ஓபன் மார்க்கெட்டில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் ஆதார் கார்டு காப்பிகளை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அதிகாரப்பூர்வ Aadhaar PVC Card-களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதார் பிவிசி கார்டு என்பது UIDAI-ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதாரின் சமீபத்திய வடிவமாகும். தற்போதைய நிலையில் பல செயல்பாடுகளில் ஆதார் முக்கிய பங்கு வகிப்பதால் பல சந்தர்ப்பங்களில் அவற்றை வெளியில் செல்லும் போது சிரமம் ஏற்படுகிறது.
எனவே மக்கள் தங்கள் கைகளில் எடுத்து செல்ல எளிதாக இருக்கும் வகையிலும், நீண்ட நாட்கள் உழைக்கும் வகையிலும் ஆதார் பிவிசி கார்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. PVC அடிப்படையிலான ஆதார் கார்டானது டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட பாதுகாப்பான QR கோடுடன் ஃபோட்டோ மற்றும் முகவரி உள்ளிட்ட தேவையான உரிய விவரங்களுடன் பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. எளிமையாக சொன்னால் பேங்க் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போல ஆதார் பிவிசி கார்டு என்பது பிளாஸ்டிக் அட்டையில் வரும் ஆதார் கார்டு ஆகும்.
இதையும் படிங்க.. PAN card : ஆதார் நம்பர் இருந்தால் மட்டும் போதும்.. 10 நிமிடத்தில் பான் கார்டு பெறலாம் தெரியுமா?
நாம் ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளை எப்படி பாக்கெட்டில் வைத்து எளிதாக எடுத்து செல்கிறோமோ அதே போல இந்த ஆதார் பிவிசி கார்டை எடுத்து கொண்டு போகலாம். ஆதார் வழங்கும் ஏஜென்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து Aadhaar PVC Card-ஐ ஆர்டர் செய்யலாம். சுருக்கமாக சொன்னால் UIDAI வழங்கும் Aadhaar PVC என்பது கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய அடையாள ஆவணத்தின் ஒரு வெர்ஷன் ஆகும்.
இதையும் படிங்க.. RBL வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா? அனைத்து வட்டி விகிதங்களும் மாறிடுச்சு!
ரிஜிஸ்டர்ட் செய்யப்பட்ட
மொபைல் நம்பருக்கு பதிலாக எந்த மொபைல் எண்ணிலும் OTP-ஐ பெறுவதன் மூலம் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் இந்த Aadhaar PVC Card-ற்கான அங்கீகார செயல்முறையை செய்ய UIDAI அனுமதித்துள்ளது. இதன் மூலம் உங்கள் ஆதாரில் ரிஜிஸ்டர்ட் செய்யப்பட்ட மொபைல் நம்பரை பொருட்படுத்தாமல், அங்கீகாரத்திற்காக OTP-ஐ பெற வேறு எந்த மொபைல் நம்பரையும் நீங்கள் பயன்படுத்தலாம். எனவே ஒருவர் தனது முழு குடும்பத்திற்கும் ஆன்லைனில் ஆதார் Aadhaar PVC கார்டுகளை ஆர்டர் செய்யலாம்.
uidai.gov.in மற்றும் Residence.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்கள் வழியாக ஆதார் PVC கார்டை நீங்கள் ஆர்டர் செய்யலாம். ஒரு
ஆதார் பிவிசி-க்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்டர் செய்யும் கார்டுதாரர்களுக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் அவர்களது முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
கீழ்காணும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றி UIDAI இலிருந்து ஆதார் PVC கார்டை ஆர்டர் செய்யுங்கள்:
* www.uidai.gov.in அல்லது www.resident.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்களுக்கு செல்லவும்.
* Order Aadhaar Card என்பதை தேர்வு செய்யவும்.
* உங்கள் 12 டிஜிட் ஆதார் கார்டு (UID) நம்பர் அல்லது 16 டிஜிட் விரிச்சுல் ஐடி நம்பர் (VID) அல்லது 28 டிஜிட் ஆதார் என்ரோல்மெண்ட் நம்பரை என்டர் செய்யவும்.
* 'TOTP' ஆப்ஷனுடன் டைம்-பேஸ்டு OTP-ஐ பெறுவதன் மூலம் செக்யூரிட்டி வெரிஃபிகேஷன் ப்ராஸசை முடிக்கவும் அல்லது 'OTP' ஆப்ஷனை பயன்படுத்தி ஒன்-டைம் பாஸ்வேர்டை பெறவும்.
* Terms and Conditions-இ ஏற்று கொள்ளவும்.
* TOTP அல்லது OTP-ஐ சப்மிட் செய்யவும்.
* உங்கள் ஆதார் விவரங்களை ரிவ்யூ செய்து பிரின்டிங்கிற்கான ஆர்டரை உறுதிப்படுத்தவும்.
* கிரெடிட், டெபிட் கார்டு, யுபிஐ அல்லது நெட் பேங்கிங் மூலம் ரூ.50 செலுத்துங்கள்.
* ஸ்கிரீனில் டிஜிட்டல் கையொப்பத்துடன் கூடிய ரசீதை பெறுவீர்கள். service request நம்பர் SMS மூலம் அனுப்பப்படும்.
* இறுதியாக ஆதார் பிவிசி ஆர்டர் ரசீதை டவுன்லோட் செய்து சேவ் செய்து வைத்து கொள்ளவும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.