Home /News /explainers /

சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி - முன்பதிவு செய்வது எப்படி?

சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி - முன்பதிவு செய்வது எப்படி?

சிறார்களுக்கான தடுப்பூசி

சிறார்களுக்கான தடுப்பூசி

Corona Vaccine | 12 வயது முதல் 15 வயது பிரிவினருக்கு கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில், அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை புதன்கிழமை (மார்ச் 16) முதல் தொடங்கியுள்ளது.

    கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக படிப்படியாக மருத்துவ ரீதியான போராட்டத்தை நம் நாடு நடத்தி வருகிறது. தொடக்கத்தில் பெரியவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் நடுத்தர வயது உடைய மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஏறக்குறைய வெற்றிகரமாக நிறைவடைந்து விட்டன. ஆனால், இந்த வயதுப் பிரிவினருக்கு கோவேக்ஸின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டது.

    இதற்கிடையே, பெரியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் 12 வயது முதல் 15 வயது பிரிவினருக்கு கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில், அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை புதன்கிழமை (மார்ச் 16) முதல் தொடங்கியுள்ளது.

    இந்த இளம் குழந்தைகளுக்கு ‘கோர்ப்வேக்ஸ்’ என்ற தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இது, புரதம் நிறைந்த துணைப் பிரிவு தடுப்பூசி ஆகும். முன்னதாக, 12 வயது முதல் 18 வயதினருக்கு கோர்ப்வேக்ஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு இந்திய மருந்து ஒழுங்காற்று ஆணையத்திடம் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி ஒப்புதல் பெறப்பட்டது. இந்த தடுப்பூசி இரண்டு டோஸ்களை கொண்டது. கோ-வேக்ஸின் ஊசியைப் போலவே இந்த ஊசியும் 28 நாள் இடைவெளியில் செலுத்தப்படுகிறது.

    Also Read : சோனியாவின் விருப்பப்படி காங்., தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன்: நவ்ஜோத் சிங் சித்து

    குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்வது எப்படி

    • ஆரோக்கிய சேது ஆப் மூலமாக கோவின் இணையதளத்திற்கு செல்லவும்.

    • குழந்தையின் பெற்றோர்களில் ஒருவரது மொபைல் எண் அல்லது உங்களிடம் உள்ள ஒரு மொபைல் எண் மூலமாக பதிவு செய்யவும்.

    • ஓடிபி பெற கிளிக் செய்து, அந்த ஓடிபி-யை கொடுத்து வெரிஃபை செய்யவும்.

    • கோ-வின் ஹோம் பேஜ் பக்கத்தில் ‘நியூ’ என்ற பிரிவின் கீழ் குழந்தையின் அடையாள அட்டை நகலை சமர்ப்பிக்கவும்.

    • குழந்தையின் ஆதார் அட்டை அல்லது 10ஆம் வகுப்பு அடையாள அட்டை ஆகியவற்றின் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

    • உங்களுக்கு அருகாமையில் உள்ள தடுப்பூசி மையத்தில், எப்போது எந்த நேரத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நேரத்தை தேர்வு செய்து முன்பதிவு செய்யவும்.

    • முன்பதிவு செய்து கொண்ட சமயத்தில் தவறாமல் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும்.


    • எந்த அளவுக்கு வீரியம் உள்ளது

      கோர்ப்வேக்ஸ் தடுப்பூசியானது, ஒரிஜினல் வூகாண் மாகாண கொரோனா வைரஸிற்கு எதிராக 90 சதவீத எதிர்ப்புத் திறன் கொண்டது. சமீபத்திய திரிபு வடிவமான டெல்டா வேரியண்ட்க்கு எதிராக 80 சதவீத எதிர்ப்புத் திறன் உடையது. ஒமைக்ரான் வைரஸுக்கு எதிராக இது எந்த அளவுக்கு போராடுகிறது என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

       
    Published by:Vijay R
    First published:

    Tags: Corona Vaccine, CoronaVirus

    அடுத்த செய்தி