இந்திய குடிமகன்களுக்கு யுஐடிஏஐ அமைப்பு வழங்கும் 12 இலக்க அடையாள எண் தான் ஆதார் அட்டை ஆகும். இன்றைய நாளில் இந்தியாவில் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக இது மாறியுள்ளது. வங்கியில் கணக்கு தொடங்குவது முதல் அரசின் நலத்திட்டங்கள் பெறுவது வரையில் எண்ணற்ற சேவைகளுக்கு ஆதார் கார்டு அவசியமானது.
அதாவது, நம் கையில் எப்போதுமே ஆதார் கார்டு இருப்பது அவசியம் என்ற சூழல் உருவாகியுள்ளது. அதே சமயம், ஆதார் கார்டை மையமாக வைத்து சில மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாஸ்க்டு ஆதார் என்றொரு ஆப்சனை வழங்குகிறது யுஐடிஏஐ அமைப்பு. இந்த அட்டையில் உங்களது 12 இலக்க ஆதார் எண் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். உங்களைப் பற்றிய தனித் தகவல்கள் எதுவுமே அதில் இடம்பெறாது.
மாஸ்க்டு ஆதார் என்றால் என்ன?
நீங்கள் டவுன்லோடு செய்து வைத்துள்ள ஆதார் நம்பரில் நீங்கள் மாஸ்க் செய்து கொள்வதற்கான ஆப்சன் அளிக்கப்படுகிறது. அதாவது உங்கள் ஆதார் எண்ணின் முதல் 8 நம்பர்கள் XXXX-XXXX என்று இருக்கும். எஞ்சியுள்ள 4 இலக்கம் மட்டுமே தெரியும்படி இருக்கும்.
மாஸ்க்டு ஆதார் நம்பரை நீங்கள் இ-கேஒய்சி பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் இங்கு முழுமையான ஆதார் எண் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்த கார்டில் உங்கள் ஆதார் அடையாளத்தின் கடைசி 4 இலக்கங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும்.
பொதுமக்கள் அனைவரும் https://eaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று மாஸ்க்டு ஆதார் கார்டு டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்று யுஐடிஏஐ அமைப்பு தெரிவித்துள்ளது.
Masked Aadhaar can be used for eKYC where sharing Aadhaar Number is not necessary. It only shows the last 4 digits of your Aadhaar. Select 'Masked Aadhaar' option while downloading your Aadhaar from: https://t.co/IEWFdrHhVN #AadhaarOnlineServices pic.twitter.com/OTqdpQUJTo
— Aadhaar (@UIDAI) November 9, 2018
மாஸ்க்டு ஆதார் டவுன்லோடு செய்வது எப்படி?
* முதலில் https://eaadhaar.uidai.gov.in/ என்ற லிங்க்-ஐ ஓப்பன் செய்யவும்.
லாகின் என்பதை கிளிக் செய்யவும்.
* உங்கள் 12 இலக்க ஆதார் எண்-ஐ உள்ளிடவும். அதில் காண்பிக்கப்படும் கேப்சா கோடு என்ன என்பதை குறிப்பிடவும். பின்னர், ஓடிபி பெற்று, * அந்த எண்-ஐயும் குறிப்பிடவும்.
* ஓடிபி மூலம் லாகின் செய்த பிறகு, “I Want a Masked Aadhar’ என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
* இப்போது உங்களுக்கான இ-ஆதார் காப்பி ஒன்றை டவுன்லோடு செய்யவும்.
இப்போது உங்களுக்கான மாஸ்க்டு ஆதார் கார்டு பிடிஎஃப் வடிவில் டவுன்லோடு ஆகிவிடும். இந்த ஆவணம் பாஸ்வேர்டு பாதுகாப்பு கொண்டதாகும். இதைத் திறப்பதற்கு உங்கள் பெயரின் முதல் 4 எழுத்துகளை கேபிடல் லெட்டரிலும், அதைத் தொடர்ந்து நீங்கள் பிறந்த வருடத்தையும் குறிப்பிட வேண்டும். உதாரணத்திற்கு உங்கள் பெயர் கார்த்திக் மற்றும் பிறந்த வருடம் 1995 என்றால், உங்களுக்கான பாஸ்வேர்டு KART1995 ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadhaar card, Aadhar