களை பகிர்ந்து கொள்ளுங்கள், இதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால், சில சமயங்களில், நீங்கள் கணவரை நம்பி இருக்க வேண்டியிருக்கும். எனவே, அவர்களின் ஆதரவு உங்களுக்கு முதலில் தேவை.

உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்:

எப்போதெல்லாம் நீங்கள் அதிகபட்ச சோர்வாக அல்லது ஆற்றல் தீர்ந்தது போல உணர்கிறீர்களோ, உங்களுக்கு நீங்களே டிரீட் வைக்கவும். நீங்கள் தொடர்ந்து வேலை செய்ய முடியாது. தேவையான நேரத்தில் ஓய்வு எடுப்பது உங்கள் வேலையில் சிறப்பாக ஈடுபட முடியும். நல்ல இரவு உணவு, மேனிக்யூர், தியானம், ஆகியவற்றில் ஈடுபடலாம். அல்லது உங்களுக்கான செயல்களில் செய்வதற்காக நேரம் ஒதுக்கலாம். இது உங்கள் மனதையும் உடலையும் புத்துணர்ச்சியூட்டும்.

எல்லைகளின் வரையறை:

அலுவலக மற்றும் குடும்பப்பணிகள் அனைத்தையும் நீங்களே செய்து விட முடியாது. கூடுதல் நேரத்தை அலுவலகத்தில் செலவிடக் கூடாது என்பதில் எல்லை நிர்ணயிக்கவும். அதே போல, வீட்டிலும் நீங்களே அனைத்து வேலைகளையும் பார்க்கும் படியான சூழலைத் தவிர்க்கவும். இதற்கான எல்லைகளை வகுப்பது தான் நீங்கள் வீடு மற்றும் வேலையை பேலன்ஸ் செய்வதில் உதவும்.

Also Read | திருநம்பி, திருநங்கைகளுக்காக தமிழகத்தின் முதல் கட்டணமில்லா விடுதி! குவியும் பாராட்டு

நெகட்டிவிட்டியைத் தவிர்க்கவும்:

எதிர்மறை எண்ணங்கள் மற்றும் செயல்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களை சுற்றியுள்ளவர்கள் எப்போதுமே வீடு மட்டும் வேலையை எப்படி சமமாக நிர்வகிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டே இருந்தால், உங்களுக்கு கூடுதலாக அழுத்தம் ஏற்படும். உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் சிக்கல்களோடு இதுவும் கூடுதலான பிரச்சனையாக மாறும். எனவே, இது போல விமர்சிக்கும், அல்லது எதிர்மறையாகப் பேசும் யாரையும் தவிர்க்கவும்.

தேவைப்படும் போது உதவி கேளுங்கள்:

நீங்கள் அலுவலகத்தில் அதிகப்படியான வேலை செய்திருந்தால், வீட்டிற்கு திரும்பி வரும்போது வீட்டு வேலைகளைச் செய்ய முடியாவிட்டால், தயங்காமல் உதவி கேளுங்கள். இது உங்களை பலவீனமாகவோ அல்லது திறமை இல்லாதவராக மாற்றாது. மாறாக உங்கள் கணவர் மற்றும் குழந்தைகளுடன் செலவிட அதிக நேரம் கொடுக்கும். குறிப்பிட்ட நேரத்துக்கு குழந்தைகளைப் பராமரிக்க அதற்கான ஆட்களை அல்லது வீட்டுக்காப்பாளரை வைத்திருப்பது உங்களுக்குப் பல வகையில் உதவக்கூடும்.

Published by:Archana R
First published:

Tags: Explainer, Healthy Lifestyle, Women