ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

uidai: ஆதாரில் உங்களுக்கு இவ்வளவு பிரச்சனைகள் இருக்கா? இதை உடனே செய்யுங்கள்!

uidai: ஆதாரில் உங்களுக்கு இவ்வளவு பிரச்சனைகள் இருக்கா? இதை உடனே செய்யுங்கள்!

ஆதார்

ஆதார்

uidai : ஆதாரில் இருக்கும் அனைத்து பிரச்சினைக்கும் ஒரே போன் காலில் தீர்வு காணலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்திய குடிமக்கள் அனைவரிடமும் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஆவணம் ஆதார் கார்டு. இது ஒவ்வொரு அதிகாரபூர்வ மற்றும் வங்கி தொடர்பான பணிகளுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. அனைத்து அரசு மற்றும் நிதி தொடர்பான பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் கட்டாயம்.  ஆதார் கார்டை எப்போதும் பர்ஸில் வைத்துக் கொள்ள வேண்டிய சூழலில் தான் நாம் இருக்கிறோம். ஒரு தனிநபரின் அடையாள அட்டையாக ஆதார் கார்டு மட்டுமே எல்லா இடங்களிலும் செல்லுபடியாகிறது.

  இவ்வளவு முக்கியமான ஆவணத்தில் இருக்கும் தகவல்களை சரியாக வைத்து கொள்வது நம்முடைய கடமை பெயர், பாலினம், முகவரி, மொபைல் எண், வயது என அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களையும் சரியாக எந்த பிழையும் இல்லாமல் வைத்திருக்க வேண்டும். ஒருவேளை மாற்றங்கள், திருத்தங்கள், அப்டேட்கள் தேவைப்பட்டால் உடனே அதை ஆதார் சேவை மையத்திற்கு சென்று சரி செய்து கொள்ள வேண்டும். அதை தவிர ஆதார் கார்டு குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் கேள்விகள் இருந்தால் அதை வீட்டில் இருந்தப்படி தெரிந்து கொள்ளலாம் எப்படி தெரியுமா?

  1947 என்ற இலவச எண்ணை டயல் செய்வதன் மூலம் ஆதாரில் இருக்கும் அனைத்து பிரச்சினைக்கும் ஒரே போன் காலில் தீர்வு காணலாம். 12 வெவ்வேறு மொழிகளில் இது செயல்பாட்டில் இருப்பது கூடுதல் அம்சமாகும். ஆதார் ஹெல்ப்லைன் 1947 இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பெங்காலி, அஸ்ஸாமி மற்றும் உருது ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.இந்த சேவை வாரத்தில் 7 நாட்களும் IVRS பயன்முறையில் செயல்பாட்டில் இருக்கும்.

  திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்பு மையப் பிரதிநிதிகள் உள்ளனர். அதே போல், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பிரதிநிதிகள் இருப்பார்கள். அவர்களை தொட்ர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Aadhar