ஆதார் கார்டு அறிமுகத்திற்கு முன், எல்லாமே வோட்டர் ஐடி கார்டு தான். இந்தியாவில், ரேஷன் கார்டு ஒரு முக்கியமான அடையாள அட்டையாக கருதப்பட்டாலும் கூட வோட்டர் ஐடி கார்டு தான் ஒருவரின் பிரதான தனிப்பட்ட அடையாள அட்டையாக திகழ்ந்தது. ஆனால் ஆதார் கார்டின் அறிமுகம் வோட்டர் ஐடி கார்டை சற்றே புறந்தள்ளியது. இருந்தாலும் ஒப்பிட்டு பார்த்தால், வாக்காளர் அடையாள அட்டை தான் முக்கியமானது, ஏனெனில் ஆதார் என்கிற அட்டையை அறிமுகம் செய்த ஆட்சியாளர்களை ஆட்சியில் உட்கார வைப்பதே இந்த வாக்காளர் அடையாள அட்டை தானே!
அப்படியான வாக்காளர் அடையாள அட்டையில் ஒரு குடிமகனின் முகவரி மற்றும் அவர் பதிவு செய்த தொகுதி போன்ற விவரங்கள் சரியாக இருப்பது மிகவும் அவசியம். ஏனெனில் தகுதியுடைய ஒரு வாக்காளர் பதிவு செய்யப்பட்ட தொகுதியில் இருந்து மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார். ஒருவேளை இதில் ஏதேனும் சிறு தவறு இருந்தாலும் கூட வாக்களிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
நீங்கள் சமீபத்தில் தான் ஒரு புதிய ஊருக்கு / நகரத்திற்கு சென்றுள்ளீர்கள் என்றால், அங்கு ஒரு வாக்காளராக உங்களை பதிவு செய்து வாக்களிக்க விரும்பினால், உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பழைய முகவரியை புதிய முகவரியை கொண்டு மாற்ற வேண்டும். மேலும் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க.. LIC pension: இனி நீங்களும் ஓய்வு காலத்தில் ரூ. 12,000 வரை பென்சன் வாங்கலாம்! எல்.ஐ.சி தரும் வாய்ப்பு
நீங்கள் ஆன்லைன் வழியாகவே உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள முகவரியை மாற்றலாம், இந்த இடத்தில் தேசிய வாக்காளர் சேவை இணையதளம் (National Voter Service Portal) உங்களுக்கு கைகொடுக்கும். அதெப்படி என்று யோசிக்கிறீர்களா? இதோ எங்களின் எளிய மற்றும் படிப்படியான வழிமுறைகளை பின்பற்றவும்:
01. ஏதாவது ஒரு
இண்டர்நெட் ப்ரவுஸரை பயன்படுத்தி https://www.nvsp.in/ என்கிற வலைத்தளத்திற்குள் லாக்-இன் செய்யவும்.
உங்களிடம் ஒரு அக்கவுண்ட் இல்லையென்றால், லாக்-இன் ஸ்க்ரீனின் கீழே உள்ள ரிஜிஸ்டர் நௌவ் என்கிற பட்டனைக் கிளிக் செய்யவும்.
02. லாக்-இன் செய்ததும், உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள முகவரியை மாற்ற ‘மைக்ரேஷன் டூ அனதர் பிளேஸ் (Migration to another place) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
பின்னர், உங்கள் வாக்காளர் அட்டையிலா அல்லது
குடும்பம் சார்ந்த திருத்தமா? எதில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும்.
இதையும் படிங்க.. State Bank வாடிக்கையாளர்கள் நோட் பண்ணிக்கோங்க.. அடுத்த மாதம் முதல் வர போகிறது அதிரடி மாற்றம்!
03. . உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் முகவரியை மாற்ற, ‘செல்ஃப்’ என்கிற விருப்பத்தைத் தேர்வு செய்யவும், இல்லையெனில் 'ஃபேமிலி' என்பதை தேர்வு செய்யவும்.
4. இப்போது, நீங்கள் உங்கள் தொகுதிக்குள் செல்கிறீர்களா அல்லது உங்கள் தொகுதிக்கு வெளியே செல்கிறீர்களா என்பதைத் தேர்வு செய்யவும்
5. அடுத்தாக திரையில் ஃபார்ம் 6 (Form 6) திறக்கப்படும்
அதில் நீங்கள் தற்போது இருக்கும் மாநிலம், முகவரி, தொகுதி மற்றும் பல விவரங்களை நிரப்ப வேண்டும். அதனுடன், உங்கள் தனிப்பட்ட தகவல், அஞ்சல் முகவரி, நிரந்தர முகவரி போன்றவற்றையும் உள்ளிடுமாறும் கேட்கப்படுவீர்கள்.
6. அனைத்தும் நிரப்பப்பட்டவுடன், உங்கள் புகைப்படத்தை உங்கள் முகவரி மற்றும் வயதுச் சான்றுடன் பதிவேற்றவும்.
ஃபார்ம் 6-இன் இறுதியில் செல்ஃப் டிக்ளரேஷனை நிரப்பவும், பின்னர் காணப்படும் கேப்ட்சாவை உள்ளிட்டு கோரிக்கையை சமர்ப்பிக்கவும்
கோரிக்கையைச் சமர்ப்பித்த பிறகு, நீங்கள் அதற்கான உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள், கோரப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டவுடன், உங்கள் தற்போதைய முகவரியுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.