தமிழக அரசியலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஏற்றமும்... இறக்கமும்...

தமிழக அரசியலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஏற்றமும்... இறக்கமும்...

கம்யூனிஸ்ட் கட்சி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்களிப்பு என்ன என்பது பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

 • Share this:
  1952ல் இருந்து தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடையாமல் ஒரே கட்சியாக இருந்தது. அந்த சூழலில் 1952ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், 131 இடங்களில் போட்டியிட்டு, 62 இடங்களை கம்யூனிஸ்ட் கட்சி வென்றது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு பிறகு, எண்ணிக்கையின் அடிப்படையில் இரண்டாவது பெரிய கட்சியாகவும் இந்திய கம்யூனிஸ்ட் விளங்கியது.

  1957ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 55 இடங்களில் போட்டியிட்டு வெறும் 4 இடங்களில் மட்டும் வெற்றிபெற்றது. அதன்பின்னர் 1962 தேர்தலில், 68 தொகுதிகளில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெறும் 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. 1967ம் ஆண்டு தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருபிரிவினர், மார்க்சிஸ்ட் கட்சியை தொடங்கி தேர்தல் களத்தில் போட்டியிட்டனர்.

  அப்போதைய தேர்தலில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் 13 எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்பிறகு 1971ல் 8 உறுப்பினர்களும், 1977ல் 17 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து 1980ம் ஆண்டு தேர்தலில் 20 எம்.எல்.ஏ.க்களையும், 84 தேர்தலில் 7 எம்.எல்.ஏ.க்களையும் இடதுசாரி கட்சிகள் பேரவைக்கு அனுப்பி வைத்தன.

  1989ல் இடதுசாரி கட்சிகள் 18 இடங்களில் வெற்றிபெற்றன. 1991ல் நடைபெற்ற தேர்தலில், வெறும் 2 இடங்கள் மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கிடைத்தன. 1996ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் 9 எம்.எல்.ஏ.க்கள் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் வெற்றிபெற்றனர்.

  மேலும் படிக்க... திருச்சி: திமுகவின் பிரமாண்ட பொதுக்கூட்டம்

  பிறகு 2001ம் ஆண்டு 11 உறுப்பினர்களும், 2006ம் ஆண்டு 15 இடதுசாரி உறுப்பினர்களும் பேரவைக்கு தேர்வாகினர். அதன்பின்னர் 2011ம் ஆண்டு, அதிமுக கூட்டணியில் 19 இடங்களை வென்றிருந்த இடதுசாரிகள், 2016ம் ஆண்டு, வரலாற்றில் முதல்முறையாக மக்கள் நலக்கூட்டணி சார்பில் களமிறங்கி, ஒரு எம்.எல்.ஏவை கூட பேரவைக்கு அனுப்ப முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: