Home /News /explainers /

Delhi model school : டெல்லி 'மாதிரி பள்ளி' என்றால் என்ன? தமிழகத்திற்கு அது பலனளிக்குமா?

Delhi model school : டெல்லி 'மாதிரி பள்ளி' என்றால் என்ன? தமிழகத்திற்கு அது பலனளிக்குமா?

செலவீனங்களை அதிகப்படுத்துவதன் மூலம் அரசுப் பள்ளிகளின் மீதான நம்பிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

செலவீனங்களை அதிகப்படுத்துவதன் மூலம் அரசுப் பள்ளிகளின் மீதான நம்பிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

செலவீனங்களை அதிகப்படுத்துவதன் மூலம் அரசுப் பள்ளிகளின் மீதான நம்பிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Delhi model school : நான்கு நாள் சுற்றுப் பயணமாக டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி அரசு மாதிரி பள்ளியைப் பார்வையிட்டார். பின்பு, தமிழகத்திலும் இதேபோன்ற பள்ளிகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

டெல்லியின் அரசுப் பள்ளி மற்றும் சுகாதார நிலையத்தை பார்வையிட்ட தமிழக முதலைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், "நாம் ஒவ்வொருவரும் மற்றவருடைய நல்ல, எண்ணங்களையும், கருத்துக்களையும் கற்றுக் கொண்டால் மட்டுமே இந்த நாடு முன்னேற முடியும்" என்று தெரிவித்தார்.

தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு, பலர் ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தாலும் கல்வியாளர்கள் சிலர் தீவிர விமர்சங்களையும் முன்வைக்கின்றனர். எனவே, டெல்லி மாதிரி பள்ளி என்றால் என்ன?  அதன் சாதக பாதகங்கள் என்னவென்பதை இங்கே காண்போம்.

முன்மாதிரி பள்ளிகள் என்றால் என்ன? 

தேசிய தலைநகர் டெல்லியில் 1000க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் உள்ளன. இதில், 54 பள்ளிகளை முன்மாதிரியாக மாற்றி அமைத்திட டெல்லி அரசாங்கம் கடந்த 2015ம் ஆண்டு முடிவெடுத்தது. ப்ரொஜக்டர்கள், ஸ்மார்ட் போர்டுகள், லேப்டாப்கள் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறைகள், நீச்சல்குளம், உள்விளையாட்டு அரங்கம், தூய்மையான நவீன கழிப்பறை வசதிகள்  போன்ற சகல வசதிகளும் இதில் அடங்கும்.நிலம் பற்றாக்குறை காரணமாக தற்போது வரை 30 முன்மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் , இந்த பள்ளிகளில் 8000க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது, தவிர நூற்றுக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை மறுசீரமைக்கும் பணியை டெல்லி அரசு துரிதப்படுத்தி வருகிறது.

உள்கட்டமைப்பு வசதிகளைத் தாண்டி, ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஆசிரியர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள பல்வேறு வாய்ப்புகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கும், மேம்பாட்டு சீர்மிகு மையங்களுக்கும் அழைத்து செல்லப்பட்டனர். சக ஆசிரியரகளின் உதவியுடன்  தங்களது  பிரச்சனைகளையும்/ சவால்களை சரிச்செயுவும் தன்னம்பிக்கைகளை புதுபிக்கவும் ஏற்ற சூழல்கள் உருவாக்கப்பட்டன.

அடுத்ததாக, பள்ளி மேலாண்மை குழுவுக்கு டெல்லி அரசாங்கம் அதிகமான முக்கியத்துவம் கொடுத்தது. டெல்லி கல்வி சீர்திருத்தத்தின் மைய நாடியாக இது விளங்கியது. கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009ன் கீழ், பள்ளியின் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காக அந்தந்த பள்ளிகளில் இந்த பள்ளி மேலாண்மை குழு செயல்பட்டு வருகிறது. டெல்லி அரசாங்காம் ஓவ்வொரு குழுவுக்கும் 5 முதல் 6 லட்ச ரூபாய் வரை நிதி ஒதுக்கியதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  மாணவர்களிடையே காணப்படும் பலதரப்பட்ட தேவைகளை விவாதிக்கும் தளமாக இது செயல்படத் தொடங்கியது. பெரிய அளவில்  பெற்றோர்- ஆசிரியர் சங்கக் கூட்டம் நடத்தப்பட்டது. 

அத்தோடு நின்றுவிடாமல், தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயம் செய்தது. அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட கூடுதலாக  வசூலிக்கப்படால் இருப்பதையும் உறுதி செய்தது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை டெல்லியை விட 7 மடங்கு அதிகம் என்று கணக்கிடப்படுகிறது. தனிநபர் வேறுபாடு, பிராந்திய வேறுபாடு, சமூக வேற்றுமை, அரசியல் அதிகாரம், வரலாற்று காரணங்கள் ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல்  டெல்லியுடன், தமிழ்நாட்டை ஒப்பிடுவது தவறான முன்னுதாரணமாகும்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.1.42 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்!

தமிழ்நாட்டில் மொத்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 37,431 ஆக உள்ளன. இதில் 20,00க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லையென சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், பள்ளிக் கல்விக்கான தமிழக அரசு செலவினங்கள் குறைந்து வருகிறது. மாநிலத்தின்  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசின் பள்ளிக்கல்வி செலவினத்தின் பங்கு 2.0% (2014-15) ஆக இருந்து 1.8% (2017-18) ஆக குறைந்திருக்கிறது. டெல்லியில் இந்த எண்ணிகை 25% ஆக உள்ளது.

ஒட்டுமொத்த பள்ளிகளுக்கான செலவீனங்களில் 79% ஆசிரியர் ஊதியங்களுக்கு மட்டுமே செலவாகிறது. பள்ளி கட்டமைப்புகளுக்கு ஒதுக்கப்படும் நிதி வெறும் 3% மட்டுமே                நன்றி: accountability india


எனவே, தமிழகத்தில் பணப்பற்றக்குறை என்பது ஒரு பெரிய பிரச்சனையாகவே உள்ளது என்பது புரிய வருகிறது. செலவீனங்களை அதிகப்படுத்துவதன் மூலம்  அரசுப்பள்ளிகளின் மீதான நம்பிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதையும் தாண்டி, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பற்றாக்குறை, பெற்றோர்களின் இயலாத நிலை, அதிகாரமில்லாத ஊரக உள்ளாட்சி  அமைப்புகள்,  வெளிப்படையான தரவுகள் இல்லாமை ஆகிய  பொதுவான பிரச்சனைகளிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், டெல்லி மாடலை அப்படியே நகல் எடுக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.
Published by:Salanraj R
First published:

Tags: Arvind Kejriwal, Delhi, Govt School, MK Stalin

அடுத்த செய்தி